search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்"

    • அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
    • மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிய வீடியோவை ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "பிரதர்.. நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது?" என்று பதிவிட்டுள்ளார்.

    ராகுல் காந்தியின் பதிவை பகிர்ந்து அவரது கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "அன்புக்குரிய சகோதரரே.. எப்போது நேரம் கிடைக்கிறதோ, சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம்.

    ஏற்கனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தர வேண்டிய பாக்கி உள்ளது. சைக்கிள் உலா முடிந்ததும், என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை, ஸ்வீட் உடன் ருசிக்கலாம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்தது.
    • வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    14 ஆண்டுகளாக நெதர்லாந்து பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்ததும், புதிய பிரதமர் டிக் ஸ்கூஃப் இடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் புறப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இது குறித்து கிரண்பேடி தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தனது வாரிசான டிக் ஸ்கூஃப்க்கு அதிகாரபூர்வமாக அதிகாரம் வழங்கும் விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறி மார்க் ரூட் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சைக்கிலில் மகிழ்ச்சியுடன் வெளியேறிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    • 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
    • உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.

    உலகிலேயே நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் தயாரித்த 155 அடி நீளமுள்ள சைக்கிள் தான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.

    டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த இவான் ஷால்க் என்ற 39 வயது பொறியாளர் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார்.

    உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதல்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.
    • ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் காப்பகத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் அந்த சக்கர சைக்கிளை அவர் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது.
    • பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கி உள்ளனர்.

    பிரான்சை சேர்ந்த நிக்கோலஸ் பாரியோஸ் மற்றும் டேவிட் பெய்ரூ என்ற 2 வாலிபர்கள் உலகின் மிக உயரமான சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

    'ஸ்டார்பைக்' என்ற புனைப்பெயர் கொண்ட அவர்களது சைக்கிள் 7.77 மீட்டர் (25 அடி, 5 அங்குலம்) உயரம் கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், பாரியோஸ், டேவிட் ஆகிய இருவரும் ஒரு சாலையில் தங்களது சைக்கிளை நவீன எந்திரங்கள் உதவியுடன் உயரமான சைக்கிளாக மாற்றும் காட்சிகள் உள்ளது.

    பின்னர் அந்த சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது. இந்த சைக்கிள் அலாய் மற்றும் எக்கு மூலம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் இதனை உருவாக்கி உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியில் மது அருந்தியபோது பாரியோஸ், டேவிட் ஆகியோர் இந்த சைக்கிள் உருவாக்கம் தொடர்பாக யோசனை தோன்றியதாகவும், அதன்படி சுமார் 3 மாதங்களாக இதற்கான பொருட்களை வாங்கி வடிவமைத்ததாகவும் கூறுகிறார்கள்.

    • மாணவியின் இ-மெயிலை தொடர்ந்து அமைச்சர் சிவன்குட்டி மாணவி அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
    • அமைச்சர் எனது புகாருக்கு பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பாலரிவட்டம் பகுதியை சேர்ந்த அவந்திகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது சைக்கிள் கடந்த மாதம் 21-ந்தேதி அன்று திருட்டு போனது. திருடன் சைக்கிளை திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவந்திகா, கல்வி அமைச்சர் சிவன்குட்டிக்கும் தனது சைக்கிள் திருட்டுபோன தகவலை இ-மெயில் செய்துள்ளார்.

    மாணவியின் இ-மெயிலை தொடர்ந்து கல்வி அமைச்சர் சிவன்குட்டி மாணவி அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக மாணவி அவந்திகா கூறுகையில்,

    கல்வி அமைச்சர் சிவன்குட்டி எனது புகாருக்கு பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் என்னை தொடர்புகொண்டு திருட்டு போன சைக்கிள் குறித்து விசாரித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் எனக்கு புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்தார். அமைச்சரிடம் இருந்து புதிய சைக்கிள் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரித்தார்.


    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் விவசாயியிடம் காணொலியில் பேசினார்.
    • அப்போது பேசிய மோடி உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களையும், பயனாளிகள் அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக சமீபத்தில் கலந்துரையாடினார்.

    ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி சர்பஞ்ச் பல்வீர் கவுர் பெருமையுடன் கூறினார்.

    அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என தெரிவித்தார்.

    • இரவு 8 மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 41). பிரபல ரவுடி லிங்கத்தின் உறவினர் ஆவார். இவரும் பிரபல ரவுடி லிங்கத்தின் மகனுமான சுஜித் (25) என்பவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஜெகதீஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் பழத்தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த டெம்போ ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    இதில் ஜெகதீஷ் மேல் சிகிச்கைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். பிரபல ரவுடி லிங்கத்தின் மகன் சுஜித்துக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெகதீசின் உடல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விளையாட்டில் கால்களை இழந்த12 வயது சிறுவனுக்கு 3 சக்கர சைக்கிள்

    ஆலங்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மறவன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மனோஜ்(வயது 12). இவன் விளையாடும் போது அவனுடைய இடது கால் பாதிப்படைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவனது ஒரு கால் அகற்றப்பட்டது.

    இந்நிலையில் சிறுவன் மனோஜ் ஆலங்குடி சட்டமன்ற அலுவலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக அவனுக்கு 3 சக்கர மிதிவண்டி வரவழைத்து வழங்கி ஆறுதல் கூறி உதவித்தொகை அளித்தார்.

    மேலும் சிறுவனுக்கு செயற்கை கால் வழங்கவும், அவனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

    • மண்எண்ணை போன்ற பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • டத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி, மானிய மண்எண்ணை போன்ற பொருட்கள் கேர ளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் கடத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன. இதனால் பல இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அதங் கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் களியக்கா விளை பகுதியில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு குழித்துறையை நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக் கல்லுகட்டி பகுதியில் வந்தபோது எதிரே வேக மாக வந்த சொகுசு கார் ஒன்று பைக் மீது பயங்கர மாக மோதியது. இதில் மணிகண்டன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.

    படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றுள் ளார். ஆனால் அங்கு கூடிய பொதுமக்கள் காரை எடுத்து செல்ல அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தி யுள்ளனார்.

    மேலும் விபத்து குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரி யவந்தது. மேலும் அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    பின்னர் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த னர். மேலும் விபத்து நடத்தி விட்டு தப்பி ஓடிய கடத்தல் வாகனத்தின் ஓட்டுநர் யார்? வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமதுரிதுவான் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்:

    வடலூர் ஆபத்தாணபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ஹஜ்முகமது மகன் முகமதுரிதுவான் (வயது 15). இவர் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடலூர் ரெயில்வே கேட்டுக்கு முன் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி யதில் பலத்த காயமடைந்த முகமது ரிதுவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    ×