என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    • பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி காதலித்துள்ளனர்.
    • பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அவரை ப்ளாக் செய்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது செல்போன் நம்பரை பிளாக் செய்ததற்காக காதலன் பிரசாத்தை (25) காதலி ரோஷினி (22) கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை ப்ளாக் செய்துள்ளார்.

    தன்னை பிளாக் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரோஷினியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் கசிந்து பின்னர் உடனடியாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்தது.
    • வீட்டின் உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அதிக அழுத்தம் காரணமாக ஆழ்துளை குழாய் திடீரென உடைந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் தரையில் இருந்து மெதுவாக தண்ணீர் கசிந்து பின்னர் உடனடியாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் நூலிழையில் உயிர் தப்பினார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 'பூனா மார்கம்' (புனர்வாழ்வு) திட்டத்தின் கீழ் சரணடைந்தனர்.
    • சோதி ராஜே மற்றும் மாட்வி புதாரி ஆகியோர் மீது தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.

    நக்சலைட்டுகளின் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களான இவர்கள் மாநிலத்தின் 'பூனா மார்கம்' (புனர்வாழ்வு) திட்டத்தின் கீழ் சரணடைந்தனர் என்று பஸ்தர் காவல்துறைத் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, மாநில அரசின் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வுக் கொள்கையால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாக அந்த நக்சலைட்டுகள் தெரிவித்தனர் என்று கூறினார்.

    சரணடைந்தவர்களில் சோதி ஜோகா பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. டபார் கங்கா மாட்கம் கங்கா, சோதி ராஜே மற்றும் மாட்வி புதாரி ஆகியோர் மீது தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.
    • 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலம் கோர்வா நகரில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான 10 டன் எடையுள்ள இரும்புப் பாலம் ஒன்றை மர்ம நபர்கள் ஒரே இரவில் துண்டு துண்டாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர்.

    40 ஆண்டு பழமையான பாலம் ஜனவரி 16 இரவு 11 மணி வரை அங்கு தான் இருந்தது. ஆனால் மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.

    இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சுமார் 15 பேர் கொண்ட திருட்டு கும்பல், Gas cutter- உபகரணங்களை பயன்படுத்திப் இரவோடு இரவாக பாலத்தை சிறு துண்டுகளாக வெட்டி, லாரிகளில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பாலின் சில இரும்புத் துண்டுகளையும் போலீசார் ர் மீட்டுள்ளனர்.

    முன்னதாக 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
    • இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணதிற்கு சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமணக் கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து, இன்று, ஜார்கண்டின் லாத்தேஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மகுவாடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

    இந்தக் கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.

    இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
    • மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலாடிலா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், அரசுக்குச் சொந்தமான NMDC நிறுவனம் இரும்புத் தாது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    சுமார் 874.924 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் இரும்புத் தாது தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இரும்புத் தாது உற்பத்தியை ஆண்டுக்கு 11.30 மில்லியன் டன்னில் இருந்து 14.50 மில்லியன் டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.

    இந்த விரிவாக்க நடவடிக்கையால் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தார்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் வழங்கும் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது முரணாக பார்க்கப்படுகிறது.  

    • வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
    • இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மேற்கு வங்க தொழிலாளர்கள் 8 பேர் மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 இஸ்லாமியத் தொழிலாளர்கள், ராய்ப்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தனர்.

    நீண்ட நாட்களாகத் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகையை அவர்கள் கேட்டபோது, பேக்கரி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த பஜ்ரங் தளம் அமைப்பினர் வந்து, அவர்களை வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.

    இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாகப் பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   

    • வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
    • அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் சோன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.

    சிறுமியைத் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலுள்ள கோஸ்ரா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.

    சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், பின்னர் ஆதாரங்களை மறைக்க கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    இச்சம்பவம் தொடர்பாகச் 24 வயது இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாக இருந்து வந்தனர். அவர்களை ஒழிக்கும் பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த இரண்டு என்கவுண்டர் சம்பவத்தில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இன்று அதிகளவில் அந்த பகுதிக்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடியான தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு சென்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு என்கவுண்டர் சம்பவத்தில் இருந்து 14 நக்சலைட்டுகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுக்மாவில் நடந்த அதிரடி தாக்குதல் மூலம் கோண்டா பகுதி நக்சலைட்டுகள் குழு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சத்தீஸ்கரில் கடந்த ஆண்டில் 285 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது.இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

    • நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
    • உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரரை, ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள காக்ரா அடிப்படை முகாமில் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் (CAF) 17-வது பட்டாலியன் பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் கௌதம் என்பவருக்கும், மெஸ் கமாண்டராக இருந்த சோன்பீர் ஜாட் என்பவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடங்கிய இந்த மோதல், இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் கடும் மோதலாக மாறியது.

    இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், முகாமின் பாரக் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சோன்பீர் ஜாட்டை, அரவிந்த் கௌதம் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோன்பீர் ஜாட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள், சோன்பீர் ஜாட் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த வீரரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கௌதமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • கொசுவை பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் அந்த இளைஞர் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார்.
    • இதனையடுத்து அந்த இளைஞர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் தன்னை கடித்த கொசுவை பாலித்தீன் பையில் பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

    இளைஞர் ஒருவர் தன்னை கடித்த கொசு டெங்கு கொசுவாக இருக்குமோ என்ற அச்சத்தில் அதனை பிடித்து பாலித்தீன் பையில் அடைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

    இந்த கொசுவை பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் அந்த இளைஞர் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அந்த கொசுவைப் பரிசோதித்ததில், அது சாதாரண கொசு என்பது உறுதியானது. இதனையடுத்து அந்த இளைஞர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, "மாநகராட்சி நிர்வாகம் கொசுக்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது" என எதிர்க்கட்சித் தலைவர் ஆகாஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.

    ×