என் மலர்
நீங்கள் தேடியது "Bali"
- கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
- கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
வாழப்பாடி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப் பாளையம் கல்வரா யன்மலை பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து, டிப்பர் லாரியில் ஜல்லி பாரம் ஏற்றுக்
கொண்டு கல்வ ராயன்மலை கருமந்துறை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டியப்பன் என்பவரும் லாரியில் அமர்ந்து சென்றுள்ளார்.
இந்தலாரி, வாழப்பாடி அடுத்த சந்திரப்பிள்ளை வலசு கிராமத்தில் பேளூர் - அயோத்தியாப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பிரகாஷ், உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் ஆண்டியப்பன் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியாதல் ஒருவர் பலியானார்.
- அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் உருக்குலைந்த ஆண் சடலம் கிடந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதியதில், உடல் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
இதுகுறித்து ச.வாழப்பாடி வி.ஏ.ஓ. பெரியசாமி, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் உருக்குலைந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்தில் சிக்கி இறந்தவர் யார்? விபத்திற்கு காரணமான வாகனம் எது? என்பது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் தீயில் கருகி பலியானார்.
- வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள காரியாபட்டி ரோட்டைச் சேர்ந்த முனியாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மணியமுது (வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. முனியாண்டி அதே பகுதியில் புதிதாக வீடுகட்டினார்.
இந்தபணிகள் முடிந்த நிலையில் கடந்த 20-ந் தேதி கிரகப்பிரவேசம் நடந்தது. இந்த நிலையில் முனியாண்டி, மனைவியின் தந்தை சமயனிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதில் உடல் கருகி காயமடைந்த உங்கள் மகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமயன் உடனே பதறியடித்துக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மணியமுதுவின் நிலையை பார்த்து கண் கலங்கனார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணியமுது பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமயன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அருகே கல்குவாரியில் வாலிபர் உடல் சிதறி பலியானது எப்படி என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த நிலையில் உயிரிழந்த சாம்ராஜின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியாபட்டணம்:
சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணத்தை அடுத்த அக்ரஹாரநாட்டாமங்கலம் பகுதியில் தனியார் கல்கு வாரி இயங்கி வருகிறது. இதில் தர்மபுரி மாவட்டம் நாகர்குடல் பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சாம்ராஜ் (வயது 34) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பாறை உடைக்க பயன்படுத்தும் பிரத்யோக டிராக்டரில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். இவர் பா.ம.க., கட்சி வார்டு உறுப்பினராகவும் இருந்து உள்ளார். இவருக்கு புனிதா (27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று டிராக்டருடன் கவிழ்ந்த நிலையில் உடல் சிதைந்த நிலையில் பி ண மாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்த தொழி லாளர்கள் இது குறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடு த்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காரிப்ப ட்டி போலீசார் தடய ங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் உயிரிழந்த சாம்ராஜின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீ சாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பா.ம.க., கட்சியினர் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து இரு தரப்பையும் போலீசார் சமதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பின்னர் உயிரிழந்த சாம்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து காரிப்பட்டி போலீசார் சந்தேக மரணம்
என வழக்கு பதிவு செய்த னர். சாம்ராஜ் பலியானது எப்படி என்பது குறித்து கல்குவாரி உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.