என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
![இணையத்தில் வெளியான இன்னோவா ஹைகிராஸ் ஸ்பை படம் இணையத்தில் வெளியான இன்னோவா ஹைகிராஸ் ஸ்பை படம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/08/1788884-toyota-innova-hycross-teaser-1.jpg)
இணையத்தில் வெளியான இன்னோவா ஹைகிராஸ் ஸ்பை படம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்திய வெளியீட்டுக்கு முன் இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தேனேசியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எம்பிவி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் முனஅ இந்தோனிசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்பை படங்களில் உள்ள இன்னோவா மாடல் உற்பத்திக்கு தயார் நிலையில், இருப்பது போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த கார் இன்னோவா செனிக்ஸ் ஹைப்ரிட் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதே கார் இன்னோவா ஹைகிராஸ் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்பை படத்தில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. இதில் ஹெக்சகோனல் கிரில், க்ரோம் அக்செண்ட்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை இன்னோவா மாடலில் ஆல்-எல்இடி லைட்டிங் வழங்கப்படலாம். தோற்றத்தில் இந்த கார் தற்போதைய மாடலை விட அதிக பிரம்மாண்டம் மற்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என்றும் இந்த கார் அதிநவீன மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது டொயோட்டாவின் புது குளோபல் ஆர்கிடெக்ச்சரின் மற்றொரு வெர்ஷன் ஆகும்.
புதிய ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Photo Courtesy: Kompas Otomotif
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)