என் மலர்
நீங்கள் தேடியது "கியா"
- வருகிற 10-ந்தேதி கியா நிறுவனம் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.
- இது 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் என்று தெரிகிறது.
2025-ம் ஆண்டு இறுதி மாதம் இன்று பிறந்துள்ளதால் பல புதிய மாடல்களுடன் இந்த ஆண்டு நிறைவு பெற உள்ளது. அதன்படி இம்மாதத்தில் வரவிருக்கும் மின்சார மற்றும் பெட்ரோல், டீசல் மாடல்கள் குறித்து பார்ப்போம்.
மாருதி சுசுகி இ விட்டாரா – டிசம்பர் 2
மாருதி சுசுகி தனது முதல் முழு மின்சார மாடலான இ விட்டாராவை நாளை (டிச.2) இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இ விட்டாரா காரில் Y-வடிவ DRLகள், கனெக்டெட் டெயில் லேம்ப் உள்ளன. சர்வதேச சந்தைகளில், இந்த மாடல் ADAS, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சரவுண்ட் லைட்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
டாடா ஹேரியர், சஃபாரி - டிசம்பர் 9
வருகிற 9ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் ஹேரியர் மற்றும் சஃபாரி பெட்ரோல் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சியரா எஸ்.யூ.வி.யுடன் புதிய பெட்ரோல் என்ஜின்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஹேரியர் மற்றும் சஃபாரி இரண்டும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டாருடன் வரும் என தகவல்.
கியா செல்டோஸ் - டிசம்பர் 10
வருகிற 10-ந்தேதி கியா நிறுவனம் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரவிருக்கும் செல்டோஸ், புதுப்பிக்கப்பட்ட டெல்லூரைடைப் போலவே, கியாவின் சமீபத்திய டிசைன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் - டிசம்பர் 2025
மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் கன்வெர்ட்டிபிள் மாடலை டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது, இருப்பினும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாடலில் 201 hp பவர், 300 Nm டார்க் உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இது 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் என்று தெரிகிறது.
- முன்பக்க பம்பரில் ஆல்-பிளாக் நிறம் மற்றும் இரண்டு வெளிப்படும் ஆரஞ்சு நிற டோ-ஹூக்குகள் உள்ளன.
- பின்புறத்தில் நீளமான எல்இடி டெயில்-லைட்டுகள் மற்றும் கியா லோகோ, டெல்லூரைடு எழுத்துக்களுடன் கூடிய எளிய டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
கியா நிறுவனத்தின் 2ஆம் தலைமுறை டெல்லூரைடு மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. டெல்லூரைடு என்பது கியாவின் முதன்மையான ஐசி என்ஜினால் இயங்கும் எஸ்யூவி மாடல் ஆகும். இது சர்வதேச சந்தையில் ஹூண்டாய் பாலிசேட் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய டெல்லூரைட்டின் வெளிப்புறம், 2022ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட முதல் தலைமுறை மாடலை விட முற்றிலும் புதிதாக காட்சியளிக்கிறது. இப்போது, டெல்லூரைடு எஸ்யூவி-யின் வடிவமைப்பு, கார்னிவல், சோரெண்டோ மற்றும் ஸ்போர்டேஜ் போன்ற புதிய கியா கார்களுடன் ஒற்றுப் போகும் வகையில் காட்சியளிக்கிறது.

இது செவ்வக கூறுகளுடன் கூடிய ஆல்-பிளாக் நிற கிரில் கொண்டுள்ளது. ஹெட்லைட் ஹவுசிங் நீளமாகவும் அதில் செங்குத்தாக இரண்டு டைலைட் ரன்னிங் லைட்கள் (DRLகள்) டர்ன் இன்டிகேட்டர்களாகவும் இயங்கும் படி பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்பக்க பம்பரில் ஆல்-பிளாக் நிறம் மற்றும் இரண்டு வெளிப்படும் ஆரஞ்சு நிற டோ-ஹூக்குகள் உள்ளன.
