என் மலர்

  நீங்கள் தேடியது "Sony"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
  • இந்தியாவில் அறிமுகமான சோனி நிறுவனத்தின் முதல் மினி எல்இடி டிவி மாடல் ஆகும்.

  சோனி XR-85X95K அல்ட்ரா ஹெச்டி மினி எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எல்இடி டிவி வில ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமான முதல் மினி எல்இடி டிவிக்கள் ஆகும்.

  புதிய சோனி மினி எல்இடி டிவி XR மாடலில் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கிறது. இது சோனி நிறுவனத்தின் சொந்த சிப்செட் ஆகும். மேலும் இதில் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இது பேக்லிட்டிங் மற்றும் லோக்கல் டிமமிங் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

  இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் புதிய சோனி மினி எல்இடி டிவி மாடல் சாம்சங் மற்றும் டிசிஎல் பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. அளவை பொருத்தவரை மினி டிஸ்ப்ளே தெழில்நுட்பம் கொண்ட டிவி மாடல் எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


  அம்சங்கள்:

  சோனி X95K சீரிஸ் டிவி 85 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதில் 3840x2160 பிக்சல் மினி எல்இடி டிஸ்ப்ளே பேனல் உள்ளது. இந்த டிவி காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிநவீன மினி எல்இடி பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்கிறது. மேலும் அதில் ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் சவுண்ட் உள்ளது.

  இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி மென்பொருள் சார்ந்த கூகுள் டிவி யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் வசதி, HDMI 2.1, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  சோனி X95K மினி எல்இடி டிவி சீரிஸ் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 8 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும். ஆனால் பெஸ்ட் பை சலுகையின் கீழ் இந்த டிவி ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை சோனி செண்டர் ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Sony  சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்‌ஷிப் எக்ஸ்பீரியா 1 மாடலை போன்று இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

  இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட வைடு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, பேட்டரி, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  சோனி எக்ஸ்பீரியா 10 சிறப்பம்சங்கள்:

  - 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
  - ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
  - 3 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 13 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/2.0
  - 5 எம்.பி. கேமரா, f/2.4
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - டூயல் சிம் ஸ்லாட்
  - ஆண்ட்ராய்டு பை 
  - 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி  சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

  - 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
  - 4 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/1.75
  - 8 எம்.பி. கேமரா, f/2.4
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - டூயல் சிம் ஸ்லாட்
  - ஆண்ட்ராய்டு பை 
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

  சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் பிளாக், நேவி புளு, பின்க் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, நேவி புளு, மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 429.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனம் சினிமா வைடு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா கொண்ட எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Xperia1  சோனி மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

  சோனியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் 21:9 சினிமா வைடு 4K ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர், அட்ரினோ 640 கிராஃபிக்ஸ், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 26 எம்.எம். ஸ்டான்டர்டு லென்ஸ், 52 எம்.எம். லென்ஸ், 2X ஆப்டிக்கல் சூம் வழங்கப்பட்டுள்ளது.

  இத்துடன் ஸ்மார்ட்போனில் Eye AF மற்றும் 10FPS AF/AE வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை எக்ஸ்பீரியா 1 இருக்கிறது. இதன் சினிமா ப்ரோ சினி ஆல்டா 21:9 தரத்தில் 4K ஹெச்.டி.ஆர். வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டிருக்கிறது.  சோனி எக்ஸ்பீரியா 1 சிறப்பம்சங்கள்:

  - 6.5 இன்ச் 1644x3840 பிக்சல் 4K OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 640 GPU
  - 6 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை
  - சிங்கிள் / டூயல் சிம்
  - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எக்ஸ்மார் RS சென்சார், 1/2.6″, f/1.6, ஹைப்ரிட் OIS/EIS, 1.4μm, பிரெடிக்டிவ் கேப்ச்சர்
  - 12 எம்.பி. கேமரா, f/2.4,1/3.4″ 1.0μm 135° அல்ட்ரா வைடு-ஆங்கிள்
  - 12 எம்.பி. கேமரா, f/2.4 aperture 1/3.4″ 1.0μm 45° டெலிபோட்டோ லென்ஸ், ஹைப்ரிட் OIS/EIS, 2x ஆப்டிக்கல் சூம்
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/ 4″ எக்ஸ்மார் RS சென்சார், f/2.0, 1.12μm, 84° வைடு ஆங்கிள் லென்ஸ்
  - யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், DSEE HX, LDAC, டால்பி அட்மாஸ்
  - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP65/IP68)
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - Qnovo அடாப்டிவ் சார்ஜிங் தொழில்நுட்பம்
  - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
  - Qi வயர்லெஸ் சார்ஜிங்

  சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பிள், கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,270) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள் காணப்படுகின்றன. #Xperia1 #Smartphone  சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நெருங்கி வரும் நிலையில் புதிய சோனி ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

  முன்னதாக சோனி நிறுவனம் எக்ஸ்.இசட்.4 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், எக்ஸ்பீரியா 1 எனும் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் எக்ஸ்பீரியா 1 மாடலின் விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.

  அதன்படி சோனி நிறுவன ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்பீரியா 1 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.   தற்போதைய ஸ்மார்ட்போன்களை போன்று எக்ஸ்பீரியா 1 மாடலில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களின் இடையே பொருத்தப்பட்டிருக்கிறது.

  எக்ஸ்பீரியா 1 மாடலில் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 4K ஹெச்.டி.ஆர். OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது எக்ஸ்.இசட் பிரீமியம் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. 

  ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் என்பதால் புதிய சோனி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #XperiaL3 #Smartphone  சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3 மற்றும் எக்ஸ்.ஏ.3 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தவிர புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சோனியின் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் எல்3 என்று அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் 18:9 ஹெச்.டி. 720 பிக்சல் எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, போர்டிரெயிட் வசதியுடன் வழங்கப்படுகிறது.

  புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களிடையே பொருத்தப்பட்டிருக்கிறது.


  புகைப்படம் நன்றி: winfuture

  ஸ்மார்ட்போன் முழுவதும் பிளாஸ்டிக் கேஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் சில்வர், கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

  சோனி எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் விலை பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாத நிலையில், இதன் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,020) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனினை சோனி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், XA3 பிளஸ் விவரங்கள் வெளியாகியுள்ளது. #XperiaXA3Plus #Smartphone  சோனி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் சில ஸ்மார்ட்போன்களில் 21:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

  அந்த வகையில் சோனி அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எக்ஸ்பீரியா XA3 பிளஸ் இருக்கிறது. தற்சமயம் எக்ஸ்பீரியா XA3 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் XA3 ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  அளவுகளை தவிர இரு ஸ்மார்ட்போன்களை பார்க்க எவ்வித வேறுபாடும் காணப்படவில்லை. எக்ஸ்பீரியா XA3 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 21:9 ரக டிஸ்ப்ளேவும் எக்ஸ்பீரியா XA3 மாடலில் 5.9 இன்ச் டிஸ்ப்ளேவும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே அளவு உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இவற்றில் 21:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.


  புகைப்படம் நன்றி: winfuture

  புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் நாட்ச் வடிவமைப்பு மற்றும் செல்ஃபி கேமராவிற்கு துளையிடப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக ஸ்மார்ட்போனின் மேல்பக்க பெசல் சற்று அகலமாகவும், கீழ்புறம் பெசல் எதுவும் இருக்காது என தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.

  எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனின் இடையே பொருத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும்.

  ஸ்மார்ட்போனின் கீழ் ஸ்பீக்கர் கிரில்கள், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனியின் எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Sony #smartphone  சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் விரங்கள் AnTuTu தளத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

  அவ்வாறு கீக்பென்ச் தளத்தில் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சோனி ஸ்மார்ட்போன் கணிசமான புள்ளிகளை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுகிறது.

  இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனில் நாட்ச் இல்லாமல் 21:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் டிஸ்ப்ளே தற்போதைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

  புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 46.5 வாட் வரையிலான சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி, மூன்று பிரைமரி கேமரா செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Sony #CES2019  2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ்.) அடுத்த வாரம் துவங்குகிறது. இதையொட்டி சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

  அதன்படி சோனியின் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5.00 மணி (இந்திய நேரப்படி ஜனவரி 8 ஆம் தேதி மாலை 6.30 மணி) அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கிறது.   வழக்கமாக சோனி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதம் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யும். 

