என் மலர்
நீங்கள் தேடியது "லாரி"
- அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்
தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.
அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.
திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.
இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது.
- விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று அங்கு கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சில சமயம் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனால் லாரியில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் டிரைவர்கள் கரும்புகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக லாரி சுற்றிலும் தார்ப்பாயை போட்டு மூடி வருகின்றனர். இருந்தாலும் கரும்பின் வாசனையை பிடித்து அந்த லாரிகளை யானைகள் வழிமறிப்பது நடந்து வருகிறது.
நேற்று தாளவாடி அடுத்த அரேப்பாளையம் பிரிவில் ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி கரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
கரும்பை சுற்றியும் வெள்ளை கலர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. எனினும் கரும்பு வாசனையை பிடித்த அந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி தார்பாயை தும்பிக்கையால் பிரித்து தூர எறிந்து கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு ருசித்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு யானை அந்த இடத்தை விட்டு சென்றதும் போக்குவரத்து சீரானது.
இதேபோல் நேற்று இரவு தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக இரவு நேர தூக்கத்தை தொலைத்து கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
- கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த கரும்பை சுவைத்த யானை பின்னர் தானாக வனப்பகுதியில் சென்றது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- தன் கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் லாரி மோதி, ஸ்கூட்டியில் தாயுடன் சென்ற சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.
குமாரபாளையம், அக்.28-
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.
காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இது குறித்து இன்ஸ்
பெக்டர் ரவி கூறியதாவது:
காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.
குமாரபாளையம், அக்.28-
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.
காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இது குறித்து இன்ஸ்
பெக்டர் ரவி கூறியதாவது:
காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்தது.
- வீடுகளில் மின் தடை ஏற்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து குளந்திரான்பட்டு செல்லும் சாலையில் தனியார் சிமெண்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் விற்பனை நிலையத்திற்கு கரூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது குளந்திரான்பட்டு நரங்கியப்பட்டு செல்லும் சாலையில் லாரி சென்ற போது அந்த சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத் தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அபுதாஹிர் உயிர் தப்பினார். ' இந்நிலையில் லாரி மோதியதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. உடைந்த மின் கம்பத்தை மாற் றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த வர் சதீஷ்குமார்(வயது 32).
- இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சதீஷ்குமார்(வயது 32). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா.பழூர் கடைவீதி பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த லாரி, சதீஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த இளங்கோவனை கைது செய்தனர்.
- பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
- சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி :
ஈரோடு மாவட்டம், புன்செய்புளிய ம்பட்டி சுல்தான் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சுரேஷ்கிருஷ்ணா (24). இவா், அன்னூா் அருகே பொங்கலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் புன்செய்பு ளியம்பட்டி யிலிருந்து அன்னூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சேவூா், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வரும்போது, அன்னூரிலிருந்து, அந்தியூா் நோக்கி சென்ற லாரியும், இவரது இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சேவூா் போலீஸாா் லாரியை ஓட்டி வந்த அந்தியூா், சின்னத்தம்பிபாளையம் புதுமேட்டூரைச் சோ்ந்த அருள் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து நேற்று நள்ளிரவு பண்ருட்டிக்கு லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டுஅதிவேகமாக வந்தது. இந்த லாரிபண்ருட்டி கடலூர் ரோடு யூனியன் அலுவலகம் அருகில் வேகமாக வந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது.அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து அதிவேகமாக வாகனம்ஓட்டிய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






