என் மலர்tooltip icon

    உலகம்

    10 ஆண்டுகளில் நிலவில் வீடுகள் கட்டி குடியேறுவோம்- எலான் மஸ்க்
    X

    10 ஆண்டுகளில் நிலவில் வீடுகள் கட்டி குடியேறுவோம்- எலான் மஸ்க்

    • நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது.
    • நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை இலக்காக கொண்டிருந்தார். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையிலான ஸ்டார்ஷிப் ரக விண்கலன்களை தவிர்த்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு பால்கன், ராப்டர் உள்ளிட்ட ராக்கெட்களை தயாரித்து கொடுத்து வருகிறது.

    இந்தாண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலன் ஒன்றை அனுப்பி இதற்கான முயற்சியில் இறங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அந்த திட்டத்தை தற்போது தள்ளிப்போடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது. எனவே நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம். இந்தாண்டு இறுதிக்குள் அங்கு விண்கலன் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்கி மக்களை குடியேற செய்வோம்" என்றார். இந்தாண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×