search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்!
    X

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்!

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
    • டாடா நெக்சான் EV சீரிஸ் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய விற்பனையில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் டியாகோ EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 50 ஆயிரம் யூனிட்களை கடக்க இருக்கிறது.

    அந்த வகையில், அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபரத்தின் மூலம் பில்லியன் டாலர் வருவாய் எட்டி விடும். நெக்சான் மற்றும் டிகோர் EV மாடல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டிற்கு 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட்கள் வரை எட்டியிருக்கிறது. தற்போது 2024 நிதியாண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த 12-இல் இருந்து 18 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவகதாக தகவல் வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை சீராக வைத்திருக்கும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்ட முடியும்.

    இது மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் வியாபாரத்தில் இருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானது ஆகும். டியாகோ EV மாடலின் விலை அறிவிக்கப்பட்ட பத்தே நாட்களில், இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். இதுதவிர 50 ஆயிரம் பேர் டியாகோ EV மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆவர்.

    Next Story
    ×