search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Car"

    • அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய வின்ட்சர் அறிமுகம்.
    • எம்ஜி வின்ட்சர் மாடலில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வின்ட்சர் EV மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 9.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி வின்ட்சர் EV மூன்று வேரியண்ட்கள், நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் கொமெட் மற்றும் ZS EV மாடல்கள் வரிசையில், அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய வின்ட்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய வின்ட்சர் மாடலின் வெளிப்புறம் எம்ஜி சிக்னேச்சர் ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் 18 இன்ச் அளவில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ஃபுளோட்டிங் ரூஃப்லைன், பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், க்ரோம் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது.


     



    உள்புறம் பிளாக் மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்ட இன்டீரியர், 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. கொமெட் மாடலில் உள்ள ஓஎஸ் புதிய வின்ட்சர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், பின்புற இருக்கைகளில் ஏசி வென்ட்கள், மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.

    புதிய வின்ட்சர் மாடலில் வயர்லெஸ் போன் மிரரிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 360 டிகிரி கேமரா, கிளைமேட் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பின்புறம் ரிக்லைனிங் இருக்கை, பானரோமிக் சன்ரூஃப், வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    எம்ஜி வின்ட்சர் மாடலில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 331 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 134 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரட்டை வெண்கல பதக்கம் வென்றார்.
    • மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் .

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் இரட்டைப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • டாடா கர்வ் EV இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • டாடா கர்வ் EV மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரிக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் EV மற்றும் கர்வ் கூப் எஸ்யுவி மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்து விற்பனைக்கும் கொண்டுவந்தது. புதிய கர்வ் மாடல்களின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

    இது குறித்து வெளியான தகவல்களின் படி புதிய கர்வ் EV மாடல்களை வாங்க கணிசமான வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த காரை வாங்க ஏற்கனவே மூன்ற இலக்க எண்களில் முன்பதிவு கடந்துள்ளதாக தெரிகிறது.

     


    தற்போது டாப் என்ட் மாடல்கள் மட்டுமே விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்ட வினியோகத்தில் டாப் எண்ட் மாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா கர்வ் EV மாடல் 45 கிலோவாட் ஹவர் மற்றும் 55 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் இரு மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதில் 45 கிலோவாட் ஹவர் மாடலை டெலிவரி பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் எட்டு வார காலம் காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 55 கிலோவாட் ஹவர் வேரியண்ட்-ஐ டெலிவரி எடுக்க ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். 

    • இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
    • வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்தது.

    இந்தியாவில் தனது முதல் மின்சார கார் ஆன ஸியோமி SU7 காரை இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இந்த கார் அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டார்க் திறன் 838 ஆகும்.

    இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரால் மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதுதவிர, வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    இந்த கார் சிறப்பான பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் பிரேக் பிடித்தால் வெறும் 33.3 மீட்டர் தூரத்திலேயே நின்று விடும்.

    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

    • மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார்.
    • பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    மாஸ்கோ:

    இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

    மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமரவைத்து தனது மாளிகை வளாகத்தில் அதிபர் புதின் வலம் வந்தார். அப்போது குதிரை தொழுவத்தையும் பிரதமர் மோடிக்கு அவர் காண்பித்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது.

    • டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம்.
    • தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கார் கம்பெனிகளில் முன்னோடியாக திகழ்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம். இந்த மாடலை வெளிவந்ததில் இருந்தே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

    இதுவரை இந்தியாவில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட சியாரா யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. சியாரா கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மால்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அவர்களது சியாரா EV கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா EV கான்செப்ட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வடிவிலேயே காட்சியளித்தது.

    வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சியெரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இதே காரின் பெட்ரோல்/ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களையும் விற்பனைக்கு கொண்டுவர டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.
    • இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் eVX மாடலுடன் களமிறங்க உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாருதி eVX மாடல் அதன்பிறகு சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. வெளியீட்டுக்கு முன் மாருதி eVX மாடல் இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகின. அதில் இந்த காரின் அளவீடுகள் கிராண்ட் விட்டாராவுக்கு இணையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எனினும், முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், இந்த கார் அதிக இடவசதியை வழங்கும் என்று தெரிகிறது.

     


    மாருதி eVX எலெக்ட்ரிக் கார் மாடலில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதே காரின் குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், குறைந்த பேட்டரி திறன் கொண்ட மாடலின் விலை சற்றே குறைவாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்தலாம்.
    • இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது முதல் 180 கிலோவாட் டி.சி. பாஸ்ட் சார்ஜிங் மையத்தை திறந்தது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் இந்த சார்ஜிங் மையம் அமைந்துள்ளது. இதில் 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் டி.சி. திறன் கொண்ட முனைகள் உள்ளன.

    இதன் தொடர்ச்சியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 100 பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. இவற்றை ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்த முடியும்.

    முன்னதாக மும்பை, பூனே, ஆமதாபாத், ஐதராபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு என நாடு முழுக்க பத்து இடங்களில் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் நிறுவனம் திறந்து வைத்தது. இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.

    • இந்த காரில் அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.
    • இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கியா EV3 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கியா EV3 மாடல்- ஸ்டான்டர்டு மற்றும் GT லைன் என இரண்டு வேரியண்ட்களிலும், ஒன்பது விதமான நிறங்களிலும் கிடைக்கிறது.

    தோற்றத்தில் கியா EV3 மாடல் EV9 போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், இந்த காரில் போதுமான இடவசதி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கியா EV3 வெளிப்புறத்தில் பிளான்க்டு-ஆஃப் கிரில், L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.

     


    பின்புறத்தில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், அளவில் பெரிய பம்ப்பர், பிளாக் கிளாடிங், ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரிவர்ஸ் பார்கிங் கேமரா சென்சார்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஆஃப் செட் கியா லோகோ, இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் IRVM, ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்த காரில் 460 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த கார் 58.3 கிலோவாட் ஹவர் மற்றும் 81.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 283 டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். 

    • இந்த கார் EV9 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
    • வாகனத்தை சாவியின்றி ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கும்.

    கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய EV6 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய EV6 மாடலில் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் EV9 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.

    இந்த காரின் முன்புற கிரில் மாற்றப்பட்டு, புதிய பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு புதிய தோற்றம் வழங்குகிறது. இந்த காரில் புதிய டிசைன் கொண்ட பிளாக் & சில்வர் நிற அலாய் வீல்கள் எல்.இ.டி. லைட் பார் காருக்கு பிரத்யேக தோற்றத்தை வழங்குகிறது.

     


    உள்புறத்தில் வளைந்த பானரோமிக் ஸ்கிரீன் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த காரில் புதிய 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் வாகனத்தை சாவியின்றி ஸ்டார்ட் செய்ய அனுமதி செய்யும்.

    இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, மேம்பட்ட HUD, டிஜிட்டல் ரியர்வியூ மிரர், OTA அப்டேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. 2025 கியா EV6 மாடல் 77.4 கிலோவாட் ஹவர் மற்றும் 84 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. 

    • புரொடக்ஷன் வெர்ஷன் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • பிஸ்போக் எலெக்ட்ரிக் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடல் மே 23 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியா EV3 பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கார் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் புரொடக்ஷன் வெர்ஷன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்த எலெக்ட்ரிக் கார் சதுரங்க வடிவிலான தோற்றம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களின் படி இந்த கார் அதன் கான்செப்ட் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. கியா EV3 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிஸ்போக் எலெக்ட்ரிக் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

     


    இந்த பிளாட்ஃபார்மில் 400 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த கார் அதிவேக சார்ஜிங் வசதியை பெறாது. எனினும், இந்த காரின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV9 மூன்றடுக்கு இருக்கை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், கியா EV3 மாடலின் இந்திய வெளியீடு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.
    • சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்.

    உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா. இந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.

    அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது மற்றும் கடல்கடந்து தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சந்திப்பு தொடர்பாக எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் லி கியாங்கை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஷாங்காய் நாட்கள் தொடங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணைத்துள்ளார். 

    ×