search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் 16e...
    X

    இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் 16e...

    • நாளை முதல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
    • டெலிவரி வருகிற 28-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    இன்றைய அன்றாட தேவைகளில் செல்போனும் ஒன்றாகி விட்டது. புதுப்புது மாடல்களில் செல்போன்களை வாங்கி பயன்படுத்தினாலும் மற்றவர்கள் பயன்படுத்தும் புது மாடல், பிராண்டுகளின் மோகம் அதிகரிக்கத்தான் செய்யும். அதன்படி வாடிக்கையாளர்களுக்காகவே புதுப்புது மாடல்களை செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டு தான் வருகின்றன.

    இந்த நிலையில், உலக அளவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய iPhone 16e மாடலை நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாளை முதல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது. டெலிவரி வருகிற 28-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    கருப்பு, வெள்ளை நிறங்களில் Apple Intelligence உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 16 சீரிஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.59,900. இந்தியாவில் ஐபோன் 16s-ன் விலை ரூ.79,900- ஆகும். தற்போது ரூ.20 ஆயிரம் வித்தியாசத்துடன் 16e மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 16e-யின் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.69,900, அதே சமயம் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.89,900.



    ஐபோன் 16e-ல் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, பாதுகாப்பிற்காக ஃபேஸ் ஐடி அமைப்பைக் கொண்டுள்ளது. ஐபோன் SE தொடரில் காணப்படும் மியூட் சுவிட்சுக்கு பதிலாக ஆக்ஷன் பட்டனை கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுகலாம். ஆப்பிள் ஐபோன் 16e-ஐ USB-C போர்ட்டுடன் பொருத்தியுள்ளது.



    ஐபோன் 16e 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. இந்த சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் செயற்கைக்கோள் வழியாக செய்திகள் மற்றும் அவசரகால SOS போன்ற செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இது வரையறுக்கப்பட்ட செல்லுலார் கவரேஜ் உள்ள பகுதிகளில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கான ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் விபத்து கண்டறிதலும் அடங்கும், இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளை தானாகவே எச்சரிக்கும். இருப்பினும், இந்த அவசர அம்சம் அமெரிக்க சந்தைக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் கிடைக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    Next Story
    ×