என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இணையத்தில் லீக் ஆன விவரங்கள்... வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ V60 சீரிஸ்
    X

    இணையத்தில் லீக் ஆன விவரங்கள்... வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ V60 சீரிஸ்

    • ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
    • வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    விவோ V60 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மலேசியாவின் SIRIM சான்றிதழ் வலைத்தளத்திலும் TUV SUD தளத்திலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன.

    இவை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ V50 மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30 போன்ற வன்பொருள் அம்சங்களுடன் இது அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

    இதுவரை அறிவிக்கப்படாத விவோ V60, SIRIM மற்றும் TUV வலைத்தளங்களில் V2511 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளதாக Xpertpick தெரிவித்துள்ளது . SIRIM சான்றிதழ் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது, அதே நேரத்தில் TUV பட்டியல் 90W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கிறது.

    இந்த சான்றிதழ் வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் தோற்றம், விவோ V60 விரைவில் ஆசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அதன் வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    கடந்த டிசம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகமான விவோ S20-இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ V50 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையை பின்பற்றி, வரவிருக்கும் விவோ V60 ஸ்மார்ட்போன் மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    விவோ S30 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் 1.5K (1,260×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸரில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது.

    Next Story
    ×