  2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ.2, எக்ஸ்.ஏ.2 அல்ட்ரா மற்றும் எல்2 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 


  புகைப்படம் நன்றி: OnLeaks

  அந்த வகையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சோனி நிறுவனம் தனது புதிய என்ட்ரி-லெவல் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

  அப்படியாக சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3, எக்ஸ்.ஏ.3 அல்ட்ரா மற்றும் எக்ஸ்பீரியா எல்3 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதால், சோனியின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பும் ஜனவரி 7 ஆம் தேதி எதிர்பார்க்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sony #headphones  சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி WH-CH700N என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 

  புதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சத்தத்தை தடுக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் (Artificial Intelligence Noise Cancellation) தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

  இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எளிமையாக செயல்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹெட்போனில் பிரத்யேக என்.சி. (NC) பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. 

  சோனி WH-CH700N ஹெட்போன்களின் மற்றொரு புதிய அம்சமாக டிஜிட்டல் சவுன்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது கம்ப்ரெஸ் செய்யப்பட்ட மியூசிக் ஃபைல்களின் தரத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படும் என சோனி தெரிவித்துள்ளது.  கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சோனி WH-CH700N மாடலில் ப்ளூடூத் 4.1 மற்றும் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எளிதில் கழற்றக்கூடிய ஒருபக்க கேபிள் 1.2 மீட்டர் நீளத்தில் வழங்கப்படுகிறது. இதனை வழக்கமான 3.5 எம்.எம். ஜாக் போன்று பயன்படுத்தலாம்.

  இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது. இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.

  சோனி WH-CH700N ஹெட்போன் மாடல் ஹெட்போன்ஸ் கனெக்ட் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்படுகிறது.

  நாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் பப்ஜி கேம் வெளியிடப்பட்டது. பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜி பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. #PUBGPS4 #PlayStation4  ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான கேமாக இருக்கும் பப்ஜி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் வெளியிடப்பட்டது. பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு இருக்கும் பப்ஜி ஒவ்வொன்றும் தனித்தனி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  பிரத்யேக அணிகளை பொருத்த வரை பப்ஜி பி.எஸ்.4 பப்ஜி பி.எஸ்.4 பிக்சல் ஆர்ட் பாராசூட் உடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாட கேமர்கள் தங்களது கேமில் லாக்-இன் செய்தாலே போதும். பிளே ஸ்டேஷனுக்கென இருக்கும் நீல நிற பாராசூட் கிடைக்கும்.

  இதனுடன் நாதன் டிரேக் டெசர்ட், அன்சார்ட்டெட் உள்ளிட்டவை பி.எஸ். 4 கேமில் இருக்கும். மேலும் எலைட் பேக்பேக்கில் இருந்து தி லாஸ்ட் ஆஃப் யு, பப்ஜி அவதார், பப்ஜி மிராமர் போன்ற தீம்கள் பிளே ஸ்டேஷனுக்கு என பிரத்யேக அணிகளாக இருக்கின்றன.

  பப்ஜி பி.எஸ்.4: டிஸ்க் எடிஷன், பப்ஜி லூட்டர்ஸ் எடிஷன், பப்ஜி சர்வைவர்ஸ் எடிஷன் மற்றும் பப்ஜி சேம்பியன்ஸ் எடிஷன் என நான்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்க் எடிஷன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  பப்ஜி லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டுமே. பப்ஜி சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை அடங்கும்.

  பப்ஜி சேம்பியன்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 6,000 ஜி காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  ஸ்மார்ட்போன் தவிர எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலில் மட்டும் பப்ஜி வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இந்த கேம் பிளே ஸ்டேஷனிற்கும் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ். 4 வெளியீட்டிற்கு முன்னரே பப்ஜி டெவலப்பர்கள் கேமின் முழு வரைபடத்தை அவர்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4  பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

  பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

  இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.  பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்

  டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
  லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
  சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் 
  பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
  சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
  பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999

  பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  ×