search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tata motors"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது.
    • ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இது முதல் முறை ஆகும்.

    சென்னை:

    பிரபலமான சொகுசு கார்களில் ஜாகுவார் லேண்ட்ரோவர் காரும் ஒன்று.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்க உள்ளது.

    ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்படும். வாகன தொழிற்சாலை அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை கேண்டீன் ஊழியர்கள் இருவர் கைது.
    • ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீனில் சமோசாவில் ஆணுறை, கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அடைத்து விற்பனை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுவரை கேண்டீன் ஊழியர்களான பெரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின்படி, ஒரு தொழிலதிபர் இந்த கொடூரமான செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    குற்றம்சாட்டப்படும் தொழிலதிபரின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை அடுத்து, நிறுவனத்துடனான கேட்டரிங் ஒப்பந்தத்தை நாசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

    • இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா பன்ச் EV மாடல் 315 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் எலெக்ட்ரிக் மாடலுக்கு முதல் முறையாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், டாடா பன்ச் EV வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பன்ச் EV மாடலுக்கு முதல் முறையாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி டாடா பன்ச் EV டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே ரூ. 50 ஆயிரம் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    விற்பனையாகும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு விற்பனை மையம் சார்பில் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    டாடா பன்ச் EV ஸ்டான்டர்டு மாடலில் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    • இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று டாடா நெக்சான். நெக்சான் மாடல் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    அதிகளவு மாற்றங்களுடன் புதிய தோற்றம் மற்றும் அம்சங்களை நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் வேரியண்ட்களை மாற்றியமைத்து புதிதாக ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

     


    டாடா நெக்சான் புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 10 லட்சம் என்று துவங்குகிறது. நெக்சான் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் AMT வெர்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. முன்னதாக டாடா நிறுவனம் நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    பெட்ரோல் வெர்ஷன்களில் நெக்சான் ஸ்மார்ட் பிளஸ், பியூர், பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டீசல் வெர்ஷனில் பியூர் மற்றும் பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்குவது தவிர டாடா நெக்சான் மாடல்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் ணற்றும் 6 ஸ்பீடு AMT மற்றும் 7 ஸ்பீடு DCA டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    இதுபோன்ற ஒரு முதலீடு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு இதற்கு முன் வந்ததா என்று தெரியவில்லை.

    தொழில் முதலீட்டாளர்களை தமிழகம் ஈர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன.

    தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும்.
    • தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    • புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மாதாந்திர சலுகைகளை அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த சலுகைகள் எதுவும் பன்ச் EV மாடலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. மேலும் 2023 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மற்றும் 2024 புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    2023 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய மாடல்களுக்கு டாடா உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளனர். அதன்படி நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    நெக்சான் EV பிரைம் மாடலில் 129 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 143 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரில் உள்ள 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்சான் EV மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிரீன் போனஸ், 2024 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை கிரீன் போனஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர ரொக்க தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்திய சந்தையில் நெக்சான் EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மீடியம் ரேன்ஜ் வேரியண்டை இந்த சார்ஜர் 4.3 மணி நேரத்தில் 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். லாங் ரேன்ஜ் வேரியண்டில் இது 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடும்.

    • டார்க் எடிஷன் மாடல்களில் முழுமையான கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
    • நெக்சான் EV டார்க் எடிஷன் லாங் ரேன்ஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டார்க் எடிஷன் மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய வெர்ஷன்களிலும் கிடைத்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்களில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய டாடா நெக்சான் டார்க் எடிஷன் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. டாடா நெக்சான் EV டார்க் எடிஷன் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிரணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    தோற்றத்தில் நெக்சான் மற்றும் நெக்சான் EV டார்க் எடிஷன் மாடல்களில் முழுமையான கருப்பு நிறம் பூசப்பட்டு, பிளாக் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், டாடா லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இன்டீரியரிலும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் நிற லெதர் இருக்கைகள், டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் என அனைத்தும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

    தோற்றத்தில் மட்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், பவர்டிரெயின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய டார்க் எடிஷனிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 87 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 84.5 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இதன் பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT, DCT கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாடா நெக்சான் EV டார்க் எடிஷன் லாங் ரேன்ஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் எலெக்ட்ரிக் மோட்டார் 143 ஹெச்.பி. பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    • பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்தது.
    • இரு டாடா கார்களை பாதுகாப்பானவை என்று GNCAP அறிவித்து இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நெக்சான் மாடல் குளோபல் என்கேப் என்கிற GNCAP டெஸ்ட்களில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் நெக்சான் தொடர்ந்து பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்சான் வெர்ஷனும், பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பரிசோதனையில் டாடா நெக்சான் மாடல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முறையே 34-க்கு 32.22 புள்ளிகளையும் 49-க்கு 44.52 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது.

