என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோமொபைல்"
- 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
- மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, விக்டோரிஸ் என்கிற புதிய எஸ்யுவி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ரீமியம் எஸ்யூவி காரை விரும்புவோருக்கு இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கார் மாருதி பிரெஸ்ஸா காரை விட பெரியது, மாருதி கிராண்ட் விட்டாரா காரை விடச் சிறியதாகும்.
மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின் என இரண்டு விருப்பங்களில் கார் கிடைக்கிறது. இதேபோல், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் அல்லது சிவிடி தேர்விலும் விக்டோரிஸ் கார் கிடைக்கிறது.
Bharat NCAP தர குறியீடு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கன பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதன்மூலம், 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
இந்த காரில் மிதக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றோட்டமான இருக்கைகள், பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ப்ரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 360 டிகிரி கேமரா உள்பட 60க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட பல பிரீமியம் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாளராக இது கருதப்படுகிறது.
மாருதி சுசூகியின் விக்டோரிஸ் காரின் விலை குறித்து அறிவிக்கப்படவில்லை. என்றாலும், பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய விக்டோரிஸ் காரின் விலை சுமார் 10- 11 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
- மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும்.
லம்போர்கினி இந்தியா நிறுவனம், நாட்டில் புதிய உயர் செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் லம்போர்கினி டெமராரியோ. இந்த காரின் ஷோரூம் விலை ரூ.6 கோடியில் இருந்து தொடங்குகிறது.
லம்போர்கினி டெமராரியோ மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து செயல்படும் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ V8 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 343 கி.மீ என்று நிறுவனம் கூறுகிறது.
இது மட்டுமல்லாமல், இந்த கார் வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த ஹைப்ரிட் சிஸ்டம் 3.8 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இதை 7 kW AC சார்ஜரைப் பயன்படுத்தி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பயன்படுத்தி பயணத்தின்போதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.
இது முன்புறத்தில் 20 அங்குல டயர்களையும் பின்புறத்தில் 21 அங்குல டயர்களையும் பெறுகிறது.
காரில் 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 8.4 அங்குல செங்குத்து இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 9.1 அங்குல கோ-டிரைவர் டிஸ்ப்ளேவும் உள்ளன. இந்த காரில் சிட்டி, ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா போன்ற 13 டிரைவிங் மோடுகளும் உள்ளன.
- இந்த டாடா காரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
- ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை மே 21 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இது ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் வடிவமைப்பு, குறிப்பாக பாரம்பரிய அல்ட்ரோஸ் கார்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும். மேலும், சில சிறப்பு அம்சங்கள் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், இந்த டாடா காரின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த காரின் முன்பக்க தோற்றம் மிகவும் நேர்த்தியானது. டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற தோற்றமுடைய இந்த கார், வெளியிடப்பட்டால் அந்த கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த காரின் கிரில் மற்றும் பம்பர் இதற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.
மேலும், டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் வரும் டாடாவின் இந்த புதிய அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் அதிக மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேம்பட்ட ADAS அமைப்பு இந்த காரின் சிறப்பு அம்சமாகும். மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக டாடா அல்ட்ரோஸ் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
- கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.
ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.
4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது
பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
- வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ் நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.
மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
- குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர்.
பணத்துக்காக தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய கணவன் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குலாதியைச் சேர்ந்த நபரை அந்த பெண் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
பெண்ணின் கணவர் வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவார்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் நண்பர்கள் இருவருடன் வீட்டுக்கு வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக அவரது புகாரில் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் தன்னை வன்கொடுமை செய்யும்போது அதை வீடியோ பதிவாக தனது கணவர் சவூதி அரேபியாவில் தனது மொபைல் போனில் பார்ப்பார் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அவர் என்னை விவாகரத்து செய்வதாக மிரட்டியதால், எனது குழந்தைகளுக்காக நான் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவர் சவூதியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கொடுமை பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
எனவே அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் புலந்த்ஷாஹர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஷ்லோக் குமாரைச் சந்தித்து தங்களின் துயரத்தை விவரித்தனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- டெல்லியில் BHARAT MOBILITY EXPO வாகன கண்காட்சி நடைபெற்றது.
- இந்த வாகன கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் EV தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லியில் நடைபெற்றுவரும் BHARAT MOBILITY EXPO 2025 வாகன கண்காட்சியை கண்டு வியந்தேன். இந்த வாகன கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது உற்சாகம் அளிக்கிறது
ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட், பி.எம்.டபுள்யூ., டி.வி.எஸ். உட்பட பல வாகன நிறுவனங்களை பார்வையிட்டேன்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனத்தின் (EV) தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது
வின்ஃபாஸ்ட் கார் நிறுவனத்தில் ஆலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தது நமது தலைவரின் விரைவான முடிவெடுக்கும் திறமையால் சாத்தியமானது. மேலும் இந்த முதலீட்டை தென் தமிழகத்திற்கு கொண்டு வந்ததில் நானும் தனிப்பட்ட முறையில் எப்போதும் பெருமைப்படுவேன்
நேற்று அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட VF6 மற்றும் VF7 ஆகியவை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தூத்துக்குடி ஆலையில் இருந்து உற்பத்தி செய்து வெளிவரலாம் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.






