என் மலர்
மொபைல்ஸ்

7,550mAh பேட்டரி, 50MP கேமரா... பட்ஜெட் விலையில் புது போக்கோ போன் அறிமுகம்
- ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
- ஸ்மார்ட்போன் சைபர் சில்வர், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.
போக்கோ F7 5G இந்தியாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 6,000mm sq வேப்பர் கூலிங் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டிருக்கிறது.
போக்கோ F7 5G அம்சங்கள்:
போக்கோ F7 5G ஸ்மாரட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.83-இன்ச் 1.5K (1,280x2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் HDR10+ சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைப் பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி வரை LPDDR5X ரேம், 512 ஜிபி வரை UFS4.1 மெமரி, ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் உள்ளது. போக்கோ F7 5G ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் வருகிறது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் பெறும் என்று சியோமி உறுதியளித்துள்ளது.
இத்துடன் கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் (Circle to Search) உள்ளிட்ட பல AI அம்சங்களையும், AI நோட்ஸ், AI இன்டர்ப்ரெட்டர், AI இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், AI இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல அம்சங்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
கேமராவை பொருத்தவரை, போக்கோ F7 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
போக்கோ F7 5G இன் இந்திய வெர்ஷன் 7,550mAh பேட்டரி, 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, GPS, NFC மற்றும் ஒரு USB டைப்- சி போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.
விலை விவரங்கள்:
இந்தியாவில் போக்கோ F7 5G ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,999 இல் தொடங்குகிறது. இதன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சைபர் சில்வர், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.






