என் மலர்
நீங்கள் தேடியது "electric vehicle"
- அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதாக தகவல் வெளியானது.
- பிஸ்கர் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி- ஓஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். மெல்லிய எலெக்ட்ரிக் கார்கள், இருசக்கர வாகனங்கள் என இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவல்களில், அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டன. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை விரைவில் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. டெஸ்லா நிறுவனம் டாப் என்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகன துறையில் அதிநவீன தொழில்நுட்பம், நீண்ட தூரம் பயணம் செய்யும் திறன், அதிவேக சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தானியங்கி வாகன முறை என பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் டெஸ்லா பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிஸ்கர் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் பிஸ்கர் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி-யான ஓஷன் மாடல், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் அமெரிக்க சந்தையில் டெஸ்லா மாடல் Y-க்கு போட்டியாக அமைகிறது.
பிஸ்கர் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. பிஸ்கர் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
- கடந்த மே மாதம் 1 லட்சத்து 05 ஆயிரம் யூனிட்கள் விற்பனையானது.
- இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிய தொடங்கி உள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை கடந்த சில மாதங்களாக விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. இனி வரும் மாதங்களில் இந்த நிலை முழுமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த மானியம் குறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 2023 மாதத்தில் மட்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை 60 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. 2013 ஆண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 2 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 7.4 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், தான் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை சரியத் தொடங்கி உள்ளது.

கோப்புப்படம்
கடந்த மே மாதம் 1 லட்சத்து 05 ஆயிரம் யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூன் மாத விற்பனை 35 ஆயிரத்து 464 ஆக சரிந்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 57 சதவீதம் குறைவு ஆகும். ஏப்ரல் மாதத்தில் 66 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்த நிலையிலேயே உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க ஆரம்பித்தனர்.
விற்பனை கணிசமாக அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த மானிய தொகையை குறைத்து விட்டது. ஜூன் 1-ம் தேதி மானிய குறைப்பு அமலுக்கு வந்த நிலையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை குறைய தொடங்கி இருக்கிறது.
- இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
- தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் அதிகம்.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திறன், எளிய பயன்பாடு மற்றும் பராமரிப்பு மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
உலகம் முழுக்க செகன்ட் ஹேண்ட் எனப்படும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை விலைக்கு வாங்கி, அதனை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே வழக்கம் வாகன பயன்பாட்டிற்கு அதிகம் பொருந்தும். அந்த வகையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்க திட்டமிடுகின்றீர்களா? இவ்வாறு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையாகும் அளவுக்கு எலெகட்ரிக் வாகனங்கள் விற்பனையாவதில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விற்பனையை எலெக்ட்ரிக் வாகனங்கள் எட்டுவதற்கு மேலும் சில காலம் ஆகும்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சீராக இருந்து வருகிறது. இதே போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் துறை மீதான விருப்பமும் அதிகரித்து வருவதால், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைப்பது, தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.
பேட்டரி பேக் ஆயுள்:
எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று இது. தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் உண்டு. சீரற்ற சார்ஜிங் பழக்கங்கள் இதனை வெகு விரைவில் ஏற்படுத்த செய்யும். பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் வாகனங்களில் என்ஜினில் ஏற்படும் விசித்திர சத்தம் கொண்டு என்ஜின் கோளாறை கண்டறிந்து விடலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை பேட்டரியை முழுமையாக தீர்ந்து போக செய்து அதன்பிறகு மீண்டும் முழு சார்ஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது பேட்டரியை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்ததை விட அதிக நேரம் ஆகும் பட்சத்திலோ அல்லது விரைவில் சார்ஜ் இறங்கும் பட்சத்திலோ பேட்டரி பாழாகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். ஒருவேளை பேட்டரி பாழாகும் பட்சத்தில் அதனை எளிதில் சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியும்.