மேலும், பின்புறத்தில் நீளமான எல்இடி டெயில்-லைட்டுகள் மற்றும் கியா லோகோ, டெல்லூரைடு எழுத்துக்களுடன் கூடிய எளிய டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பின்புறம் சுத்தமாக தெரிகிறது. மறுபுறம், பின்புற பம்பரில் முன்பக்கத்தில் உள்ள அதே ஆரஞ்சு நிற டோ ஹூக்குகள் உள்ளன.
- இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம், கேரன்ஸ் சீரிசில் CNG வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 11.77 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டீலர் தரப்பில் ஃபிட்டிங் செய்து தரப்படும் கேரன்ஸ் CNG பிரீமியம் (O) வேரியண்டின் விலையை விட ரூ. 77,900 அதிகம் ஆகும். இதன் விலை ரூ. 10.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கேரன்ஸ் மாடலில் உள்ள CNG கிட் அரசு அனுமதி பெற்று லோவாடோ வழங்குகிறது. இது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் மூன்றாம் தரப்பு உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 113bhp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.

அம்சங்களைப் பொறுத்தவரை, கியா கேரன்ஸ் CNG காரில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வழிகாட்டுதல்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12.5-இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆறு ஏர்பேக்குகள், 5 டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், வீல் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் TPMS போன்ற அம்சங்கள் உள்ளன.
- அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
- இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில், பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்ற 5 கார்களை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்..!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் டி.என்.ஜி.ஏ. தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர் பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
கியா சைரோஸ்
கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்.யூ.வி. கார் ஆகும். இந்த காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் உள்ளன.

ஸ்கோடா கைலாக்
இந்த கார் அதன் பிரிவிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது. இந்த காரில் 25 அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஹேரியர் EV
டாடா ஹேரியர் EV காரை பொறுத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி. காராகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை எச்.டி. ரியர் வியூ கேமரா, 7 ஏர் பேக்குகள், 20-க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி கேமரா, I-VPAC உடன் கூடிய ESP, SOS கால் வசதி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மாருதி டிசையர்
இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக, மாருதி டிசையர் கார் திகழ்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்கிங், ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
- புதிய மாற்றம் காரணமாக இந்த காரின் விலை ரூ. 16.28 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன.
- இந்த புது வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேரன்ஸ் கிளாவிஸ் மாடலை வேரியண்ட்கள் அடிப்படையில் மாற்றங்கள் செய்திருக்கிறது. அதன்படி கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடல் தற்போது புதிய HTX(O) வேரியண்ட் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் ஆறு இருக்கைகள் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய மாற்றம் காரணமாக இந்த காரின் விலை ரூ. 16.28 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன. HTX வேரியண்ட்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய HTX(O) வேரியண்ட் கியா கிளாவிஸில் எட்டு ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், டிரைவ் மோட்கள் (சுற்றுச்சூழல், நார்மல் மற்றும் ஸ்போர்ட்), ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய EPB ஆகியவை இடம்பெற்றுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த புது வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTK+ வேரியண்ட் (1.5 டர்போ யூனிட் மற்றும் DCT, 1.5 டீசல் AT) மற்றும் HTK+(O) (1.5 டர்போ DCT) வேரியண்ட்களில் ஆறு இருக்கைகள் கொண்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் புது வேரியண்ட் விவரங்கள்:
6 இருக்கைகள் கொண்ட HTK+ ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் 1.5 TGDi ரூ.16.28 லட்சம்
HTK+ 1.5 CRDi VGT என்ஜின் மற்றும் 6 இருக்கைகள் கொண்ட வேரியண்ட் ரூ.17.34 லட்சம்
HTK+ (O) ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் G1.5 TGDi (6 இருக்கைகள்) ரூ.17.05 லட்சம்
HTX (O) ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் G1.5 TGDi (6- மற்றும் 7-இருக்கைகள் இரண்டும்) ரூ.19 லட்சம்
- கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும்.
- டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும்.
கியா நிறுவனம் வயர்லெஸ் போன் மிரரிங் அடாப்டர் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 344 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது வயர்லெஸ் போன் மிரரிங் கொண்ட அனைத்து கியா மாடல்களிலும் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை கியா டீலர்ஷிப்கள் மற்றும் சேவை மையங்களில் வாங்கி பொருத்தலாம்.

பல்வேறு கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும். ஏனெனில் அதன் டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும். கியா நிறுவனம் ஏற்கனவே அதன் முழுமையான கார்களின் டாப் எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜர்களை வழங்குகிறது.
வயர்டு போன் மிரரிங் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் ஹூண்டாய் இதை வழங்கத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆப்ஷன் வருகிறது.
- கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-யின் பெரிய அளவு காரணமாக, மேற்கூறிய பேட்டரி பேக்குகளால் வழங்கப்படும் இறுதி சான்றளிக்கப்பட்ட வரம்பு மாறக்கூடும்.
- 51.4 kWh வேரியண்டிற்கு 4 மணிநேரம் 50 நிமிடங்கள் ஆகும்.
கியா இந்தியா நிறுவனம் மே 2025 இல் இந்திய சந்தையில் கேரன்ஸ் கிளாவிஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலைப் தொடர்வதற்காக, நிறுவனம் அதே பெயரைக் கொண்ட மின்சார பவர்டிரெய்ன் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, கேரன்ஸ் கிளாவிஸ் EV. இந்த EV சில காலமாக நாட்டில் சோதனைகளுக்கு உட்பட்டு வருகிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில் காணப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான நேரங்களில், இது உருமறைப்பில் மூடப்பட்டிருந்தது, வடிவமைப்பின் விவரங்களை மறைத்தது. ஆனால் இது அதன் ICE சகாவுடன் பெரும்பாலான ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV அதன் அடிப்படைகளை க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலில் இருந்து பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நீடித்தால், ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார வாகனம் 42 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும், மேலும் பெரிய 51.4 kWh பேக்கின் ஆப்ஷனும் வழங்கப்படும். இவை முறையே 390 கிமீ மற்றும் 473 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்குகின்றன. இந்த மாடல்கள் 133 hp மற்றும் 168 hp என மதிப்பிடப்பட்ட பவர் வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாருடன் பொருத்தப்பட்டுள்ளன.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-யின் பெரிய அளவு காரணமாக, மேற்கூறிய பேட்டரி பேக்குகளால் வழங்கப்படும் இறுதி சான்றளிக்கப்பட்ட வரம்பு மாறக்கூடும். ஆனால் இது AC மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் விருப்பங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 kW AC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, 42 kWh வேரியண்டை 10 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும்.
அதே நேரத்தில் 51.4 kWh வேரியண்டிற்கு 4 மணிநேரம் 50 நிமிடங்கள் ஆகும். 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜருடன், இரண்டு வேரியண்டுகளையும் 58 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-க்கான பாதுகாப்பு தொகுப்பில் ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் ஸ்டேபிலைசேஷன் கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மன்ட் (VSM), டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல் (DBC), பிரேக் அசிஸ்ட் சிஸ்டம் (BAS) மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, கிளாவிஸ் EV தோராயமாக 20 ஆட்டோனோமஸ் அம்சங்கள் அடங்கிய ADAS லெவல் 2 கொண்டிருக்கும்.
- பேட்டரி பேக் விருப்பங்கள் முறையே 390 கிமீ மற்றும் 473 கிமீ வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.
