என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பேருந்து விபத்து"
- பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பேருந்தை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில்,
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சாலைத் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 மகிழுந்துகள் மீது மோதியதில் மகிழுந்துகளில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.
- 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து மோதியதில் 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.
கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து சாலை தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியது.
விபத்தை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ௯ பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்
தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.
அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.
திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.
இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
- நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.
காவேரிபட்டணம்:
தருமபுரி மாவட்டம், நூலகஅள்ளி அருகேயுள்ள எம்.சவுளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 12 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வி.கொட்டா என்ற இடத்தில் உள்ள கத்தாழை தொழிற்சாலையில் தங்கி பணிபுரிவதற்காக இன்று காலை ஒரு டிராக்டரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இன்றுகாலை 7 மணி அளவில் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை நிமிர்த்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து நசுக்கியதில் அதில் அமர்ந்து வந்த தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முத்து (வயது20), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி என்ற 3 மாத பெண் குழந்தை, வசந்தி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் புஷ்பா (35), காசி (35), அருண் (18), முருகன் (45), சதீஷ் (21), செல்லம்மாள் (19) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த முனுசாமி மற்றும் 3 மாத பெண்குழந்தை வர்ஷினி ஆகியோரின் உடல்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையிலும், மற்ற உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை நடந்த இந்த கோர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் விபத்தில் சிக்கிய டிராக்டர் மற்றும் பேருந்தை சாலை ஓரமாக போலீசார் அகற்றினர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.






