search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விரைவில் இந்திய வெளியீடு - இன்னோவா ஹைகிராஸ்-க்கு தேதி குறித்த டொயோட்டா
    X

    விரைவில் இந்திய வெளியீடு - இன்னோவா ஹைகிராஸ்-க்கு தேதி குறித்த டொயோட்டா

    • டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இன்னோவா ஹைகிராஸ் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய வெளியீட்டை சில தினங்களுக்கு முன்பு தான் உறுதிப்படுத்தியது. தற்போது புதிய இன்னவோ ஹைகிராஸ் மாடல் நவம்பர் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான புது டீசரையும் வெளியிட்டு உள்ளது.

    டீசரில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் படம் சில்ஹவுட் முறையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் உறுதியான பெல்ட்லைன், பொனெட்டில் ஷார்ப் கிரீஸ்கள், வெளிப்புற கண்ணாடிகளின் கீழ் மாடல் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் இந்த காரில் முற்றிலும் புதிய ரேடியேட்டர் கிரில், புது ஹெட்லைட்கள் இண்டகிரேட் செய்யப்பட்ட டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என்றும் இந்த கார் அதிநவீன மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது டொயோட்டாவின் புது குளோபல் ஆர்கிடெக்ச்சரின் மற்றொரு வெர்ஷன் ஆகும். புதிய ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இதில் 2.0 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×