கியா நிறுவனம் சமீபத்தில் கேரன்ஸ் கிளாவிஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதன் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்த கியா நிறுவனம் தயாராகி வருகிறது. இது குறித்துது வெளியாகி உள்ள தகவலின்படி, கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV அடுத்த மாதம் 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
எனினும், கியா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. கியா நிறுவத்தின் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் இருந்து எதிர்பார்க்கக்கூடிய அம்சங்களை பார்ப்போம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: பவர்டிரெய்ன்
கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா EV-இல் இருந்து பேட்டரியை பெற வாய்ப்புள்ளது. அதாவது, 42 kWh பேட்டரி மற்றும் 51.4 kWh பேட்டரி பேக், விருப்பங்களாகக் கிடைக்கின்றன. இந்த பேட்டரி பேக் விருப்பங்கள் முறையே 390 கிமீ மற்றும் 473 கிமீ வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: எதிர்பார்க்கப்படும் வெளிப்புறம்
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV அதன் ஐசி எஞ்சின் மாடலில் உள்ள பெரும்பாலான வெளிப்புற கூறுகள் மற்றும் வடிவமைப்பை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இது முக்கோண ஃபிரேமிற்குள் இணைக்கப்பட்ட 3-பாட் LED ஹெட்லேம்ப்கள், ஆங்குலர் LED DRLகள், முன்புறத்தில் ஒரு க்ளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் பலவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏரோ-ஸ்பெசிஃபிக் அலாய் வீல்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: இன்டீரியர்
வெளிப்புறத்தைப் போலவே, கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-யும் அதன் ஐசி எஞ்சின் மாடலில் உள்ள இன்டீரியர் அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 22.62-இன்ச் டூயல் ஸ்கிரீன் செட்டப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: எதிர்பார்க்கப்படும் விலை
கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV காரின் விலை சுமார் ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV, டாடா ஹேரியர் EV மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
- 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பெற முடியும்.
- என்ஜின் அதிகபட்சமாக 113.4 பி.எச்.பி. மற்றும் 143.8 என்.எம். டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
கியா நிறுவனத்தின் எம்.பி.வி. வாகனமான கேரன்ஸ், இப்போது கேரன்ஸ் 'கிளாவிஸ்' ஆக அப்டேட் ஆகி சந்தைக்கு வந்திருக்கிறது.
இரு கார்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், தோற்றத்தில் நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது.
இதன் ஆரம்ப ஷோரூம் விலையாக ரூ.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரி, பழைய கேரன்ஸிற்கும், புதிய கிளாவிஸிற்குமான வித்தியாசங்களை அறிந்து கொள்வோம்.
* கிளாவிஸ் அம்சங்கள்
புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் முன்பக்கத்தில் 3-விளக்குகளை உள்ளடக்கிய ஹெட்லைட் சிஸ்டம், அதற்கு பக்கத்தில் எல்-வடிவில் எல்.இ.டி. டி.ஆர்.எல் போன்றவை உள்ளன. முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் இரண்டும் முன்பை காட்டிலும் கூடுதல் வளைவாக, சில்வர் நிறத்தில் பாக்ஸ் பேஷ் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய டிசைனில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், மேற்கூரையில் ரூப் ரெயில்கள், பின்பக்கத்தில் எல்.இ.டி. டெயில் லைட்களை இணைக்கக்கூடிய லைட்பார் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
10.25 அங்குல தொடுதிரை, ஓட்டுனருக்கான தகவல்களை வழங்கக்கூடிய 10.25 அங்குல திரை என இரண்டும் ஒன்றாக ஒரே திரையாக 22.62 அங்குலத்தில் வழங்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பிலான ஸ்டீயரிங் சக்கரம், பெரிய பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, கியா கனெக்டட் தொழில்நுட்பம், லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு, 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 6 ஏர்பேக்குகள், ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், பிரேக் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஏ.பி.எஸ். போன்ற பல்வேறு அம்சங்கள் கேரன்ஸ் கிளாவிஸை சிறப்பானதாக காட்டுகிறது.
