என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    டிரெண்டிங்கில் ஐபோன் பாக்கெட்- வாயை பிளக்கும் ஆப்பிள் பயனர்கள்
    X

    டிரெண்டிங்கில் "ஐபோன் பாக்கெட்"- வாயை பிளக்கும் ஆப்பிள் பயனர்கள்

    • இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
    • ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.

    இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.

    3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

    இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.

    இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

    மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.

    இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.

    Next Story
    ×