search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பிளேஸ்டேஷன் விஆர்2 அறிமுக தேதி மற்றும் விலை விவரங்கள் வெளியீடு
    X

    பிளேஸ்டேஷன் விஆர்2 அறிமுக தேதி மற்றும் விலை விவரங்கள் வெளியீடு

    • சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளேஸ்டேஷன் விஆர்2 வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • மேலும் பிளேஸ்டேஷன் விஆர்2 முன்பதிவு பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் விஆர்2 மாடல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய பிளேஸ்டேஷன் விஆர்2 மாடலுக்கான முன்பதிவு இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது.

    பிளேஸ்டேஷன் விஆர்2 விலை 550 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 347 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வெர்ஷனை விட 150 டாலர்கள் அதிகம் ஆகும். மேலும் மெட்டா குவெஸ்ட் 2 மாடலை விடவும் பிளேஸ்டேஷன் விஆர்2 விலை 150 டாலர்கள் அதிகம் ஆகும்.

    புதிய சோனி பிளேஸ்டேஷன் விஆர்2 மாடலின் பேஸ் பேக்கேஜில் விஆர் ஹெட்செட், இரண்டு விஆர்2 சென்ஸ் கண்ட்ரோலர்கள் மற்றும் ஸ்டீரியோ ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது. கண்ட்ரோலர்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனின் விலை 50 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளேஸ்டேஷன் விஆர்2 உடன் ஹாரிசன் கால் ஆப் தி மவுண்டெயின் எடிஷன் கிடைக்கிறது. இதில் கேமிற்கான வவுச்சர் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய விஆர்2 ஹெட்செட் மெல்லிய டிசைன், குறைந்த எடை மற்றும் புது அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் லென்ஸ் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டயல் மற்றும் பில்ட்-இன் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட் அணியும் போது அதிக சவுகரியமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்செட் சிங்கில் கார்டு செட்டப் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×