search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்லா"

    டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
    டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிடம் இருந்து, அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்ப்ட்டிருந்தது. அதில் “டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும்" என்றும், "நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டீர்கள் என்று கருதுவோம்" என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை மென்பொருள் தயாரிப்பாளரான அட்லாசியன் கம்பெனியில் இணை நிறுவனரான, ஸ்காட் ஃபார்குஹார், எலான் மஸ்க்கின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உத்தரவு "1950 களில் இருந்ததைப் போன்றது" என்று கேலி செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    elon musk

    எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்கிற கொள்கை அமெரிக்காவை சேர்ந்த கம்பெனிகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அட்லாசியன் கம்பெனியின் வளர்ச்சிக்காக 2026ம் ஆண்டுக்குள் 25 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், டெஸ்லா ஊழியர்கள் யாரேனும் ஆர்வமாக உள்ளீர்களா? எனவும் ஸ்காட் ஃபார்குஹார் கேள்வி எழுப்பி உள்ளார்.
    ×