என் மலர்
நீங்கள் தேடியது "மொபைல் போன்"
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலியால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளது
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள். நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலியால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அனைத்து போன்களிலும் சஞ்சார் சாத்தி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது" என்று தெரிவித்தார்.
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும்
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பது பொதுமக்களுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
- ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
- ஸ்மார்ட்போன் சைபர் சில்வர், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.
போக்கோ F7 5G இந்தியாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 6,000mm sq வேப்பர் கூலிங் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டிருக்கிறது.
போக்கோ F7 5G அம்சங்கள்:
போக்கோ F7 5G ஸ்மாரட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.83-இன்ச் 1.5K (1,280x2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் HDR10+ சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைப் பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி வரை LPDDR5X ரேம், 512 ஜிபி வரை UFS4.1 மெமரி, ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் உள்ளது. போக்கோ F7 5G ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் வருகிறது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் பெறும் என்று சியோமி உறுதியளித்துள்ளது.
இத்துடன் கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் (Circle to Search) உள்ளிட்ட பல AI அம்சங்களையும், AI நோட்ஸ், AI இன்டர்ப்ரெட்டர், AI இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், AI இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல அம்சங்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
கேமராவை பொருத்தவரை, போக்கோ F7 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
போக்கோ F7 5G இன் இந்திய வெர்ஷன் 7,550mAh பேட்டரி, 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, GPS, NFC மற்றும் ஒரு USB டைப்- சி போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.
விலை விவரங்கள்:
இந்தியாவில் போக்கோ F7 5G ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,999 இல் தொடங்குகிறது. இதன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சைபர் சில்வர், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.
- ஸ்பீக்கர்களைத் தவிர, பிக்சல் 10 சீரிஸ் முழுமையாக மேம்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிசை கூகுள் நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு, கூகுள் நிறுவனம் பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ XL மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு ஆகியவற்றை வழக்கமான பிக்சல் 10 மாடலுடன் சேர்த்து அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
எனினும், வரவிருக்கும் பிக்சல் 10 ஸ்மார்ட்போன்கள் மேம்பட்ட ஒலிபெருக்கி செயல்திறனை வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வரவிருக்கும் சீரிஸ் புதிய டென்சார் ஜி5 சிப்செட்டில் இயங்கும் என்று தெரிகிறது. பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களுடன் வரும் என்று ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய சீரிஸ் "ஒரு பிக்சலில் இதுவரை இல்லாத சிறந்த ஆடியோ தரத்தைக் கொண்டுள்ளது" என்று கூறப்படுகிறது. பிக்சல் போன்களில் எப்போதும் நல்ல ஸ்பீக்கர்கள் உள்ளன, ஆனால் சிறந்தவை அல்ல.
இருப்பினும், பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் அதிலிருந்து விலகிச் செல்வதால், புதிய பிக்சல் 10 போன்களில் கூகுள் டால்பி அட்மோஸ் ஆதரவைச் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, கேலக்ஸி எஸ்25 சீரிஸ் டால்பி அட்மோஸ் வழங்கும் சில போன்களில் ஒன்றாகும்.
ஸ்பீக்கர்களைத் தவிர, பிக்சல் 10 சீரிஸ் முழுமையாக மேம்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரிஸ் கிம்பல்-லெவல் OIS (இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் மேக்னடிக் பவர் ப்ரொஃபைல் (MPP) தரத்துடன் கூடிய Qi 2.2 வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது. புதிய போன்களுடன் 'பிக்சல்-ஸ்னாப்' சீரிஸ் ஆக்சஸரீயும் கூகுள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் அதே நாளில் தொடங்கலாம், மேலும் அவை ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஐரிஸ், லிமோன்செல்லோ, மிட்நைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ நிறங்களில் வெளியிடப்படலாம். பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ XL மாடல்கள் லைட் போர்சிலைன், மிட்நைட், ஸ்மோக்கி கிரீன் மற்றும் ஸ்டெர்லிங் கிரே நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஸ்மோக்கி கிரீன் மற்றும் ஸ்டெர்லிங் கிரே வண்ணங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் சிம் ட்ரே ஆகியவை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புற பேனலின் மேல் இடது புற மூலையில் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சியோமி 15 சீரிஸ்-இன் மேம்பட்ட வெர்ஷனாக சியோமி 16 சீரிஸ் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.
அந்ச வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் CAD ரெண்டர் புதிய ஸ்மார்ட்போன் வடிவமைப்பைக் குறிக்கிறது. கசிந்த ரெண்டரில் சியோமி 16 மூன்று பின்புற கேமரா சிஸ்டத்துடன் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய மாடலை போலவே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
டிசைனை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் சியோமி 15 மாடலுடன் ஓரளவு ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இதில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புற பேனலின் மேல் இடது புற மூலையில் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. கேமரா பிரிவில் மூன்று சென்சார்கள், ஒரு LED ஃபிளாஷ் மற்றும் லைக்கா பிராண்டிங் காணப்படுகிறது. இத்துடன் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் இந்த மாடல் டூயல் டோன் டிசைன் கொண்டிருக்கும் என்றும் சற்று வட்டமான விளிம்புகள் மற்றும் அனைத்து பக்கங்களிலும் குறுகிய பெசல்களை கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் சிம் ட்ரே ஆகியவை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய சியோமி 16 ஸ்மார்ட்போன் சியோமி 16 Pro உடன் செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டுடன் வரும் முதல் போன்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் ஸ்னாப்டிராகன் நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் குவால்காம் நிறுவனம் இந்த பிராசஸரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி 16 ஸ்மார்ட்போனில் 6.32-இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்களை கொண்டிருக்கலாம்.
