என் மலர்tooltip icon

    கார்

    மிரட்டல் அப்டேட்களுடன் அறிமுகமான 2025 பிராடோ
    X

    மிரட்டல் அப்டேட்களுடன் அறிமுகமான 2025 பிராடோ

    • பவர்டிரெய்ன் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    • கன்சோல் கூல் பாக்ஸ், Qi வயர்லெஸ் சார்ஜர், USB சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பலவற்றை பெறுகிறது.

    2025 டொயோட்டா லேண்ட் குரூசர் பிராடோ சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டது. புது மாடல் தற்போது டொயோட்டா எஸ்யூவியின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என்று கூறப்படும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெறுகிறது. புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சாலைகளில் இந்த மாடலின் டெஸ்டிங் நடைபெற்றது.

    எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:

    2025 டொயோட்டா லேண்ட் குரூசர் பிராடோ மாடல் 2.8 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பவர்டிரெய்ன் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    வெளிப்புற தோற்றம்:

    புதிய மேம்பட்ட லேண்ட் குரூசர் பிராடோ அதன் முந்தைய மாடலில் இருந்து பெரும்பாலான வெளிப்புற கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது "டொயோட்டா" பாரம்பரிய முன்பக்க கிரில், சதுரங்க வடிவம் கொண்ட மிரர்கள் மற்றும் ஃபெண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட்கள் மற்றும் முன்புறம் டூயல் டோன் ஃபாக்-லேம்ப்களை கொண்டுள்ளது. மேலும், பம்பரில் ஃபாக் லேம்ப்களை கொண்டுள்ளது.



    2025 லேண்ட் குரூசஸர் பிராடோ, டிரெயில் டஸ்ட் / கிரேஸ்கேப், ஹெரிடேஜ் ப்ளூ / கிரேஸ்கேப், பிளாக், விண்ட் சில் பியர்ல், விண்கல் ஷவர், ஐஸ் கேப், அண்டர்-கிரவுண்ட் மற்றும் ஹெரிடேஜ் புளூ உள்பட எட்டு வண்ண தீம்களில் கிடைக்கிறது.

    உட்புறம் மற்றும் அம்சங்கள்:

    2025 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ உள்புறத்தில் 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஹீட்டெட் மற்றும் வென்டிலேடெட் முன்புற இருக்கைகள், ஒரு HUD மற்றும் தேவையைப் பொறுத்து அதிக இடத்தை உருவாக்க அனுமதிக்கும். 60/40 ஸ்பிலிட் பின்புற இருக்கை ஆகியவை உள்ளன. இது கன்சோல் கூல் பாக்ஸ், Qi வயர்லெஸ் சார்ஜர், USB சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பலவற்றை பெறுகிறது.

    வெளியீட்டு விவரம்:

    புதிய பிராடோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது குறித்த எந்த விவரங்களுக்கும் நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், முந்தைய தகவல்களின் படி இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×