என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீர்"
- தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.
- ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே. தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால் அழகான, ஒளிரும், மென்மையான சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நம் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்!
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் நன்கு உதவும். தேங்காய் எண்ணெய், சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி, சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பு வழங்கி, ஆரோக்கியமான சரும அமைப்பை மேம்படுத்துகிறது. எண்ணெயை லேசாக சூடாக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். எண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜும் கொடுக்கலாம். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவினால் வறண்ட சருமத்தினருக்கு நல்ல வித்தியாசம் தெரியும். முகம் மென்மையாக இருக்கும்.
கற்றாழை...
பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். கற்றாழை, முகப்பரு மற்றும் சுருக்கத்தை குறைக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை நீக்கி, எப்போதும் முகத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் போதும். 3 நாட்களிலேயே மாற்றத்தை உணர்வீர்கள்.

அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே!
பால்...
பச்சைப்பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். அப்போது முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமம் கிடைக்கும்.
தேன்!
முகப்பரு, தழும்பு, முக வடுக்கள் உள்ளிட்டவற்றை தேன் குறைக்கும். சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். இளமையான தோற்றத்தை தக்கவைக்கும். தேனை அப்படியே எடுத்து கையால் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் ஒரு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும்.
- தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.
- உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.
நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.
அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது. அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.
அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.
- ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
- ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
குளியல் என்பது உடலை தூய்மையாக வைத்திருக்க அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆனால், குளியல் என்றாலே சிலருக்கு பயம் ஏற்படும் நிலையும் உள்ளது. ஏனென்றால் உடலில் தண்ணீர் படும்போது தோல் அரிப்பு தாங்க முடியாது. இந்த நிலைக்கு அக்வாஜெனிக் புரூரிட்டஸ் அல்லது தோல் தினவு என்று பெயர். இது ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான தோல் பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தோலில் தடிப்பு அல்லது நிற மாற்றம் எதுவும் ஏற்படுவது இல்லை. குளித்த உடன் உடலை அரிப்பில் இருந்து மீட்க துணியை கொண்டு நீண்ட நேரம் தேய்த்துக்கொண்டே இருக்கும் நிலைமை காணப்படும்.
இந்நோய் காரணம் குறித்து இதுவரை மருத்துவ உலகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. உடலில் தண்ணீர் பட்டதும், நரம்புகள் ஏன் இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று மட்டும் சொல்லப்படுகிறது. ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதே போல், மன அழுத்தம், தோல் கசிவு, சில மருந்துகள் காரணமாகவும் அரிப்பு அதிகரிக்கலாம். சில வேளைகளில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட்டதும், 'மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்கள் வெளியே வந்து அரிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. இயற்கையின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை. அதில் இதுவும் ஒன்று என மருத்துவ உலகம் கூறுகிறது.
- அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது.
- பெரியாறு அணை 5.2, தேக்கடி 4.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் என 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய் மூலம் லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜெனரேட்டர்கள் மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் அணையின் நீர்மட்டம் 114 அடியாக சரிந்ததால் குடிநீருக்காக மட்டும் 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் நீர் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது. வழக்கம் போல் ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 1844 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அணைக்கு 1713 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது. 5259 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.95 அடியாக உள்ளது. 1484 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 4191 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
பெரியாறு அணை 5.2, தேக்கடி 4.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
- வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று காலை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை அப்படியே மாறியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், ரெயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகர், ஆர்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோவில் வீதி, எல்லைத் தோட்டம் 4-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் ஆர்.எஸ்.புரம் 73-வது வார்டு பி.எம்.சாமி காலனி 2-வது வீதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
இதேபோல் குட்ஷெட் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஐதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 2 விமானங்கள் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானிலேயே வட்டமடித்தது. மழை ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறங்கின. இதேபோல் கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-74, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-47, சின்னக்கல்லார்-42, கோவை தெற்கு தாலுகா-36, வால்பாறை பி.ஏ.பி.-31, வால்பாறை தாலுகா-29, சோலையார் மற்றும் தொண்டாமுத்தூர் பி டபிள்யூ அலுவலகம்-16 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.
கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோடை வெயிலில் அலைந்தால் சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.
அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீர்ப் பையில் சேருகின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீர்ப்பாதை என அழைக்கிறோம்.
இதில் ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்போது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.
இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிடில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சமீப காலமாக அத்தகைய பிரச்சனைகள் பலருக்கு ஏற்படுகிறது. அதிலும், பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
- ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன.
- குளிர்பானத்துடன் மதுவை உட்கொண்டால் சுவை நன்றாக இருக்கும்.
மது பிரியர்கள் ரம், விஸ்கி, ஜின், பிராந்தி எதைக் குடித்தாலும் அதை ஒரு குளிர்பானம் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கிறார்கள்.
சரி, இந்த இரண்டில் எது நல்லது, எது கெட்டது என்பது பற்றி நீண்ட விவாதமே நடத்துகிறார்கள். மதுவில் குளிர்பானம் சேர்ப்பது சுவையை அதிகரிக்கிறது. சர்க்கரை மற்றும் கார்பனேற்றம் ஆல்கஹாலின் கடினத்தன்மையைக் குறைக்கின்றன. எனவே, மதுவை எளிதாகக் குடிக்கலாம்.
ரம், கோக், அல்லது ஸ்ப்ரைட் கலந்த ஓட்கா போன்றவை பிரபலம். ஆனால் இவை சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானவை என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன. மதுவுடன் குளிர்பானங்களை உட்கொள்வது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆய்வுகளின்படி, சர்க்கரை ஆல்கஹால் உறிஞ்சுதலை துரிதப்படுத்துகிறது. இது அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்.
மதுவில் தண்ணீரைக் கலந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மது அருந்துவது நீரிழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தண்ணீர் அதன் செயல்திறனைக் குறைக்கிறது. இது ஆல்கஹாலின் செறிவைக் குறைத்து உடலில் அதன் விளைவைக் கட்டுப்படுத்துகிறது. இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், விஸ்கியுடன் தண்ணீரையோ அல்லது வோட்காவுடன் தண்ணீரையோ கலப்பது ஹேங்ஓவரைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனங்கள் விளக்குகின்றன.
குளிர்பானத்துடன் மதுவை உட்கொண்டால் சுவை நன்றாக இருக்கும். ஆனால் உடல்நலம் விரைவில் மோசமடைய வாய்ப்புள்ளது. ஒரே தண்ணீரை ஒன்றாக எடுத்துக்கொள்வது ஓரளவு நன்மை பயக்கும்.
கூடுதலாக, மதுவை குளிர்பானத்துடன் கலப்பது அதிகப்படியான அளவை ஏற்படுத்தும். இது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது பல பிரச்சனைகளைக் குறைக்கிறது.
மதுவுடன் தண்ணீரைக் கலப்பது ஹேங்ஓவரை 20 சதவீதம் வரை குறைக்கிறது. மதுவை குளிர்பானத்துடன் கலப்பது தற்காலிக இன்பத்தைத் தரும். ஆனால் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தண்ணீர் சிறந்தது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் குடித்துவிட்டு, அதிகமாக குடிக்காமல், தண்ணீரில் கலந்து குடித்தால், உங்கள் உடல்நலம் கட்டுக்குள் இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் உள்ளதால், அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஆற்றில் வர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நீர் நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஆற்றில் வரும் தண்ணீர் ஆகியவற்றை கவனித்து உள்ளூர் மக்கள் விபத்தை தவிர்த்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகி வருவது சோக கதையாக உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிகேசம் பகுதியில் தலை தீபாவளி கொண்டாட வந்த என்ஜினீயர் ஷியாம், ஆற்று நீரில் சிக்கிய தனது மனைவி சுஷ்மாவை காப்பாற்ற முயன்ற போது, தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த சோகம் மறைவ தற்குள் சுற்றுலா வந்த 2 பேர் மற்றொரு சம்பவத்தில் பலியாகி விட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும் நீள மானதுமான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளி யாற்றில் குளித்து வருகின்ற னர்.
சென்னை வியாசர்பாடி சுந்தரம் நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திகேயன் (வயது 30) அவரது நண்பர் நாகராஜ் (30), இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் நாசர் (30), டிராவல் ஏஜென்சி நடத்தும் அஜித் (25) தையல் வேலை பார்க்கும் ராஜீவ் (30), தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கர் (25), ரமேஷ் ஆகிய 7 பேரும் கடந்த 28-ந் தேதி சென்னையிலிருந்து சுற்றுலாவாக குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.