* இயந்திர நுட்பங்கள்
கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டு வரும் அதே மூன்று என்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் அப்படியே கேரன்ஸ் கிளா விஸ் காரிலும் இடம் பெற்றுள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பெற முடியும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 113.4 பி.எச்.பி. மற்றும் 143.8 என்.எம். டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது இல்லாமல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கேரன்ஸ் கிளாவிஸ் கிடைக்கும். கூடுதலாக டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்க விரும்புபவர்களுக்காக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது.
- கேரன்ஸ் கிளாவிஸ் காரில் பவர்டு டிரைவிங் அட்ஜஸ்ட்மென்ட் அல்லது பாஸ் மோட் அம்சம் இல்லை.
- தற்போதைய நிலவரப்படி, கியா கேரன்ஸ் கிளாவிஸில் CNG பவர்டிரெயின் இல்லை.
கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் கேரன்ஸ் எம்பிவியின் அதிக பிரீமியம் மாடலான கேரன்ஸ் கிளாவிஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. பெயரில் கிளாவிஸ் பின்னொட்டு சேர்க்கப்பட்டிருப்பது வடிவமைப்பின் அடிப்படையில் பல மாற்றங்களையும் அம்சங்கள் பட்டியலில் பல புது வசதிகளையும் கொண்டுவருகிறது. கியா கேரன்ஸ் கிளாவிஸ்-இல் உள்ள அம்சங்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.
கிளைமேட் கண்ட்ரோல்
சமீப காலங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது காரில் கிளைமேட் கண்ட்ரோல் வசதியை எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் கிளாவிஸ் மாடலில் டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MPV-யில் இல்லாத அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த வசதி கியா செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது, இந்த கார் ரூ. 9.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வருகிறது.
பவர்-அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் இருக்கை
கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடல் 4-வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் வசதி கொண்ட இருக்கைகளை வழங்குகிறது. காரில் ஆறு-வழி பவர்-அட்ஜஸ்டபிள் இருக்கை இருந்திருந்தால் இது இன்னும் வசதியாக இருந்திருக்கும். இது ரூ.20 லட்சத்திற்கும் குறைவான பல மாடல்களில் கிடைக்கும் அம்சமாகும்.
பவர்டு சீட்
கேரன்ஸ் கிளாவிஸ் காரில் பவர்டு டிரைவிங் அட்ஜஸ்ட்மென்ட் அல்லது பாஸ் மோட் அம்சம் இல்லை. பாஸ் மோட், பின்பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் வசதிக்காக முன்பக்க பயணிகள் இருக்கையை முன்னோக்கி நகர்த்தும் திறனை வழங்குகிறது. இது டாடா சஃபாரி போன்ற இந்திய சந்தையில் சில ஏழு இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.
வென்டிலேடெட் இருக்கைகள்
கியா கேரன்ஸ் கிளாவிஸ் முன் இருக்கைகளுக்கு வென்டிலேஷன் வசதியைப் பெறுகிறது. இருப்பினும், பின்புற இருக்கைகளில் இந்த வசதி இல்லை. இது கியா சிரோஸ் மாடலில் பிராண்ட் வழங்கும் ஒரு அம்சமாகும். இந்த பிரிவில், இந்த அம்சத்தை வழங்குவது ஒரு பொறியியல் சவால் என்பதை கியா உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர்களின் நடு வரிசை இருக்கைகள் ஒரு-தொடு மின்னணு செயல்பாட்டுடன் வருகின்றன. எனவே, வென்டிலேடெட் பின்புற இருக்கைகள் அல்லது டச் ஸ்கிரீன் எலெக்ட்ரிக் டம்பிள் ஆகியவற்றுக்கு இடையே இது ஒரு தேர்வாகவே உள்ளது.
சிஎன்ஜி இல்லை
தற்போதைய நிலவரப்படி, கியா கேரன்ஸ் கிளாவிஸில் CNG பவர்டிரெயின் இல்லை. இது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இருப்பினும், தென் கொரிய வாகன உற்பத்தியாளர் விரைவில் MPV இன் CNG இயங்கும் மாடலை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
- ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய டீசல் எஞ்சின் 17.50 kmpl மைலேஜை வழங்குகிறது.
