என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Toyota"
- புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.
- இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா காரின் புது "GX+" வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய GX மற்றும் VX வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.
அதன்படி புதிய வேரியண்டில் ரியர் கேமரா, ஆட்டோ ஃபோல்டு மிரர், டேஷ் கேமரா, டைமண்ட் கட் அலாய் வீல்கள், பிரீமியம் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வேரியண்ட் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள் தவிர இன்னோவா க்ரிஸ்டா GX+ வேரியண்டின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடல் எதுவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. எனினும், கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை இதற்கு போட்டியாக அமைகின்றன.
- புதிய ருமியன் வேரியண்டில் 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
- இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ருமியன் காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. ருமியன் G AT என அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 13 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த காரின் வினியோகம் மே 5 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய டொயோட்டா ருமியன் G AT வேரியண்டுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.
புது வேரியண்ட் அறிமுகம் செய்த கையோடு ருமியன் சி.என்.ஜி. வேரியண்டுக்கான முன்பதிவுகளை டொயோட்டா நிறுவனம் மீண்டும் துவங்கியது. ருமியன் சி.என்.ஜி. ஆப்ஷன் S வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது.
புதிய ருமியன் G AT வேரியண்டில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா ருமியன் G AT வேரியண்டில் 7 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டொயோட்டா ஐ கனெக்ட் தொழில்நுட்பம், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., இ.எஸ்.பி., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
- 2.5 லட்சம் பார்ச்சூனர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
- வெளிப்புறம், உள்புறத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் எஸ்.யு.வி. மாடலின் புது வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புது வெர்ஷன் பார்ச்சூனர் லீடர் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெர்ஷன் 4x2 வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
பார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலில் டூயல் டோன் வெளிப்புற பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக்டு அவுட் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர், TPMS, முன்புறம்-பின்புறம் பம்ப்பர் ஸ்பாயிலர்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் சூப்பர் வைட் மற்றும் பிளாக் ரூஃப், பிளாட்டினம் பியல் வைட் மற்றும் பிளாக் ரூஃப், சில்வர் மெட்டாலிக் மற்றும் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2.5 லட்சம் பார்ச்சூனர் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலின் விலையை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் அக்சஸரீக்களுக்கு ஏற்ற வகையில், காரின் விலை வேறுப்படும்.
எனினும், தற்போது விற்பனை செய்யப்படும் பார்ச்சூனர் ஸ்டான்டர்டு எடிஷன் உடன் ஒப்பிடும் போது லீடர் எடிஷன் மாடலின் விலை ரூ. 35 லட்சத்து 93 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 38 லட்சத்து 21 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வரும் மாதங்களில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
- இந்த வேரியண்ட் பல நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் எஸ்.யு.வி.-இன் மைல்டு ஹைப்ரிட் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த மாடல் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பார்ச்சூனர் MHEV மாடலில் உள்ள மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹிலக்ஸ் MHEV மாடலில் உள்ளதை போன்றதாகும்.
தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து பார்ச்சூனர் மைல்டு ஹைப்ரிட் மாடல் வரும் மாதங்களில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க வழக்கமான பார்ச்சூனர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த வேரியண்ட் பல நிறங்களில் கிடைக்கிறது.
ஹிலக்ஸ் மைல்டு ஹைப்ரிட் போன்றே பார்ச்சூனர் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 16 ஹெச்.பி. பவர், 42 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பார்ச்சூனர் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன் 5 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. இத்துடன் இந்த என்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. மேலும் 2WD மற்றும் 4WD வசதி வழங்கப்படுகிறது.
- முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- புது வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. இன்னோவா ஹைகிராஸ் GX(O) என்று அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்ட்-க்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
அம்சங்களை பொருத்தவரை புது வேரியண்டில் எல்.இ.டி. ஃபாக் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் டிஃபாகர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செஸ்ட்நட் இன்டீரியர், மென்மையான பொருட்களால் ஆன டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் பின்புற சன்ஷேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் GX(O) மாடல்: பிளாகிஷ் அகெ கிளாஸ் ஃபிளேக், பிளாட்டினம் வைட் பியல், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், சில்வர் மெட்டாலிக், சூப்பர் வைட் மற்றும் அவான்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
2024 இன்னோவா ஹைகிராஸ் மாடலின் GX(O) வேரியண்டில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்.பி. பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், என்று நிர்ணயம்.
- இந்த கார் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டொயோட்டா இந்தியா நிறுவனம் மாருதி ஃபிரான்க்ஸ் மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட "டெய்சர்" மாடலை இந்திய சந்தையில் நேற்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்தது. E, S, S+, G, மற்றும் V என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் டொயோட்டா டெய்சர் துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டொயோட்டா டெய்சர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இந்த காரின் வினியோகம் மே மாதம் துவங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய டெய்சர் மாடல்- லுசென்ட் ஆரஞ்சு, ஸ்போர்டின் ரெட், கஃபே வைட், என்டைசிங் சில்வர், கேமிங் கிரே, ஸ்போர்டின் ரெட்-மிட்நைட் பிளாக் ரூஃப், என்டைசிங் சில்வர்- மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் கஃபே வைட்-மிட்நைட் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இந்த காரில் ஒன்பது இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ டிம்மிங் IRVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் டிஃபாகர், ஐசோஃபிக்ஸ் மவுன்ட்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
பவர்டிரெயினை பொருத்தவரை டொயோட்டா டெய்சர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு.
- எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் 300 ஆடம்பர எஸ்.யு.வி. மாடலை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2021 முதல் 2203 ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த 269 லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
லேண்ட் குரூயிசர் 300 மாடல்களின் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனின் ECU மென்பொருளை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதால் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் மென்பொருளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மென்பொருள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் வரை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காரை பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை சம்பந்தப்பட்ட டொயோட்டா விற்பனை மையங்களை சேர்ந்த அதிகாரிகள் தொடர்பு கொள்வர். இது தொடர்பான சந்தேகம் மற்றும் விளக்கங்களை டொயோட்டா வாடிக்கையாளர் சேவை மையம் தெளிவுப்படுத்தும்.
தற்போது விற்பனை செய்யப்படும் லேண்ட் குரூயிசர் LC300 மாடலின் விலை ரூ. 2 கோடியே 10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
இதில் 3.3 லிட்டர், V6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 305 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
- மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நான்கு புதிய கார் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்:
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 மாடல் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
டாடா கர்வ்:
டாடா நிறுவனம் தனது கர்வ் ப்ரோடக்ஷன் வெர்ஷனை வரும் மாதங்களில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் உடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.
புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் நீண்ட காலமாக டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வரும் மாதங்களில் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் வடிவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இன்டீரியர் அப்டேட் செய்யப்பட்டு, மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
டொயோட்டா அர்பன் குரூயிசர் டைசர்:
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் மாடல் தான் டொயோட்டா பிரான்டிங்கில் அர்பன் குரூயிசர் டைசர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. கூப் மாடல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றும் இதில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களாக வழங்கப்படும் என தெரிகிறது.
- லிமிடெட் எடிஷன் மாடல் 7 மற்றும் 8 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
- இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.
டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புதிய லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் GX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 07 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 22 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது இன்னோவா ஹைகிராஸ் ஸ்டாண்டர்டு GX வேரியண்டை விட ரூ. 40 ஆயிரம் அதிகம் ஆகும். கூடுதல் விலை காரணமாக இந்த மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி கிரில் பகுதியில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டது. இத்துடன் பிளாட்டினம் வைட் நிற ஃபினிஷ் செய்யப்பட்டது.
உள்புறம் டேஷ்போர்டில் சாஃப்ட்டச், செஸ்ட்நட் பிரவுன் ஃபினிஷ், டோர் ட்ரிம்களில் பிளாக் நிற பிளாஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. இன்னோவா ஹைகிராஸ் GX லிமிடெட் எடிஷன் மாடல் 7 மற்றும் 8 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் 2.0 லிட்டர், NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதில் உள்ள என்ஜின் 172 ஹெச்.பி. பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் வசதி இல்லாத மாடலையும் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக டொயோட்டா புதிய லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் டிசம்பர் மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
- டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
- டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலின் CNG வேரியண்ட் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த எம்.பி.வி. மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இந்த காருக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
தற்போது CNG வேரியண்ட் முன்பதிவு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ருமியன் பெட்ரோல் வேரியண்ட் வாங்க விரும்புவோர், முன்பதிவு செய்ய முடியும். டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் டொயோட்டா ருமியன் மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ஐகானிக் கிரே மற்றும் ரஸ்டிக் பிரவுன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- டொயோட்டா ருமியன் மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா ருமியன் விலை ரூ. 10 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி எர்டிகா மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ருமியன் மாடல் ஐந்து வித நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ருமியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் போதிலும், ருமியன் மாடலின் ஸ்டைலிங் காரணமாக சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ருமியன் மாடலின் முன்புறம் வித்தியாசமான முன்புற கிரில், மெஷ் பேட்டன், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ரிடிசைன் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றங்கள் தவிர, ருமியன் மாடல்- ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் பிரவுன் மற்றும் ஐகானிக் கிரே என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ருமியன் மாடலின் உள்புறம் ஏழு பேர் அமரும் வகையிலான இருக்கை அமைப்புகள், டூயல் டோன் பெய்க் மற்றும் பிளாக் தீம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியன்ட் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் புதிய ருமியன் எம்பிவி மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
- டொயோட்டா ருமியன் மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் மாருதி சுசுகி எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்ட டொயோட்டா ருமியன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா ருமியன் மாடல் மூன்று வேரியன்ட்கள், ஐந்து நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வரும் வாரங்களில் ருமியன் மாடலுக்கான முன்பதிவு துவங்க இருக்கிறது.
எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் போதிலும், ருமியன் மாடலின் ஸ்டைலிங் காரணமாக சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ருமியன் மாடலின் முன்புறம் வித்தியாசமான முன்புற கிரில், மெஷ் பேட்டன், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ரிடிசைன் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மாற்றங்கள் தவிர, ருமியன் மாடல்- ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் பிரவுன் மற்றும் ஐகானிக் கிரே என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய ருமியன் மாடலின் உள்புறம் ஏழு பேர் அமரும் வகையிலான இருக்கை அமைப்புகள், டூயல் டோன் பெய்க் மற்றும் பிளாக் தீம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கு டொயோட்டா எம்பிவி மாடலில் நான்கு ஏர்பேக், ஹில்-ஹோல்டு அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்புற சீட்பெல்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியன்ட் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்