கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ பெருமாள் ( வயது 32). ப்ளக்ஸ் டிசைனிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கரிய பெருமாள் கரடு நுழைவு ரோடு அருகே, எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com