என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mobile"

    • இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
    • ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.

    இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.

    3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

    இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.

    இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

    மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.

    இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.

    • கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஒன் யுஐ 8 பீட்டா அப்டேட் பெறலாம் என்பதை பரிந்துரைக்கிறது. கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், கேலக்ஸி A55 5ஜி சமீபத்தில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது. இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கேலக்ஸி S25 சீரிசுக்கான ஒன் யுஐ 8 பீட்டா 2 வெர்ஷனை வெளியிட்டது.

    கேமராவை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8MP சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் Full-HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.32,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    • ஸ்பீக்கர்களைத் தவிர, பிக்சல் 10 சீரிஸ் முழுமையாக மேம்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிசை கூகுள் நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.

    இந்த ஆண்டு, கூகுள் நிறுவனம் பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ XL மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு ஆகியவற்றை வழக்கமான பிக்சல் 10 மாடலுடன் சேர்த்து அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    எனினும், வரவிருக்கும் பிக்சல் 10 ஸ்மார்ட்போன்கள் மேம்பட்ட ஒலிபெருக்கி செயல்திறனை வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வரவிருக்கும் சீரிஸ் புதிய டென்சார் ஜி5 சிப்செட்டில் இயங்கும் என்று தெரிகிறது. பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களுடன் வரும் என்று ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    புதிய சீரிஸ் "ஒரு பிக்சலில் இதுவரை இல்லாத சிறந்த ஆடியோ தரத்தைக் கொண்டுள்ளது" என்று கூறப்படுகிறது. பிக்சல் போன்களில் எப்போதும் நல்ல ஸ்பீக்கர்கள் உள்ளன, ஆனால் சிறந்தவை அல்ல.

    இருப்பினும், பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் அதிலிருந்து விலகிச் செல்வதால், புதிய பிக்சல் 10 போன்களில் கூகுள் டால்பி அட்மோஸ் ஆதரவைச் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, கேலக்ஸி எஸ்25 சீரிஸ் டால்பி அட்மோஸ் வழங்கும் சில போன்களில் ஒன்றாகும்.

    ஸ்பீக்கர்களைத் தவிர, பிக்சல் 10 சீரிஸ் முழுமையாக மேம்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரிஸ் கிம்பல்-லெவல் OIS (இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் மேக்னடிக் பவர் ப்ரொஃபைல் (MPP) தரத்துடன் கூடிய Qi 2.2 வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது. புதிய போன்களுடன் 'பிக்சல்-ஸ்னாப்' சீரிஸ் ஆக்சஸரீயும் கூகுள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் அதே நாளில் தொடங்கலாம், மேலும் அவை ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமான பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஐரிஸ், லிமோன்செல்லோ, மிட்நைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ நிறங்களில் வெளியிடப்படலாம். பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ XL மாடல்கள் லைட் போர்சிலைன், மிட்நைட், ஸ்மோக்கி கிரீன் மற்றும் ஸ்டெர்லிங் கிரே நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஸ்மோக்கி கிரீன் மற்றும் ஸ்டெர்லிங் கிரே வண்ணங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸரில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக காத்திருக்கும் வேளையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ரியல்மி GT 7 மாடலுடன் ரியல்மி GT 7 ட்ரீம் மாடலையும் வெளியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு மாடல் ஒரு தனித்துவமான வடிவமைப்புடன் வர வாய்ப்புள்ளது. இது ஸ்டாண்டர்ட் மாடலின் அம்சங்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ளலாம். ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸரில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன் அதன் ஸ்டாண்டர்ட் GT 7 மற்றும் GT 7T மாடல்களுடன் வருகிற 27-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

    ரியல்மி GT 7 ட்ரீம் மாடலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஐகான்கள் மற்றும் தீம்கள், தனித்துவ வடிவமைப்பு மற்றும் பிரத்யேக பேக்கேஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்-இல் இருந்து தனித்து நிற்கிறது.

    ரியல்மியின் முந்தைய சிறப்பு மாடல் ஸ்மார்ட்போன்களைப் போலவே, வரவிருக்கும் மாடலும் அசல் ரியல்மி ஜிடி 7-இலிருந்து வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டு தனித்து நிற்கக்கூடும். அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் மாடலின் அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    வரவிருக்கும் ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் புளூ (IceSense Blue) மற்றும் ஐஸ்-சென்ஸ் பிளாக் (IceSense Black) வண்ண விருப்பங்களில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இது 120W வயர்டு சார்ஜிங்குடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

    ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கலாம்.

    சமீபத்திய தகவலின்படி, ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனின் 12GB RAM + 512GB மாடலின் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை இருக்கும் என தெரிகிறது.

