லாரி மோதி வாலிபர் பலி

தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த வர் சதீஷ்குமார்(வயது 32). இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது.
லாரி மோதி வாலிபர் பலி
Published on

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சதீஷ்குமார்(வயது 32). கூலித் தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா.பழூர் கடைவீதி பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த லாரி, சதீஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த இளங்கோவனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com