என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் கருகி மூதாட்டி பலி
- நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே மானத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்த மூதாட்டி தீயில் கருகி பலியானார்.
- பலத்த காயம் ஏற்பட்ட நல்லம்மாளை அவரது உறவினர்கள் அங்கிருந்து எளையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே மானத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 85 ). கூலி தொழிலாளி. இவர் கூப்பிட்டாம் பாளையம் பகுதியில் உள்ள தனது அண்ணன் மகன் வீட்டில் வசித்து வந்தார் .
இந்நிலையில் கடந்த கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்ததில் அவரது இடுப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்ட நல்லம்மாளை அவரது உறவினர்கள் அங்கிருந்து எளையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிரவாதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நல்ல மாளின் மகள் பெருமாயி ( 51) வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






