search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Road Accident"

  • காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
  • லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

  இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

  உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது.

  லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

  மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.

  இவ்வாறு கூறினார்.

  • சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள்.
  • கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  நைரோபி:

  கென்யாவை சேர்ந்த பிரபல நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ (அமெரிக்கா) மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) 2 மணி 35 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2022-ம் ஆண்டு நடந்த வலென்சியா (ஸ்பெயின்) மற்றும் கடந்த ஆண்டு நடந்த லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதித்த 24 வயதான கெல்வின் வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதம் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் அவர் 2 மணி நேரத்துக்குள் பந்தய இலக்கை கடக்கும் நோக்குடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

  இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நேற்று முன்தினம் இரவு பயிற்சியைமுடித்து மாரத்தான் வீரர் கெல்வின் கிப்தும் தனது பயிற்சியாளர் கெர்வாஸ் ஹகிசிமானா (ருவாண்டா) மற்றும் ஒரு இளம் பெண்ணுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி கால்வாயில் இறங்கி பிறகு அருகில் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள். படுகாயம் அடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அந்த நாட்டு அதிபர் வில்லியம் ருடோ, உலக தடகள சங்க தலைவர் செபாஸ்டியன் கோ உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிப்பு.
  • உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

  இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

  8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

  கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

  விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

  மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

  • தென்காசியில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
  • இந்த விபத்தால் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  தென்காசி:

  தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (27), போத்திராஜ் (28), சுப்பிரமணியன் (27), வேல் மனோஜ் (29), முகேஷ் என்ற மனோ (27) இவர்கள் 5 பேரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

  இதில் முகேஷ் என்ற மனோவின் அக்காள் கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன் (27). இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

  இவர்கள் 6 பேரும் நேற்று இரவு குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர். அங்கு அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் மீண்டும் ஊர் திரும்பினர். காரை கார்த்திக் ஓட்டி வந்தார்.

  இதற்கிடையே கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் முருகபாடியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

  இந்நிலையில், லாரி புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிபட்டிக்கும், புன்னையாபுரத்திற்கும் இடையே வந்தபோது எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஷ், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ராஜா மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.

  அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பிரகாசை போலீசார் கைதுசெய்தனர். விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து லாரியில் கேரளாவிற்கு சிமெண்டு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெகு தூர பயணம் என்பதால் இன்று அதிகாலை தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வந்த போது லாரி டிரைவர் பிரகாஷ் கண் அயர்ந்து தூங்கி உள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது பயங்கரமாக லாரி மோதி உள்ளது. இதனால் 6 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

  இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புளியங்குடியில் இன்று அதிகாலை கார்-லாரி நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள்மீது அடுத்தடுத்து மோதியது.
  • தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு சம்பவ இடம் வந்து தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

  கராகஸ்:

  வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

  நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சுமார் 17 வாகனங்கள் மீது மோதியதில் அந்த வாகனங்கள் சேதமடைந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன.

  தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு சம்பவ இடம் சென்று தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

  • கடந்த ஆண்டில் நாடுமுழுவதும் 1.6 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
  • அதிக விபத்துகள் நடந்த மாநிலங்களில் உ.பி. முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது.

  புதுடெல்லி:

  பாராளுமன்ற மக்களவையில் சாலை விபத்துக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியது வருமாறு:

  கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ல் 1,53,972 ஆகவும், 2020ல் 1,38,383 ஆகவும் இருந்தது.

  அதேபோல், 2022-ம் ஆண்டில் 4,61,312 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 2021ல் 4,12,432 சாலை விபத்துகளும், 2020ல் 3,72,181 சாலை விபத்துகளும் நடந்துள்ளன.

  கடந்த ஆண்டு அதிகபட்சமாக உ.பி.யில் 22,595 சாலை விபத்துகள் நடந்தன. இதையடுத்து தமிழகத்தில் 17,884, மகாராஷ்டிராவில் 15,224, ம.பி.யில் 13,427, கர்நாடகாவில் 11,702, டெல்லியில் 1,461 சாலை விபத்துகள் நடந்தன.

  அதி வேகமாக கார் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்துதல், போதையில் வாகனத்தை இயக்குதல், தவறான பாதையிலும், ஒழுங்கீனமாகவும் வாகனங்களை இயக்குதல், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிவதைக் கண்டுகொள்ளாது இருத்தல், ஹெல்மெட், சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருத்தல், வாகனங்களின் மோசமான நிலைமை, மோசமான வானிலை மற்றும் சாலை, வாகனம் இயக்குபவர்கள், சாலையில் நடந்து சென்றவர்களின் தவறு காரணமாக சாலை விபத்துகள் நடந்தன என தெரிவித்துள்ளார்.

  • விபத்தில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
  • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல்.

  தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பேருந்து ஒன்று 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது.

  அப்போது ஹாட் வனாக்கார்ன் தேசிய பூங்கா அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் வேகமாக மோதியது.

  இதில், பேருந்தில் இருந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரிகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பேருந்து ஓட்டுனருக்கு ரத்த மாதிரி சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிகிறோம்.

  உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

  • மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

  நெல்லை:

  நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில், பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டு அங்குள்ள மாநகராட்சி அலுவலக பூங்காவில் அடைக்கபட்டது.

  • ஆட்டோக்குள் இருந்த 8 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

  சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

  இதில், ஆட்டோக்குள் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். ஆட்டோக்குள் இருந்த 8 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இதில், இரண்டு மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • மேலப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

  நெல்லை:

  நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி துணை கமிஷனர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

  மேலும் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.