என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் ஐபோன்"

    • இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
    • ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.

    இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.

    3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

    இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.

    இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

    மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.

    இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.

    • ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
    • ஆக்‌ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது மிக மெல்லிய ஐபோன் மாடல்- "ஐபோன் ஏர்" அறிமுகம் செய்தது. ஐபோன் ஏர்-ஐ விட, ஐபோன் ஏர் 2 பெருமளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    எனினும், ஐபோன் ஏர் 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் ஏர் 2 ரெண்டர் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. ரெண்டரில் புதிய ஐபோனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. மிக மெல்லிய மற்றும் லேசான கைபேசியின் சில முக்கிய அம்சங்களை ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்.

    ஐபோன் ஏர் 2 அதன் முந்தைய மாடலை போலவே அதே அளவிலான தோற்றம் கொண்டிருக்கலாம். மீண்டும் மீண்டும் மேம்படுத்தல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கேமரா துறையில் இது ஒரு பெரிய அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    ஐபோன் ஏர் 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    சீனாவின் வெய்போ தள பதிவில், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஐபோன் ஏர் 2 ரெண்டரை பகிர்ந்துள்ளது. இது அதன் வடிவமைப்பைக் காட்டுகிறது. இந்த போன் அதன் முந்தைய மாடலை போலவே வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும், புதிய ஐபோன் ஏர் 2 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் படச்த்தில், இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் ஐபோன் ஏர் மாடலை விட இது குறிப்பிடத்தக்க அப்டேட் பெறக்கூடும். புதிய ஐபோன் ஏர் மாடலில் 48MP பிரைமரி கேமராவுடன் வருகிறது.

    மற்ற வடிவமைப்புகள் ஐபோன் ஏர் போலவே இருக்கும் என்று தெரிகிறது. ஆக்ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும். பின்புற பேனலில் இரண்டு கேமரா லென்ஸ்கள், ஒரு பிரத்யேக மைக்ரோபோன் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்ட மாத்திரை வடிவ கேமரா பம்ப் இடம்பெறலாம்.

    ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க ஐபோன் ஏர் 2 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா-வைடு கேமரா கொண்டிருக்கலாம்.

    • ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
    • ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்பிள் நிறுவனம் தனது 'Awe Dropping' நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்கள் வெளியீட்டைத் தொடர்ந்து பழைய ஐபோன் சீரிஸ் விலைகள் குறைக்கப்படுவது இயல்பான ஒன்றுதான்.

    அந்த வரிசையில் நேற்றைய நிகழ்வு முடிந்த கையோடு ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் இரு மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    வழக்கம் போல், இந்த போன்கள் அதன் அறிமுக விலையில் இருந்து ரூ.10,000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. ஆனால் ஐபோன் 16 இப்போது 128 ஜிபி மாடலில் கிடைக்கிறது. ஐபோன் 16 பிளஸ் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் மட்டுமே வருகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏனெனில் அவை ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களால் மாற்றப்பட்டுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

    128 ஜிபி கொண்ட ஐபோன் 16 ரூ.69,900, 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.79,900, 256 ஜிபி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் தளங்களில் இன்னும் விலை மலிவாக பெற்றுக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போதும் விலை மலிவாகக் கிடைக்கும்.

    • ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
    • ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது 'Awe Dropping' நிகழ்வில், புத்தம் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டது. புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு வெளியான A18 சிப்செட்டின் மேம்பட்ட வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிம செயற்கை நுண்ணறிவு (AI) சேவையான ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் (Apple Intelligence) ஆதரவையும் கொண்டுள்ளது.

    ஐபோன் 17 அம்சங்கள்:

    முற்றிலும் புதிய ஐபோன் 17 மாடல் ஐஒஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஐபோன் மாடல் டூயல் சிம் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை, ஐபோன் 17 மாடலில் இரட்டை பின்புற சென்சார்களுடன் வருகிறது. இதில் f/1.6, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 48MP பியூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இந்த 2X டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்படும். இதனுடன் f/2.2, மேக்ரோ ஆப்ஷன் கொண்ட 48MP பியூஷன் அல்ட்ரா-வைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், முற்றிலும் புதிய 18MP சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.



    ஐபோன் 17 மாடல் A19 சிப்செட் மற்றும் iOS 26 இல் இயங்குகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஐபோன் 17 பேஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இது ப்ரோ மாடல்களைப் போலவே அதே ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அம்சங்களுடன் வருகிறது.

    ஐபோன் 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

    ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அலுமினிய கட்டமைப்பை கொண்டுள்ளன. அதாவது இந்த ஆண்டு மாடல்களில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் காணப்படும் டைட்டானியம் பாடி இருக்காது. ஐபோன் 17 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ப்ரோ சீரிசில் இரண்டு மாடல்களும் 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் புதிய A19 ப்ரோ சிப்செட் கொண்டுள்ளன. இது 6-கோர் CPU மற்றும் 6-கோர் GPU கட்டமைப்போடு வருகிறது, ஒவ்வொரு GPU கோர் நியூரல் ஆக்சிலரேட்டர்களை கொண்டுள்ளது.

