search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    புதிய இன்னோவா ஹைகிராஸ் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    புதிய இன்னோவா ஹைகிராஸ் இந்திய வெளியீட்டு விவரம்

    • டொயோட்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இன்னோவா கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • புது இன்னோவா மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புது இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதனை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்த (நவம்பர்) மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    இந்திய வெளியீட்டுக்கு முன் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய பாடி ஆன் லேடர் ஆர்கிடெக்ச்சருக்கு மாற்றாக புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மோனோக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதில் முன்புற டிரைவ் வசதி கொண்ட ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே இன்னோவா டீசல் என்ஜின் கொண்ட வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த வகையில், டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் ஹெக்சகோனல் முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் பானரோமிக் சன்ரூப் இந்த எம்பிவி மாடலில் முதல் முறையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஹைகிராஸ் மாடலின் இண்டீரியர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் பேட், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள் வழங்கப்படலாம்.

    Next Story
    ×