எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியது - பயனர்கள் அவதி

X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர்.செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியது - பயனர்கள் அவதி
Published on

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் எக்ஸ் தளம் உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இன்று (நவம்பர் 18) செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 5 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.

X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், மீண்டும் எக்ஸ் வலைத்தளம் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com