என் மலர்
கார்

3 நொடிகளில் 100 கிமீ வேகம் - அதிவேக காரை அறிமுகம் செய்த டெஸ்லா
- டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
- புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் முற்றிலும் புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மின்சார SUVயின் உயர் செயல்திறன் மாடலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. ஜூனிபர் அப்டேட் என்றும் அழைக்கப்படும் புதிய வேரியண்ட், இப்போது டெஸ்லாவின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கப்பட்ட RWD மற்றும் நீண்ட தூர வேரியண்ட்களின் மேல் அமர்ந்திருக்கிறது.
ஸ்டான்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும்போது, "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கார்பன் ஃபைபரால் ஆன பின்புற ஸ்பாய்லர், பிரத்யேகமாக 21-இன்ச் அராக்நிட் 2.0 அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் கொண்ட வெளிப்புற தொகுப்பைப் பெறுகிறது. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட காற்றியக்கவியல் அதன் செயல்திறன் சார்ந்த நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றன.
உள்ளே, கார்பன் ஃபைபர் அசென்ட்கள், அல்ட்ரா HD தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 16-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் ஹீட்டிங், கூலிங் வசதியுடன் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் முன்புற இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது சுமார் 460bhp பவர் மற்றும் 751Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது SUV மணிக்கு 0–100 கிலோமீட்டர்கள் வேகத்தை மூன்று வினாடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் அதன் பிரிவில் வேகமான மாடல்களில் ஒன்றாகும்.