    கேமராக்களைப் பொறுத்தவரை, ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. முன்புறம் 18MP கேமராவுடன் வருகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஐஓஎஸ் 26 கொண்டிருக்கின்றன.

    விலை விவரம்:

    இந்திய சந்தையில் புதிய ஐபோன் 17 மாடல் ரூ. 82,900 என துவங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 1,34,990 என துவங்குகிறது.

    • 128GB மெமரி மாடல் இன்னும் விண்டேஜ் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
    • ஐபோன் 8 பிளஸ் 64GB மாடல் ரூ. 73,000 மற்றும் 256GB மாடல் ரூ. 86,000 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 ஆம் தேதி தனது 'Awe Dropping' நிகழ்வில் ஐபோன் 17 சீரிசை வெளியிட உள்ளது. புதிய ஐபோன்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, ஆப்பிள் நிறுவனம் அதன் விண்டேஜ் தயாரிப்பு பட்டியலை புதுப்பித்துள்ளது. 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8 பிளஸ் இப்போது விண்டேஜ் என குறிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 11-இன்ச் மேக்புக் ஏர், 13-இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் 15-இன்ச் மேக்புக் ப்ரோ ஆகியவை நிறுவனத்தால் "காலாவதியானவை" என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த சாதனங்கள் இப்போது காலாவதியானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் சேவை மற்றும் பழுதுபார்ப்பு குறைவாக இருக்கும். 2017 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிளின் ஐபோன் 8 பிளஸ் இப்போது ஒரு விண்டேஜ் தயாரிப்பு.

    ஆப்பிள் நிறுவனம் தனது 64GB மற்றும் 256GB ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அதன் விண்டேஜ் சாதன பட்டியலில் சேர்த்துள்ளது. ஏற்கனவே பட்டியலில் இருந்த "ஐபோன் 8 பிளஸ் பிராடக்ட் ரெட்" வெர்ஷனுடன் இவை இணைகின்றன. இந்த போனின் 128GB மெமரி மாடல் இன்னும் விண்டேஜ் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

    2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் X ஆகியவை முன்பு விண்டேஜ் என குறிக்கப்பட்டன. ஐபோன் 8 பிளஸ் 64GB மாடல் ரூ. 73,000 மற்றும் 256GB மாடல் ரூ. 86,000 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஐபோன் 8 பிளஸ் தவிர, 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 11 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் காலாவதியானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    ஆப்பிள் தயாரிப்புகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விற்கப்படாமல், ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அவற்றை விண்டேஜ் என்று கருதுகிறது. இந்தக் காலகட்டத்தில், பாகங்கள் கிடைப்பதைப் பொறுத்து, வரையறுக்கப்பட்ட வன்பொருள் சேவை இன்னும் கிடைக்கக்கூடும்.

    செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு) நடைபெறவிருக்கும் ஆப்பிளின் Awe Dropping வெளியீட்டு நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே விண்டேஜ் மற்றும் காலாவதியான தயாரிப்பு பட்டியல்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . ஐபோன் 17 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 ஆகியவையும் இந்த நிகழ்வின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்கள் (iPhone, iPad, MacBook, Apple Watch) உலகளவில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ஆனால் முழுமையான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் ஐபோன் உள்பட அனைத்து ஆப்பிள் பொருட்களும் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான CERT- In அதி தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    iOS, iPadOS, macOS, watchOS, TVOS/ visionOS 2 இருந்து முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

    • ஐபோன் 17 ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் நிறுவனத்தின் A19 சிப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிளின் ஐபோன் 17 ஏர், இந்த ஆண்டின் பிற்பகுதியில், அந்நிறுவனத்தின் மிகமெல்லிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோனின் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் எடை பற்றிய விவரங்கள் டிப்ஸ்டர் மூலம் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.

    ஐபோன் 17 ஏர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ்-ஐ விட சிறிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது அதன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் போட்டியாளரை விட மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கும். இருப்பினும், இது ஒரு பாரம்பரிய லித்தியம்-அயன் பேட்டரியை விட அதிக ஆற்றலை வழங்கும் நவீன பேட்டரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

    ஐபோன் 17 ஏர் விவரங்கள்

    பெயர் தெரியாத டிப்ஸ்டர் (X இல் @MajinBuOfficial என்று அழைக்கப்படுகிறார்) ஒரு வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, ஐபோன் 17 ஏர் சிலிக்கான்-கார்பன் பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய மெலிதான ஐபோன் மாடலில் 2800mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டன. இது பேசிக் மாடலை விட கணிசமாக சிறியது. இருப்பினும், சிலிக்கான்-கார்பன் பேட்டரியை பயன்படுத்துவது ஐபோன் 17 ஏர் மாடலில் முன்னர் எதிர்பார்த்ததை விட சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கக்கூடும்.



    ஐபோன் 17 ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 2025 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் மிக இலகுவான மாடல்களில் ஒன்றாகவும் இருக்கலாம். வரவிருக்கும் புதிய ஐபோன் மாடல் 146 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.

