என் மலர்tooltip icon

    கார்

    473 கி.மீ ரேஞ்ச் வழங்கும் கியா எலெக்ட்ரிக் MPV - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    473 கி.மீ ரேஞ்ச் வழங்கும் கியா எலெக்ட்ரிக் MPV - வெளியீடு எப்போ தெரியுமா?

    • பேட்டரி பேக் விருப்பங்கள் முறையே 390 கிமீ மற்றும் 473 கிமீ வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    கியா நிறுவனம் சமீபத்தில் கேரன்ஸ் கிளாவிஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதன் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்த கியா நிறுவனம் தயாராகி வருகிறது. இது குறித்துது வெளியாகி உள்ள தகவலின்படி, கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV அடுத்த மாதம் 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    எனினும், கியா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. கியா நிறுவத்தின் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் இருந்து எதிர்பார்க்கக்கூடிய அம்சங்களை பார்ப்போம்.

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: பவர்டிரெய்ன்

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா EV-இல் இருந்து பேட்டரியை பெற வாய்ப்புள்ளது. அதாவது, 42 kWh பேட்டரி மற்றும் 51.4 kWh பேட்டரி பேக், விருப்பங்களாகக் கிடைக்கின்றன. இந்த பேட்டரி பேக் விருப்பங்கள் முறையே 390 கிமீ மற்றும் 473 கிமீ வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: எதிர்பார்க்கப்படும் வெளிப்புறம்

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV அதன் ஐசி எஞ்சின் மாடலில் உள்ள பெரும்பாலான வெளிப்புற கூறுகள் மற்றும் வடிவமைப்பை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இது முக்கோண ஃபிரேமிற்குள் இணைக்கப்பட்ட 3-பாட் LED ஹெட்லேம்ப்கள், ஆங்குலர் LED DRLகள், முன்புறத்தில் ஒரு க்ளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் பலவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏரோ-ஸ்பெசிஃபிக் அலாய் வீல்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: இன்டீரியர்

    வெளிப்புறத்தைப் போலவே, கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV-யும் அதன் ஐசி எஞ்சின் மாடலில் உள்ள இன்டீரியர் அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 22.62-இன்ச் டூயல் ஸ்கிரீன் செட்டப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: எதிர்பார்க்கப்படும் விலை

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV காரின் விலை சுமார் ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV, டாடா ஹேரியர் EV மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    Next Story
    ×