என் மலர்
நீங்கள் தேடியது "எலான் மஸ்க்"
- அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன.
- எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து 'X' தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
- திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம்.
- என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான்
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது மனைவி, குடும்பம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
அந்த பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். இதுகுறித்த முழு தகவல் தெரியவில்லை.
அதேபோல நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு 'சேகர்' என சூட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர்.
- செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் எக்ஸ் தளம் உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இன்று (நவம்பர் 18) செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 5 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.
X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், மீண்டும் எக்ஸ் வலைத்தளம் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
- உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்.
- பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த கோரிக்கை நிறைவேறினால், உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) தொகையை, ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளவனர்.
இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார்
- பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.
எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த டெமோ நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார்
டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். '
அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டாலராக சற்று இறக்கம் கண்டது.
இதனால் அவர் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலும், மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சொத்துகளின் இந்திய மதிப்பு ரூ.44.33 லட்சம் கோடியாகும். இதே வேகத்தில் அவரது சொத்து மதிப்புகள் உயர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தனிநபரின் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் உலகின் முதல் டிரில்லியனராக அவர் இடம் பிடிப்பார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
- எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.
அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
- இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்..
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்..
முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், "எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது" என்று தெரிவித்தார். டிரம்ப் - எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர்.
சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து இருவரும் உரையாடினர். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் நட்பு துளிர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
- மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.
- பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் சில மணிநேரங்கள் 2 ஆம் இடத்தில் இருந்தார்.
- 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
ப்ளூம்பர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்து அசத்தினார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.
ஆரக்கிள் நிறுவன பங்குகளில் திடீர் உயர்வால் உலக பணக்காரர்களின் பட்டியலில் சில மணிநேரம் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்திருந்தார்.
தற்போது 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் தன்னுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
383 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் லேரி எல்லிசன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 264 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 3 ஆம் இடமும் 252 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.
- எலிசனின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
- ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார்.
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரராக ஆகி உள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தி உள்ளார்.
ஆரக்கிள் இணை நிறுவனரின் மொத்த நிகர மதிப்பு எலான் மஸ்க்கின் 385 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது 393 பில்லியன் டாலர்களைத் தொட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளின் பங்குகள் 43 சதவீதம் வரை உயர்ந்ததால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது இடத்தை எலோன் மஸ்க் இழந்துள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
ஆரக்கிளை இணைந்து நிறுவிய 81 வயதான எலிசன், தற்போது தலைவராகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ளார். அவரது நிகர மதிப்பில் பெரும்பகுதி தரவுத்தள மென்பொருள் நிறுவனத்தில் உள்ளது.
தற்போது எலிசன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
- மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார்.
- உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள்.
வரி விதிப்பு விவகாரம் மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்தியாவை விமர்சிக்கும் பீட்டர் நவரோவின் கருத்துகளின் உண்மைதன்மை சரிபார்ப்பு நடவடிக்கையை எக்ஸ் வலைதள நிர்வாகம் எடுத்து உள்ளது. இதனால் கோபம் அடைந்த பீட்டர் நவரோ எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது:-
மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார். உண்மை சரிபார்ப்பு குறிப்புகள் முட்டாள்தனமான குறிப்புகளாக உள்ளன. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷிய எண்ணெயை வாங்குகிறது. ரஷியா உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு முன்பு இந்தியா ரஷிய எண்ணெயை வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்க வேலைகளை எடுப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.