- டீசல் எஞ்சின் 113 hp இல் 250 Nm டார்க்கையும் இதேபோன்ற வெளியீட்டைக் கொண்டுள்ளது.
கியா இந்திய நிறுவனம் சமீபத்தில் கேரன்ஸ் கிளாவிஸை வெளியிட்டது. இதன் விலை விவரங்கள் வருகிற 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. கியா நிறுவனம் புதிய MPV மாடலுக்கான ARAI-சான்றளிக்கப்பட்ட எரிபொருள் திறன் எண்களை அறிவித்துள்ளது. புதிய MPV மாடலுக்கு ரூ.25,000 கொடுத்து முன்பதிவு செய்யலாம். இதை ஆட்டோமொபைல் உற்பத்தியாளரின் இணையதளம் அல்லது டீலர்ஷிப்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் நாட்டில் மூன்று எஞ்சின் விருப்பங்களைப் பெறுகிறது. 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை அடங்கும். இதற்கிடையில், டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT மற்றும் 6-ஸ்பீடு AT ஆகியவை அடங்கும். இவற்றில், MT உடன் கூடிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 19.54 kmpl மைலேஜை வழங்குகிறது. அதே நேரத்தில் மிகக் குறைந்த மைலேஜ் 15.95 kmpl, MT மற்றும் iMT உடன் கூடிய டர்போ-பெட்ரோலுக்குக் காரணம்.
இதற்கிடையில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய டீசல் எஞ்சின் 17.50 kmpl மைலேஜை வழங்குகிறது. மேலும் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 16.66 kmpl மைலேஜை வழங்குகிறது. பவர்டிரெய்ன்களின் இந்த சேர்க்கைகள் ஏழு டிரிம்களில் (HTE, HTE(O), HTK, HTK+, HTK+(O), HTX & HTX+) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் 113 hp பவரையும் 144 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், டீசல் எஞ்சின் 113 hp இல் 250 Nm டார்க்கையும் இதேபோன்ற வெளியீட்டைக் கொண்டுள்ளது. இந்த வரிசையில் மிகவும் சக்திவாய்ந்தது டர்போ-பெட்ரோல் ஆகும். இது 156 hp மற்றும் 253 Nm வெளியீட்டைக் கொண்டுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, கிளாவிஸ் 26.62-இன்ச் பனோரமிக் டிஸ்ப்ளேக்கள், இரட்டை-பேன் பனோரமிக் சன்ரூஃப், இரட்டை-மண்டல காலநிலை கட்டுப்பாடு, மொபைல் இணைப்புடன் கூடிய இரட்டை-கேமரா டேஷ் கேம், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள், போஸ் (Bose) பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கிறது.
- முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
கியா நிறுவனம், 2025-ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட கியா இ.வி. 6 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்திருந்த நிலையில் அதற்கான விலை அறிவிப்பும் வந்திருக்கிறது. அதன்படி, ஷோரூம் விலையாக ரூ.65.9 லட்சம் ரூபாயில் இது கிடைக்கும்.
* இ.வி. 6 பேஸ்லிப்ட்
இதில் முந்தைய மாடலில் இருந்த 77.5 கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு பதிலாக 84 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருக்கும் டூயல் மோட்டார்கள் அதிகபட்சமாக 320 எச்.பி. பவரையும், 605 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
* மாற்றங்கள்
ஆங்குலர் எல்.இ.டி. வடிவ டி.ஆர்.எல்.கள், பம்பர், சக்கரங்கள், டெயில் லைட்டுகள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. 12.3 அங்குல இரு டிஸ்பிளே திரைகள், 3 ஸ்போக் டூயல் டோன் ஸ்டியரிங் வீல், 12 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், லெவல் டூ அடாஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.






