search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airtel"

    • சலுகைகளின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
    • அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரை ஒட்டி சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பழைய சலுகைகள் விலை மாற்றப்பட்டு, அவற்றின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

    ஏர்டெல் ரூ. 49 மற்றும் ரூ. 99 சலுகைகளின் விலை முறையே ரூ. 39 மற்றும் ரூ. 79 என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த இரு சலுகைகளும் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடருக்காக மாற்றப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் பயனர்களுக்கு தடையற்ற கனெக்டிவிட்டி வழங்கும்.

    ஏர்டெல் ரூ. 39 விலை சலுகையில் 20 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். ஏர்டெல் ரூ. 49 விலை சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ. 79 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    • சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், மாஸ்டர்கார்டு மற்றும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கான்டாக்ட்லெஸ் பேமண்ட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர், ஏர்டெல் தேங்ஸ் செயலியில் டிஜிட்டல் முறையில் கணக்கை துவங்க வேண்டும். பிறகு, அதே செயலியில் தங்களது கணக்கை லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை செய்துமுடிக்க ஒரு நிமிடமே ஆகும்.

     


    ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட் ஆனதும், பயனர்கள் டேப் அன்ட் பே (tap and pay) வசதி கொண்ட பாயின்ட் ஆஃப் சேல் (point of sale) மெஷின்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ வைத்து பேமண்ட் செய்துவிட முடியும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ. 1-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலுத்த முடியும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள என்.எஃப்.சி. (NFC) சிப் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்-இல் இயங்குகிறது. என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் கான்டாக்ட்லெஸ் பேமண்ட்களை ரிடெயில் ஸ்டோர், பி.ஒ.எஸ். (POS) டெர்மினல் மற்றும் இதர பேமண்ட் முறைகளில் மிக எளிதாக பணம் செலுத்த முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.85 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 130 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, ஸ்டிரெஸ் மானிட்டர் அம்சம், SpO2 மானிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரே, புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    • இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.
    • புதிய ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி மற்றும் மூன்று நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் போக்கோ C51 ஸ்மார்ட்போன் ஏர்டெல் பிரத்யேக எடிஷனாக ரூ. 5 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.

     


    தற்போது போக்கோ அறிவித்து இருக்கும் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனின் ஏர்டெல் எடிஷன் மாடல் மார்ச் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் சேவையை பயன்படுத்தாதவர்களுக்கு சிம் கார்டு வீட்டிலேயே டெலிவரி செய்யும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ M6 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக், ஒரியன் புளூ மற்றும் போலாரிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய போக்கோ M6 5ஜி ஏர்டெல் எடிஷனின் விலை ரூ. 8 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. 

    • போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.
    • குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்

    போக்கோ நிறுவனம் ஏர்டெல் உடன் கூட்டணி அமைத்து போக்கோ C51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இந்த கூட்டணியை நீட்டிக்கும் வகையில், ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதனை போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டான்டன் எக்ஸ் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி ஏர்டெல் கூட்டணியில் உருவான புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ நியோ சீரிசில் இடம்பெற்று இருக்குமா அல்லது போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.



    அதில், இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷனாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். புதிய சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் குறிப்பிடாமல், அது இந்திய சந்தையில் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த சாதனம் போக்கோ C சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் லாக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் தவிர போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ X6 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் போக்கோ X6 மற்றும் போக்கோ X6 ப்ரோ மாடல்களுடன் இணையும். 

    • வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது சிம்கார்டை மீட்டெடுக்க ரூ.1,792 செலுத்துமாறு கூறினர்.
    • பெண்ணின் பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லியை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஒருவர் சமீபத்தில் பீகாருக்கு சென்றார். அப்போது அவருக்கு ரோமிங் கட்டணமாக ரூ.1 லட்சம் பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டார்.