ஏற்கனவே வெளியான தகவலின்படி, சியோமி 16 இன் பேட்டரி திறன் சுமார் 7000mAh ஆக இருக்கும். சியோமி 16 மற்றும் சியோமி 16 Pro மாடலில் சமீபத்திய சிலிக்கான்-கார்பன் (Si/C) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- IP65-தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
- ஸ்மார்ட்போன் 100W PPS மற்றும் USB-PD சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது.
ஐகூ நியோ 10 Pro+ சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூவின் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. ஐகூ நியோ 10 Pro+ மூன்று வண்ணங்களில் வருகிறது. மேலும் 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.82-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. ஐகூ நியோ 10 Pro+ 50MP இரட்டை பின்புற கேமரா சென்சார்கள் உள்ள. மேலும் 120W அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ விலை
ஐகூ நியோ 10 Pro+ 12GB RAM + 256GB மெமரி மாடல் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 35,500) இல் இருந்து தொடங்குகிறது. இதன் 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB, மற்றும் 16GB+1TB மெமரி மாடல்களின் விலை முறையே CNY 3,499 (இந்திய மதிப்பில் ரூ. 41,500), CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ. 39,000), CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ. 43,000) மற்றும் CNY 4,199 (இந்திய மதிப்பில் ரூ. 50,000) ஆகும்.
ஐகூ நியோ 10 Pro+ தற்போது சீனா பிளாக் ஷேடோ, சி குவாங் ஒயிட் மற்றும் சூப்பர் பிக்சல் (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ணங்களில் கிடைக்கிறது .
ஐகூ நியோ 10 ப்ரோ+ அம்சங்கள்
இரட்டை சிம் (நானோ) ஐகூ நியோ 10 Pro+ ஆனது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் 2K (1440x3168 பிக்சல்) 8T LTPO AMOLED டிஸ்ப்ளே,144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிபாகன் 8 எலைட் சிப்செட், அட்ரினோ 830 GPU உடன் இணைந்து, 16GB வரை LPDDR5X RAM, அதிகபட்சம் 1TB UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க, ஐகூ நியோ 10 Pro+ இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா மற்றும்8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 16MP CMOS சென்சார் கொண்டுள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ இல் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, GLONASS, GALILEO, BeiDou, NFC, GNSS, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது IP65-தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
ஐகூ நியோ 10 Pro+ ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் 25 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 70 சதவீதம் வரை நிரப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 100W PPS மற்றும் USB-PD சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது. இது 163.79x76.60x8.20mm அளவையும் சுமார் 217 கிராம் எடையும் கொண்டது.
- மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
- புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
மொபல் போன்களின் பிரியர்களுக்காக நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பலவிதமான மாடல்களில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா 1 VII-ஐ வருகிற 15-ந்தேதி அறிமுகப்படுத்துகிறது.
சோனி எக்ஸ்பீரியா 1 VII கருப்பு, பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த மாடலில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் செல்ஃபி கேமரா மேல்பக்க பெசலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
மேலும், சோனியின் பிராவியா தொழில்நுட்பத்துடன் கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் 5,000mAh பேட்டரி இருக்கும் என்றும் இரண்டு நாட்கள் வரை பேட்டரி சார்ஜ் வழங்கும் என கூறுகின்றனர்.
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கில் புது மொபைல் போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய நோக்கியா 2780 ப்ளிப் மாடல் பழைய நோக்கியா மொபைல் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபில் போன் கிடையாது. மாறாக நோக்கியாவின் பழைய பானியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் போன் ஆகும்.
புதிய நோக்கியா 2780 ப்ளிப் போனில் 2.7 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.77 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5MP கேமரா, பிக்சட் போக்கஸ் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனில் குவாட் கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட், X5 எல்டிஇ மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 150Mbps டவுன்லோட் வேகத்திற்கான சப்போர்ட் வழங்குகிறது.

நோக்கியா 2780 ப்ளிப் போன் 4ஜி அழைப்புகளுக்கான சப்போர்ட், ரியல் டைம் டெக்ஸ்டிங், வோல்ட்இ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512MB ரேம், கைஒஎஸ் 3.1, எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட் எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட், வைபை, 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை கழற்றி மாற்றும் வசதி உள்ளது.
புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் எப்எம் ரேடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 90 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 457 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
- நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.
இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1450 எம்ஏஹெச் பேட்டரி
ப்ளூடூத் 5.0
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி 2.0
மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1000 எம்ஏஹெச் பேட்டரி
யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி
மைக்ரோ எஸ்டி சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, டூயல் சிம்
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.
- புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
நோக்கியாவின் தாய் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல், ஹெயின்கென் மற்றும் பொடெகாவுடன் இணைந்து முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் போரிங் போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 4ஜி காலிங் வசதி, இரண்டு ஸ்கிரீன்கள், டிரான்ஸ்லுசென்ட் டிசைன் உள்ளது. போரிங் போன் மாடலில் 2.8 இன்ச் QVGA ஸ்கிரீன், வெளிப்புறத்தில் 1.77 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 128MB ரோம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் போரிங் போன் மொத்தத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
- இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.