நேற்று மதியம் அவர்கள் குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலம் வந்தனர்.அவர்களில் கார்த்திகேய னுன், நாகராஜ் ஆகி யோர் பரணியாற்றில் குளிப்ப தற்காக இறங்கினர்.
அப்போது வெள்ள த்தில் சிக்கி 2 பேரும் பலியானார்கள். குலசே கரம் தீயணைப்பு அலுவலர் மைக்கேல் தனபாலன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கார்த்திகேயன், நாகராஜ் உடல்கள் மீட்கப்பட்டன.
தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார். மாத்தூர் தொட்டிப்பா லத்தில் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் கூட போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுவது இல்லை. தண்ணீரில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் ஆற்றில் குளிக்க இறங்கி விபத்தில் சிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம். இதனால் தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றுலா பயணி களின் நலனை கருத்தில் கொண்டு இரு காவலர்களை தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதி யில் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டியது அவசியம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதுபோல் பொது ப்பணித்துறை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து எந்த வித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் திறந்து விட்டதால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து. இனிமேலாவது தண்ணீர் திறந்து விடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.
- உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
உடன்குடி:
உடன்குடியில்உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் நல்ல கனமழை பொழிந்து வருகிறது.இந்த நிலையில் வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயநிலங்களை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் கடல்நீர்மட்டம் புகுந்து விடாமல்தடுக்கவும், உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ேபசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அப்போது அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடிகூட்டுறவு சங்க தலைவர் அங்ஸாப் அலிபாதுஷா, உடன்குடிநகர செயலாளரும் உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.
- அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளாக இடுக்கி மாவட்ட பகுதிகள் உள்ளது.
- அணை முழுமையாக நிரம்பும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தாராபுரம்:
கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அமராவதி அணை நிரம்பும் நிலை எட்டியதை அடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக 12 ஆண்டுகளில் இல்லாத அளவு அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மொத்தம் 90 அடி நீர் தேக்கும் வகையில் 4.04 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளாக இடுக்கி மாவட்ட பகுதிகள் உள்ளது.
வழக்கமாக இந்த அணை தென் மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் தொடங்கியதும் அணை நிறைந்து விடும். இதனால் ஜுன், ஜுலை மாதத்தில் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டு விடும். தற்போது வடகிழக்கு பருவமழை சில நாட்களாக பெய்து வரும் நிலையில், அணை முழுமையாக நிரம்பும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
அதேபோல் பழனி மலைத்தொடரில் உற்பத்தியாகும் துணை ஆறுகளாக உள்ள வரதமாநதி, குதிரையாறு, பொறுதலாறு, சண்முகா நதி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமராவதி ஆற்றுடன் தாராபுரம் அருகே ஒன்றாக கலக்கிறது. இந்த ஆறுகளில் வந்த தண்ணீருடன் அமராவதி ஆற்றின் உபரி நீரும் சேர்ந்து செல்கிறது. இதன் காரணமாக புதுப்பை அருகே உள்ள மாரியம்மன் கோவிலின் சுற்றுச்சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மேலும் கொங்கர் பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து மயில் ரங்கம் பகுதியை சேர்ந்த சின்னுசாமி கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இருகரைகளையும் தாண்டி இங்குள்ள கோவில் சுவற்றை தொட்டபடி வெள்ள நீர் சென்றது. தற்போது 12 ஆண்டுகள் கடந்து தற்போது இந்த அளவுக்கு தண்ணீர் செல்வதாக தெரிவித்தார்.
- கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
- சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.
இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.
- ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
- பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
முள்ளியாற்றில் பிரிந்து கட்டிமேடு முதல் ஆதிரெங்கம் வரை 7-கிமீ தூரம் கொண்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் வடிய வழியின்றி வாய்க்காலின் கரைகளை தாண்டி செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரனிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செடிகளை எந்திரம் கொண்டு அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
பணியின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன்,துணைத்தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், ஊராட்சி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் உடன் இருந்தனர்.