     


    சமீபத்தில் தான் டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களை பாதுகாப்பான கார்களாக GNCAP அறிவித்து இருந்தது. தற்போது நெக்சான் மாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. பாதுகாப்பிற்கு டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆறு ஏர்பேக், ESC, ABS மற்றும் EBD, சீட்பெல்ட் ரிமைன்டர்கள், ISOFX மவுன்ட்கள் ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் பிலைன்ட் வியூ மானிட்டர், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, ஃபாக் லேம்ப் மற்றும் கார்னெரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    • டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சமீபத்தில் எம்.ஜி. நிறுவனம் தனது கொமெட் EV விலையை குறைத்தது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டாடா நெக்சான் EV விலை அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

    உலகளவில் பேட்டரி செல்களின் விலை கணிசமாக குறைந்து இருப்பதே திடீர் விலை குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக டாடா நெக்சான் EV மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.

     


    டாடா நெக்சான் EV மாடலுக்கு குறைந்தபட்சமாக ரூ. 20 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து ஆயிரமும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டாடா டியாகோ EV மாடலின் விலை குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    தற்போதைய விலை குறைப்பு டாடா நெக்சான் EV மற்றும் டாடா டியாகோ EV தவிர டாடாவின் இதர எலெக்ட்ரிக் கார்களுக்கு பொருந்தாது. சமீபத்தில் எம்.ஜி. நிறுவனமும் தனது கொமெட் எலெக்ட்ரிக் காரின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    • மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது.
    • உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளித்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக டாடா கர்வ் இருந்து வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா கர்வ் மாடல் இந்திய சந்தையில் அதிக போட்டியை ஏற்படுத்தும் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட டாடா கர்வ் டீசல் மாடல் உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளித்தது. இந்த மாடலின் புகைப்படங்களை உற்று நோக்கும் போது, அதன் இன்டீரியர் நெக்சான் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

     


    அதன்படி டாடா கர்வ் இன்டீரியரில், மல்டி-லேயர் டேஷ்போர்டு, 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளேவுக்கான 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் நெக்சான் மாடலில் உள்ளதை போன்ற தோற்றம் கொண்டுள்ளன. இத்துடன் ஸ்விட்ச் கியர் மற்றும் பட்டன்களும் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன.

    பாதுகாப்பிற்கு டாடா கர்வ் மாடலில் பின்புறம் டிஸ்க் பிரேக், பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, பிலைன்ட் ஸ்பாட் மானிட்டர், ரியர் வைப்பர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆறு ஏர்பேக், ESC, ஹீல் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர், ஏர் பியூரிஃபயர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    • விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • டாடா எலெக்ட்ரிக் கார்களில் இதுபோன்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV மாடலை காட்சிக்கு வைத்தது. கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் EV மாடலுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது காப்புரிமை பெற்று இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    காப்புரிமை படங்களின் படி ஹேரியர் EV மாடல் சமீபத்திய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் புதிய அலாய் வீல்கள், டெயில் கேட் பகுதியில் ஹேரியர் EV என்ற பேட்ஜ்-க்கு மாற்றாக .ev என்ற பேட்ஜிங் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்திய டாடா எலெக்ட்ரிக் கார்களில் இவ்வாறான வழக்கம் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

     


    இந்த காரின் தோற்றம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், அந்த வெர்ஷனில் உள்ள அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஹேரியர் EV மாடலின் முன்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    டாடா ஹேரியர் EV மாடல் பலவித பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கிடைக்கும் என தெரிகிறது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த கார் டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய Acti.EV பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ. 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் மஹிந்திரா XUV.e8, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ×