என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கோடா"

    • பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த ட்ரெண்ட் தொடங்கியது.
    • இந்த ட்ரெண்ட்-ஐ, இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி வைத்தது.

    இணையத்தில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் 'Husky Dance' நடனம் இணையத்தில் ட்ரெண்டானது.

    'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது. பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

    இந்நிலையில், 'Husky Dance' ட்ரெண்ட்-ஐ தொடர்ந்து தற்போது கார்ப்ரேட் நிறுவனங்களின் மன்னிப்பு கடிதம் சமூக வலைதளங்களில் புதிய ட்ரெண்ட்-ஆக மாறி வைரலாகி வருகிறது

    ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன், ரிலையன்ஸ், அதானி, PVR, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவையாக மன்னிப்பு கடிதங்களை பதிவிட்டு வருகின்றன.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடங்கிய இந்த ட்ரெண்ட்-ஐ, இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
    • இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில், பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்ற 5 கார்களை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்..!

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

    டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் டி.என்.ஜி.ஏ. தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர் பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    கியா சைரோஸ்

    கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்.யூ.வி. கார் ஆகும். இந்த காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் உள்ளன.



    ஸ்கோடா கைலாக்

    இந்த கார் அதன் பிரிவிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது. இந்த காரில் 25 அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா ஹேரியர் EV

    டாடா ஹேரியர் EV காரை பொறுத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி. காராகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை எச்.டி. ரியர் வியூ கேமரா, 7 ஏர் பேக்குகள், 20-க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி கேமரா, I-VPAC உடன் கூடிய ESP, SOS கால் வசதி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.


    மாருதி டிசையர்

    இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக, மாருதி டிசையர் கார் திகழ்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்கிங், ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    • 7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை.
    • 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.

    ஸ்கோடா நிறுவனம் 5 சீட்டர் கொண்ட கோடியாக் லவுஞ்ச் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும். இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது.

    7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை. இதனால் பூட் இட வசதி 281 லிட்டரில் இருந்து 786 லிட்டராக அதிகரித்துள்ளது. 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.

    9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பனேரமிக் சன்ரூப், டூயல் வயர்லெஸ் சார்ஜர், 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த காரின் விலை ரூ.39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    இதுதவிர, இதே என்ஜின் திறன் கொண்ட ஸ்போர்ட் லைன் ரூ.43.76 லட்சம் என்றும் எல் அண்ட் கே சுமார் ரூ.45.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.

    காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    • ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.
    • புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கான்செப்ட் மாடல் "எபிக்" காரை அறிமுகம் செய்துள்ளது. எபிக் காரின் உற்பத்தி மாடல் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு வாக்கில் உலகளவில் அறிமுகமாக உள்ளது. மேலும் இது நிறுவனத்தின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

    ஸ்கோடாவின் அதிநவீன வடிவமைப்பு மொழியை முழுமையாக ஏற்றுக்கொண்ட முதல் மாடல் எபிக் ஆகும். இது மினிமலிஸ்ட் ஸ்டைலிங் மற்றும் காம்பேக்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. 4.1 மீட்டர் நீளத்தில், இந்த காம்பாக்ட் எஸ்யூவி ஐந்து பயணிகளை அமர வைக்க முடியும் மற்றும் விசாலமான 475 லிட்டர் பூட் இடவசதியை வழங்குகிறது. ஸ்கோடா நிறுவனம் புதிய எபிக் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் WLTP-தரத்தில் 425 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது.

    விலையை பொறுத்தவரை, புதிய எபிக் அதன் ICE வெர்ஷனான காமிக் அருகில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.

    வெளிப்புறத்தில், புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய T-வடிவ LED DRLகள் மற்றும் லோ-செட் ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரே நிற ஸ்பாய்லருடன் ஒரு வலுவான பம்பர் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புற கேபினில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பல்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் ஹாப்டிக் ஸ்க்ரோல் வீல்களுடன் கூடிய பொத்தான்கள் உள்ளன. ஸ்கோடா எபிக் மாடல் ஃபோக்ஸ்வாகனின் நவர்ரா ஆலையில், குழுவின் எலெக்ட்ரிக் அர்பன் கார் ஃபேமிலி திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படும். ஸ்கோடாவின் உலகளாவிய மின்சார வாகன வரிசையில் எபிக் மாடல் எல்ராக் மற்றும் என்யக் எலெக்ட்ரிக் மாடல்களுடன் இணைந்து, நிறுவனத்தின் உத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்.

    • ஸ்கோடாவின் கைலாக், குஷக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றில் இந்த அனிவர்சரி எடிஷன் வெளியிடப்படும்.
    • 360 டிகிரி கேமரா, அன்டர்பாடி லைட்டுகள் போன்ற வசதிகள் வேரியண்டுக்கு ஏற்ப வழங்கப்படும்.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், 25-வது அனிவர்சரி லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கோடாவின் கைலாக், குஷக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றில் இந்த அனிவர்சரி எடிஷன் வெளியிடப்படும். குஷக் மோன்டி கார்லோ, ஸ்லாவியா மற்றும் கைலாக்கில் உள்ள பிரஸ்டீஜ், சிக்னேச்சர் பிளஸ் டாப் வேரியண்ட்களில் இது கிடைக்கும்.

    அனிவர்சரி அடையாளத்துடன் தோற்றப் பொலிவு கொண்டதாக கார் அமைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, அன்டர்பாடி லைட்டுகள் போன்ற வசதிகள் வேரியண்டுக்கு ஏற்ப வழங்கப்படும்.

    1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. எம்.டி., 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. ஏ.டி. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஜி. என்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும். குஷக் மோன்டி கார்லோ அனிவர்சரி லிமிடெட் எடிஷனின் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.16.39 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.19.09 லட்சம். இதுபோல், ஸ்லாவியா மோன்டி அனிவர்சரி எடிஷன் தொடக்க விலை சுமார் ரூ.15.63 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் ரூ.18.33 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைலாக் அனிவர்சரி எடிஷன் (சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ்) சுமார் ரூ.11.25 லட்சம் மற்றும் சுமார் ரூ.12.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய மாடல்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன.
    • இது முறையே 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.

    ஸ்கோடா நிறுவனம் கைலாக் எஸ்யூவியை நவம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய பவர்டிரெய்ன் விருப்பத்தை வழங்க பிராண்ட் இப்போது திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா கார்களில் வழங்கப்படும் டர்போ எஞ்சின்களில் CNG இணக்கத்தன்மையை மதிப்பிடுவதில் ஸ்கோடா இந்தியா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது வரை, CNG மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    இருப்பினும், ஸ்கோடா நிறுவனம் இது கடினமான ஒருங்கிணைப்பாக இருக்காது. ஏனெனில் இந்த பிராண்டில் ஏற்கனவே சர்வதேச அளவில் கிடைக்கும் ஆக்டேவியா, ஸ்கேலா மற்றும் சிட்டிகோ போன் மாடல்களில் CNG பவர்டிரெய்ன் கிடைக்கிறது. மேலும், டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் CNG பவர்டிரெய்னை கொண்டு வரும் முதல் நிறுவனமும் ஸ்கோடா இல்லை. டாடா நெக்சான் ஏற்கனவே CNG யூனிட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினை வழங்குகிறது.



    விற்பனையில் உள்ள ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய மாடல்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் (MT மற்றும் AT) இணைந்து செயல்படுகிறது. இது முறையே 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.

    இந்திய சந்தையில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இந்த பிராண்ட் கைலாக்கிற்கு - ஆலிவ் கோல்ட், லாவா ப்ளூ, டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட் மற்றும் டீப் பேர்ல் பிளாக் என ஏழு வண்ண விருப்பங்களையும் வழங்குகிறது. ஸ்கோடா கைலாக்கின் விலை ரூ.7.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது இந்தியாவில் பிராண்டால் வழங்கப்படும் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் SUV ஆகும்.

    • ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் 295 ஹெச்பி திறன் வெளிப்படுத்துகிறது.

    ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஸ்கோடா என்யாக் RS iV இணைந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட என்யாக் கூப் மாடல் RS iV வடிவில் கிடைக்கிறது.

    புதிய என்யாக் மாடல் 295 ஹெச்பி பவர், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2-மோட்டார் டிரைவ் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் குறைந்தபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஸ்கோடா என்யாக் RS iV மாடலில் 82 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் டிராக்‌ஷன் மோட் கொண்டு எளிதில் வழுக்கும் சாலைகளிலும் பயணிக்க முடியும். RS மாடல் என்பதால் இந்த காரில் RS சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 21 இன்ச் அலாய் வீல் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்-ஆன் பாகங்கள் ஹை-கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரேடியேட்டர் கிரில், விண்டோ ஃபிரேம், மிரர் கேப்கள், ரியர் டிப்யுசர், ஸ்கோடா லோகோ உள்ளிட்டவை அடங்கும்.

    இத்துடன் க்ரிஸ்டல் ஃபேஸ்- ரேடியேட்டர் கிரில் பகுதியில் 131 எல்இடி பேக்லிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃபுல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி ரியர் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. RS மாடல் என்பதால் நான்-மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஆண்டு ஸ்லேவியா மாடல் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்லேவியா மாடலின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இம்முறை ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    அதன்படி ஸ்கோடா ஸ்லேவியா ஆம்பிஷன் 1.0 AT மாடல் விலை ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT விலை ரூ. 31 ஆயிரமும், ஆக்டிவ் 1.0 MT மற்றும் ஆம்பிஷன் 1.0 MT வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT (சன்ரூப் இல்லா) மாடல் மற்றும் ஸ்டைல் 1.5 MT விலை ரூ. 21 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 1.5 DSG விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைல் 1.0 AT மாடலின் விலை ரூ. 11 ஆயிரம் உயரந்துள்ளது. 

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா கார் புது வடிவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதில் உள்ள 1.4 லிட்டர் TSI என்ஜின் மற்றும் இ-மோட்டார் 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிருவனத்தின் ஆக்டேவியா RS மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிக சக்திவாய்ந்த RS மாடல் முற்றுலும் புது தோற்றத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்பை போன்றே இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

    முன்னதாக ஆக்டேவியா RS சீரிஸ் பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் கிடைத்தது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக ஆக்டேவியா RS மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த காரிலும் 1.4 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    புதிய ஆக்டேவியா பெட்ரோல் ஹைப்ரிட் கார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 13 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிக்கப் பெருமளவு சரிவடைந்துள்ளது.

    ஸ்கோடா ஆக்டேவியா RS245 மாடல் தற்போதைய மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஆக்டேவியா மாடலின் விலை ரூ. 36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க வினியோகம் செய்த கார்களின் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.
    • ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய தகவலும் இதில் வெளியாகி இருக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 7 லட்சத்து 31 ஆயிரத்து 300-க்கும் அதிக வாகனங்களை வினியோகம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.7 சதவீதம் குறைவு ஆகும். 2021 ஆண்டில் மட்டும் ஸ்கோடா நிறுவனம் 8 லட்சத்து 78 ஆயிரத்து 200 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உற்பத்தி மற்றும் வினியோக பிரிவில் ஏற்பட்ட சிக்கல்களே வினியோகம் குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. செமிகண்டக்டர் சிப் குறைபாடு, உக்ரைன் போர் விவகாரம், வினியோக சிக்கல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற சூழல் போன்ற காலக்கட்டத்திலும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 127.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 51 ஆயிரத்து 900 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது. 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 22 ஆயிரத்து 800 யூனிட்களை மட்டுமே வினியோகம் செய்து இருந்தது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா உள்ளது.

    உலகம் முழுக்க 1 லட்சத்து 41 ஆயிரம் ஆக்டேவியா யூனிட்களை ஸ்கோடா கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்தோடா கமிக் மற்றும் கோடியக் மாடல்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் ஆதிகத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக ஸ்கோடா நிறுவனம் விரைவில் வியட்நாம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் இரு கார்களில் சக்திவாய்ந்த எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • சக்திவாய்ந்த எஞ்சினுடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் 1.5 லிட்டர் TSI எஞ்சின் கொண்ட ஆம்பிஷன் வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்றும் ஸ்லேவியா ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    இந்த எஞ்சின் முன்னதாக குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதே எஞ்சின் தற்போது மிட் வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சக்திவாய்ந்த எஞ்சினை எதிர்பார்க்கும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

     

    புதிய வேரியண்டில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 150 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது 1.0 லிட்டர் எஞ்சினை விட 34 ஹெச்பி மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் சிலிண்டர் டிஆக்டிவேஷன் வசதி வழங்கப்படுகிறது. இது எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு சிலிண்டர்களை முழுமையாக ஆஃப் செய்துவிடும். குஷக் ஆம்பிஷன் 1.5 லிட்டர் MT மாடலின் விலை அதன் 1.0 லிட்டர் வேரியண்டை விட ரூ. 1.8 லட்சம் அதிகம் ஆகும்.

    விலை விவரங்கள்:

    ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 79 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 24 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×