search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PS5"

    • புதிய கையடக்க சாதனம் “பிராஜக்ட் கியூ” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது.

    சோனி நிறுவனம் கையடக்க பிளே ஸ்டேஷன் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பிளே ஸ்டேஷன் 5 கேம்களின் அக்சஸபிலிட்டியை மேம்படுத்த முடியும். பிளே ஸ்டேஷன் ஷோகேஸ் நிகழ்வில் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய கையடக்க சாதனம் "பிராஜக்ட் கியூ" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60fps-இல் கேம்களை வைபை மூலம் இயக்கும் திறன் கொண்ட எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ட்ரிகர்கள், ஹேப்டிக் ஃபீட்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பிளே ஸ்டேஷன் 5 கன்சோலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களை மட்டுமே புதிய கியூ சாதனத்தில் விளையாட முடியும். தனித்துவம் மிக்க கேமிங் சாதனமாக இல்லாமல், இது பிளே ஸ்டேஷன் 5 உடன் வழங்கப்படும் சாதனமாக இருக்கும் என்றே தெரிகிறது. முதற்கட்டமாக இந்த சாதனம் கேம் ஸ்டிரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் சேவைகளை சப்போர்ட் செய்யாது.

    எனினும், கிளவுட் கேமிங் சேவையை வழங்குவதில் சோனி பெயர் பெற்ற நிறுவனம் ஆகும். இதே வசதி பிராஜக்ட் கியூ சாதனத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது சோனி நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும். கையடக்க கேமிங் சாதனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து சோனி, பிராஜக்ட் கியூ திட்டத்தை துவங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.

    • சோனி கேமிங் கன்சோலுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.

    அமேசான் கிரேட் சம்மர் சேல் துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லட் என்று பல்வேறு பிரிவுகளில் மின்சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அமேசான் தளத்தில் பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் ஸ்டாண்டர்டு எடிஷன் தற்போது ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலும், டிஜிட்டல் எடிஷன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இரு மாடல்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் சோனி கேமிங் கன்சோலுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மேலும் ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி, அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 250 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் பிளே ஸ்டேஷன் 5 வாங்கி அதன் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டும். சாதனம் டெலிவவரி செய்யப்பட்டதும், பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட டிவி பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவி மாடலை தேர்வு செய்து ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.

    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
    • பிளே ஸ்டேஷன் 5 ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக சோனி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 (PS5) விற்பனை தொடர்ந்து அமோகாமாக நடைபெற்று வருவதாக அறிவித்து இருக்கிறது. இதுவரை சோனியின் PS5 மாடல் 25 மில்லியனுக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சோனி தெரிவித்துள்ளது.

    கடந்த காலாண்டில் மட்டும் 3.3 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2022 நிதியாண்டில் மட்டும் 18 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிதியாண்டின் அரையாண்டு வரையில் சோனி நிறுவனம் 5.7 மில்லியன் PS5 யூனிட்களையே விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் மீதமுள்ள காலக்கட்டத்தில் விற்பனை இலக்கை சோனி எட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    கடந்த ஆண்டில் இருந்தே சோனி நிறுவனம் PS5 விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அந்த வகையில் வருவாய் மட்டும் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் PS5 விலை உயர்வு காரணமாகவே வருவாய் அதிகரித்து இருக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும் லாபம் 49 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

    கேம் தயாரிப்பு நிறுவனமான பன்ஜியை சோனி கைப்பற்றியதே லாபம் சரிய காரணமாக கூறப்படுகிறது. பன்ஜி நிறுவனம் தான் ஹாலோ டிரையலஜியை உருவாக்கியது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் 11.5 மில்லியன் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    ×