    இது சமீபத்தில் வெளியான தகவல்களுடன் ஒத்துப்போகிறது, இது ஒரு லேசான மற்றும் மெலிதான ஐபோன் மாடலின் வருகையைக் குறிக்கிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஃபேஸ் ஐடிக்கான ஆதரவையும் இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்ற டைட்டானியத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ஏர் மாடல் 7000 சீரிஸ் அலுமினியம் அலாய் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது 30 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். டிப்ஸ்டர் வேறு சில கூறுகளின் எடையையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவற்றில் மிகவும் கனமானது 120Hz OLED டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி ஆகும். மேலும் இவை ஒவ்வொன்றும் 35 கிராம் எடையுள்ளதாக கூறப்படுகிறது.

    கேமராவை பொருத்தவரை ஐபோன் 17 ஏர் ஒற்றை 48MP பிரைமரி கேமரா மற்றும் 24MP செல்ஃபி கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் நிறுவனத்தின் A19 சிப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு ஐபோன் 16 பிளஸ் மாடலைப் போலவே 8 ஜிபி ரேமுடன் வரக்கூடும். புதிய ஐபோனின் பின்புற பேனல் கண்ணாடியால் ஆனது என்றும், இது வயர்லெஸ் (மேக்சேஃப்) சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார்.

    • செல்போன் கடுமையாக எரிந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது.
    • எரியும் தொலைபேசியை தனது பாக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே எடுத்து வீசினார்.

    நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றிக்கு கேரண்டி அளிப்பதால் ஆப்பிள் ஐபோன் அதிகம் வாங்கப்படும் போன் பிராண்ட் ஆக உள்ளது.

    ஆனால் உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் ஒரு நபரின் பாக்கெட்டிற்குள் ஆப்பிள் ஐபோன் 13 வெடித்துச் சிதறியுள்ளது.

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, வெடிப்புக்கு பிறகு செல்போன் கடுமையாக எரிந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது. சாதனம் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது ஏற்பட்ட வெடிப்பில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    ஆதாரங்களின்படி, அந்த நபர் சில நாட்களுக்கு முன்புதான் ஐபோன் 13 ஐ வாங்கியிருந்தார். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    பாக்கெட்டில் வைத்திருந்தபோது திடீரென போன் வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அந்த நபர் வலியால் அலறி, எரியும் தொலைபேசியை தனது பாக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே எடுத்து வீசினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

    • 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது.
    • போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. 2023-ம் ஆண்டிற்கான கோடை கால பிரீமியர் ஏலத்தை எல்.சி.ஜி. நிறுவனம் நடத்தியது.

    இதில் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்ப விலையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் முடிவில் அந்த ஐ-போன் 1 லட்சத்து 90 ஆயிரத்து 322 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகி உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.56 கோடி ஆகும். இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

    • டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.

    இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.

    நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.

    இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.

    2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

    • நாளை முதல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
    • டெலிவரி வருகிற 28-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    இன்றைய அன்றாட தேவைகளில் செல்போனும் ஒன்றாகி விட்டது. புதுப்புது மாடல்களில் செல்போன்களை வாங்கி பயன்படுத்தினாலும் மற்றவர்கள் பயன்படுத்தும் புது மாடல், பிராண்டுகளின் மோகம் அதிகரிக்கத்தான் செய்யும். அதன்படி வாடிக்கையாளர்களுக்காகவே புதுப்புது மாடல்களை செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டு தான் வருகின்றன.

    இந்த நிலையில், உலக அளவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய iPhone 16e மாடலை நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாளை முதல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது. டெலிவரி வருகிற 28-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    கருப்பு, வெள்ளை நிறங்களில் Apple Intelligence உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 16 சீரிஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.59,900. இந்தியாவில் ஐபோன் 16s-ன் விலை ரூ.79,900- ஆகும். தற்போது ரூ.20 ஆயிரம் வித்தியாசத்துடன் 16e மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 16e-யின் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.69,900, அதே சமயம் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.89,900.



    ஐபோன் 16e-ல் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, பாதுகாப்பிற்காக ஃபேஸ் ஐடி அமைப்பைக் கொண்டுள்ளது. ஐபோன் SE தொடரில் காணப்படும் மியூட் சுவிட்சுக்கு பதிலாக ஆக்ஷன் பட்டனை கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுகலாம். ஆப்பிள் ஐபோன் 16e-ஐ USB-C போர்ட்டுடன் பொருத்தியுள்ளது.



    ஐபோன் 16e 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. இந்த சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் செயற்கைக்கோள் வழியாக செய்திகள் மற்றும் அவசரகால SOS போன்ற செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இது வரையறுக்கப்பட்ட செல்லுலார் கவரேஜ் உள்ள பகுதிகளில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கான ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் விபத்து கண்டறிதலும் அடங்கும், இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளை தானாகவே எச்சரிக்கும். இருப்பினும், இந்த அவசர அம்சம் அமெரிக்க சந்தைக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் கிடைக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ×