xAI நிறுவனத்தை வாங்கி உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய எலான் மஸ்கின் SpaceX

எக்ஸ்ஏஐ (xAI) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினார். இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடையும்.
xAI நிறுவனத்தை வாங்கி உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய எலான் மஸ்கின் SpaceX
Published on

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI செயலிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்ற நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்நிலையில், எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX, அவரது AI நிறுவனமான xAI நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SpaceX மற்றும் xAI ஆகிய இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே அதிக மதிப்பு மிக்க தனியார் நிறுவனம் என்ற பெயரை SpaceX பெறுகிறது. இதன்மூலம் X வலைதளம், Grok Al, Grokpedia என அனைத்தும் SpaceX நிறுவனத்தின்கீழ் செல்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com