    அதில், இது ஒரு பயங்கரமான மோசடி. நான் பீகாரில் உள்ள வால்மீகி நகரில் இருக்கிறேன். ஏர்டெல் எனக்கு ரூ.1 லட்சம் ரோமிங் பில் அனுப்பி உள்ளது. நான் இந்தியாவிற்குள்ளேயே தான் பயணம் செய்துள்ளேன். எல்லை தாண்டி எங்கும் செல்லவில்லை. சர்வதேச ரோமிங்கிற்கும் ஒப்புதல் அளிக்காத நிலையில் எனக்கு இந்தளவு ரோமிங் பில் வந்துள்ளது.

    இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது, எனது சிம்கார்டை மீட்டெடுக்க ரூ.1,792 செலுத்துமாறு கூறினர். பின்னர் எனது மொபைல் எண் துண்டிக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தார். பெண்ணின் இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
    • ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

    அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

    ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

    • ஏர்டெல் நிறுவனம் இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • பயனர்கள் டேட்டா கட்டுப்பாடின்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் துவங்கிவிட்டது. நாடு முழுக்க கிரிக்கெட் ஆர்வம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் பயனர் தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.

    புதிய சலுகைகள் விலை ரூ. 99 மற்றும் ரூ. 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஏர்டெல் ரூ. 99 சலுகையில் இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எவ்வித டேட்டா கட்டுப்பாடுகளும் இன்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும். ரூ. 49 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இரு சலுகைகளிலும் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. ஏர்டெல் ரூ. 49 சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.

    மொபைல் டேட்டா சலுகைகள் மட்டுமின்றி, ஏர்டெல் டி.டி.ஹெச். ஸ்டார் நெட்வொர்க் உடன் கூட்டணி அமைத்து கிரிக்கெட் பயனர்களுக்காக பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் எளிதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். 

    • ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
    • ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

    பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.

     

    ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ரூ. 999 சலுகை பலன்கள்:

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.

    இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    • ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
    • இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில், தனது C51 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது இதே ஸ்மார்ட்போனின் ஏர்டெல்-எக்ஸ்குளூசிவ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

     

    போக்கோ C51 ஏர்டெல்-லாக்டு வேரியன்ட் விவரங்கள்:

    புதிய சலுகையின் கீழ் போக்கோ C51 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 5 ஆயிரத்து 999 எனும் விலையில் வாங்கிட முடியும். இதில் ஏர்டெல் பிரத்யேக பலன்களும் அடங்கும். பலன்களை பொருத்தவரை 7.5 சதவீதம் அதிகபட்சம் ரூ. 750 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 50 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

    50 ஜிபி இலவச டேட்டா, ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் பயனர்கள் மாதம் ஒரு வவுச்சரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு வவுச்சருக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. புதிய ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், பயனர்கள் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    சாதனத்தை அன்லாக் செய்வதற்கு பயனர்கள் ஸ்மார்ட்போனினை செட்-அப் செய்த 24 மணி நேரத்திற்குள் ஏர்டெல் சிம் ஒன்றை செருகி, குறைந்தபட்சம் ரூ. 199 விலை கொண்ட ஏர்டெல் ட்ரூலி அன்லிமிடெட் ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

    இவற்றை செய்த பிறகு, இரண்டாவது சிம் கார்டு ஸ்லாட்-இல் ஏர்டெல் இல்லாத சிம் கார்டை பயன்படுத்த முடியும். ஏர்டெல் லாக் செய்யப்பட்ட போக்கோ C51 ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை (ஜூலை 18) ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக துவங்க இருக்கிறது.

    போக்கோ C51 அம்சங்கள்:

    6.52 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்

    4 ஜிபி ரேம்

    3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்

    ஆன்ட்ராய்டு 13 கோ எடிஷன்

    8MP பிரைமரி கேமரா

    டெப்த் சென்சார்

    5MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    3.5mm ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ

    பின்புறம் கைரேகை சென்சார்

    • ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

    இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?

    ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

    பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.

    ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது. இதனுடன் 17 ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

    புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

     ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை

    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

    நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

     ஏர்டெல்

    விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
    ×