தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.
தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள்  மோதி பெண் பலி
Published on

காடையாம்பட்டி:

தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com