    • 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
    • இந்த ஸ்மார்ட்போன் LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐகூ நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்கள் வருகிற 20-ந்தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான நிகழ்வில் ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ், ஐகூ பேட் 5 சீரீஸ், ஐகூ வாட்ச் 5, ஐகூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 3 அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐகூ நியோ 10 மற்றும் நியோ 10 ப்ரோ சீரிசில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் 2K டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் வழங்கப்படும் என்று ஐகூ நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த சிப்செட் ஐகூ பிராண்டின் புளூ க்ரிஸ்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பத்தை கையாள்வதற்காக 7K ஐஸ் வால்ட் கொண்டிருக்கும் என்றும், இது குளிரூட்டும் திறனை 15 சதவீதம் மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

    வரவிருக்கும் நியோ 10 ப்ரோ+ 1.5மிமீ பெசல்கள் மற்றும் ஒரு கண்ணாடி பின்புற பேனலுடன் 2K டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று ஐகூ தெரிவித்துள்ளது. இது ஷி குவாங் ஒயிட், ஷேடோ பிளாக் மற்றும் சூப்பர் பிக்சல் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) போன்ற நிறங்களில் கிடைக்கும்.

    ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் பிளாட் OLED திரையுடன் வரும் ஏற்கனவே வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது. பின்புறம் இரட்டை 50MP கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 5 உடன் வரலாம்.

    • கேலக்ஸி S25 எட்ஜ் மாடலுக்கான் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஸ்மார்ட்போன் டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்-பிளாக் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் வெளியிடப்பட்டது. இந்த புதிய போனின் இந்திய விலை விவரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேலக்ஸி S25 எட்ஜ், கேலக்ஸி சிப்செட்டிற்கான ஸ்னாப்டிராகன் 8 எலைட், 200MP கேமரா யூனிட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    5.8 மிமீ அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இதுவரை இருந்த மிக மெல்லிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இது 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S25 எட்ஜ் மாடலுக்கான் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் 12ஜிபி + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 1,09,999-ல் தொடங்குகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ. 1,21,999 ஆகும். இந்த மொபைல் தற்போது சாம்சங் இந்தியா இ-ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்-பிளாக் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கேலக்ஸி S25 எட்ஜ் 512ஜிபி வேரியண்ட்-ஐ 256ஜிபி மாடலின் விலையிலேயே வாங்க முடியும்.

    சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி + 1440x3120 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 பாதுகாப்புடன் கொண்டுள்ளது. இது கேலக்ஸி SoC-க்கான ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 உடன் கிடைக்கிறது.

    கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் மாடலில் 2x ஆப்டிகல் இன்-சென்சார் ஜூம் மற்றும் OIS வசதி கொண்ட 200MP பிரைமரி கேமரா, பின்புறம் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறம் பஞ்ச்-ஹோல் ஸ்லாட்டில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 12MP சென்சார் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் ஆனது 25W வயர்டு மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3,900mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். இது IP68 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்ட விகிதங்களை உயர்த்தப்பட உள்ளன.
    • இது 2019 முதல் நான்காவது பெரிய ரீசார்ஜ் கட்டண உயர்வு ஆகும்.

    இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு இறுதியில் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்ட விகிதங்களை உயர்த்தப்பட உள்ளன.

    இதனால், பயனர்கள் விரைவில் 10- 20% வரை மொபைல் ரீசார்ஜ் கட்டண திருத்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    இது 2019 முதல் நான்காவது பெரிய ரீசார்ஜ் கட்டண உயர்வு ஆகும்.

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் 5G நெட்வொர்க் முதலீடுகள் மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.

    மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வு பல்வேறு வகை ரீசார்ஜ் திட்டங்களில் எதிரொலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ரூ.100– ரூ.200 வரையிலான பட்ஜெட் திட்டங்கள் 10% அதிகரிக்கும். நடுத்தர அளவிலான திட்டங்கள், அதாவது ரூ.300– ரூ.500 வரையில் 15% அதிகரிக்கும்.

    பிரீமியம் 5G திட்டங்கள் 20% வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • 55% இலிருந்து 62% ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    • 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.

    கடந்த 12 மாதங்களில் 62% இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கியுள்ளனர் என புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.

    லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் சீனப் பொருட்களை வாங்கும் இந்திய நுகர்வோரின் சதவீதம் 55% இலிருந்து 62% ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்தியர்கள் அதிக சீனப் பொருட்களை வாங்கும் பிரிவுகள், கேஜெட்டுகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகும்.

    மேலும் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டர் லோகேஷ் தாமா மற்றும் வார்டர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இயக்குனர் ஜெனரல் (சிறைகள்) சஞ்சய் பானிவால், ஐ.பி.எஸ்., அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

    சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.

    • மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடி இயக்குவதற்கு, சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும், சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும், வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும், அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும், வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை, வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைக்கவேண்டும். விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடி திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். வாகன அங்காடிக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பயனாளிகளை தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே, மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க தகுதியானவர் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நிறைமதி கிராமம், நீலமங்கலம்(அஞ்சல்) கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
    • புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.

    முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.

    நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.

    இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.

    எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.

    • உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
    • மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.

    இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.

    இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

     

    அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

     

    மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×