தேய்மானம்:
பிரீமியம் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைந்து தேய்மானம் ஆகிவிடும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரீமியம் மாடலாகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே பயன்படுத்தப்பட்ட எலெர்க்ரிக் வாகனத்தை வாங்க விரும்புகின்றனர்.
பராமரிப்பு:
பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரித்தல் மிகவும் எளிமையான காரியம் ஆகும். இதன் பவர்டிரெயினில் அசையும் பாகங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இதன் காரணமாக பராமரிப்பு கட்டணம் பெருமளவு குறைவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் அதிகம் ஆகும்.
எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதால், ஏற்படும் மின் கட்டண செலவு குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.

சார்ஜிங் உள்கட்டமைப்பு:
எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது சார்ஜிங் உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். ஏத்தர் 450 போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவோர், வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்து வைப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும்.
பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணம்:
எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பது மிகவும் எளிய காரியம் ஆகும். இதற்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் கட்டணம் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உபயோகிப்பாளர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம்:
எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள தொழில்நுட்பம் முன்பு இருந்ததை விட பெருமளவு அதிநவீனமாக மாறிவிட்டன. இவற்றில் எளிதில் மென்பொருள் அப்டேட் வழங்கும் நிலை வந்துவிட்டது. சமீபத்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பழைய மாடலை விட பல விஷயங்களில் மேம்பட்டவைகளாகவே இருக்கின்றன.
- எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
- எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு.
எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவது சாதாரண காரியம் தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளிலும் பயனர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் நிலையிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் சிக்காமல் இருக்கவும், எலெக்ட்ரிக் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ள வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

உடனே சார்ஜ் செய்ய வேண்டாம்:
எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக வாகனத்தை பயன்படுத்திய உடனே அதனை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, பேட்டரி ஆயுளும் மேம்படும்.
நீண்ட நேர சார்ஜிங்:
எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவுக்கு சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை பெருமளவு பாதிக்கும். மேலும் அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக வாகனம் தீப்பிடித்து எரிய அதிக வாய்ப்புகள் உண்டு.
மழையின் போது சார்ஜிங்:
நீரும், மின்சாரமும் ஒன்றாகும் போது ஏற்படும் விளைவு அனைவரும் அறிந்ததே. வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பான வாட்டர் ப்ரூஃபிங் வசதி வழங்கினாலும், சில சமயங்களில் சிறு ஓட்டை மூலம் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் மழை பெய்யும் போது வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

சார்ஜர்களில் கவனம் அவசியம்:
எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் மையத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதனை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
பேட்டரி பயன்பாடு:
எலெக்ட்ரிக் வாகன பேட்டரியை முழுமையாக தீர்ந்து போகும் வரை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கிற்கு அழுத்தம் அதிகரித்து, அதன் ஆயுளை குறைக்கும். இதோடு பேட்டரி பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும்.
- ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டின் செய்யாறு பகுதியில் புதிய உற்பத்தி ஆலை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது.
ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மாடல்களும் அடங்கும். பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்பீல்டு, எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், எலெக்ட்ரிக் ஹிமாலயன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இது தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பொருத்தவரை முதலில் அதிக விலை கொண்ட மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின் இதைத் தொடர்ந்து பிரத்யேக மோட்டார்சைக்கிள், இறுதியில் குறைந்த விலை பைக் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவை வரும் ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகமாகும். தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு மாடல்களின் அடிப்படையில், இந்த திட்டம் நிறுவன மாடல்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு உருவாக்கி வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் L1A எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றொரு பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த பிளாட்ஃபார்ம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.
Photo Courtesy: Autocar
- ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் கர்நாடகாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எலெக்ட்ரிக் மோட்டார்களை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்து இருக்கிறது. இதற்காக ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய இ பிளாட்ஃபார்மை அறிவித்துள்ளது. இது ஃபிக்சட் பேட்டரி, கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் மிட் ரேஞ்ச் பிரிவு என பல்வேறு விதமான எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
பிராஜக்ட் வித்யுட் எனும் திட்டத்தின் கீழ் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முதல் வாகனமாக மிட் ரேஞ்ச் எலெக்ட்ரிக் மாடல் இருக்கும். இரண்டாவது மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்கும். இது ஹோண்டா மொபைல் பவர் பேக் இ பயன்படுத்தும்.

புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதோடு, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சார்ஜிங் உள்கட்டமைப்புகளை கட்டமைக்க இருக்கிறது. இதற்காக நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிகமான நெட்வொர்க் டச்பாயிண்ட்களில் சார்ஜிங் மையங்களை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது.
இதுதவிர பேட்டரி மாற்றும் மையங்களை பெட்ரோல் நிலையங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் மற்றும் இதர பொது இடங்களில் கட்டமைக்க ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நரசபுறா ஆலை முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உபகரணங்களான பேட்டரிகள் மற்றும் பிசியுக்களை பயன்படுத்தவுள்ளன. மேலும் இந்த வாகனங்களுக்கான மோட்டாரை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.
- ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வெளியீடு பற்றிய அதிகராப்பூர்வ தகவல்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி ஹோண்டா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக ஆக்டிவா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது வரும் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலின் பேட்டரியை கழற்றும் வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது.

இதுதவிர K4BA எனும் குறியீட்டு பெயர் கொண்ட எலெக்ட்ரிக் மொபெட் ஒன்றை ஹோண்டா உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், இது ஹோண்டா நிறுவனத்தின் கழற்றி மாற்றக்கூடிய சேவையை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை ஹோண்டா நிறுவனம் 2021 வாக்கில் துவங்கியது.
இதனை தற்போது எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ஹோண்டா எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சற்று தாமதமாகவே களமிறங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவங்கி இந்த பிரிவில் அதிக கவனம் செலுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இது பற்றிய முழு விவரங்கள் மார்ச் 29 ஆம் தேதி தெரியவரும்.
- இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வாகன போர்டலில் இணையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று தெலுங்கானா மற்றும் லக்ஷதீப் பகுதிகளுக்கான விவரங்கள் மத்திய அரசு முனையத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

மத்திய அரசின் வாகன பதிவு முனையத்தில் உள்ள விவரங்களின் படி 2021 ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 யூனிட்கள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 யூனிட்கள் பதிவானது. இந்த வரிசையில், இந்த ஆண்டு துவங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 2.78 லட்சம் யூனிட்கள் பதிவாகி இருக்கின்றன.
நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி மக்களைவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் கிராம தூய்மை பணிக்காக மின்கலன் வண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அைழப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரூ.76.80 லட்சம் மதிப்பில் 29 ஊராட்சிகளுக்கு 31 மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் ஞானவேல் ஜே கே சீனிவாசன், தொண்டரணி செயலாளர் ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
- 2017 ஆம் ஆண்டு ஒகினவா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் முன்னணி இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒகினவா உற்பத்தி ஆலையில் இருந்து 2.5 லட்சமாவது வாகனம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் 2.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு இந்தியாவில் பணிகளை துவங்கிய ஒகினவா 2017 ஆண்டு சந்தையில் களமிறங்கி தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் ஒகினவா ரிட்ஜ் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் ஒகினவா பிரைஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மாணியம் பெற்ற முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் உள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது ஐபிரைஸ் பிளஸ், ஐபிரைஸ் ப்ரோ, லைட் மற்றும் ஆர்30 போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 2020 வாக்கில் ஒகினவா நிறுவனம் இந்தியவின் முதல் கஸ்டமைசேஷன் வசசதி கொண்ட B2B எலெக்ட்ரிக் இருசக்கர வானத்தை 2020 வாக்கில் அறிமக செய்தது.
2021 ஆண்டு இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த ஒகினவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒகினவா கேலக்ஸி ஸ்டோர்களை திறந்தது. இந்திய சந்தையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம், விற்பனையில் இத்தனை இலக்கை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒகினவா பெற்று இருக்கிறது.