search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "break"

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகியது.

    இதனை அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் பம்ப் செய்வதை உடனடியாக நிறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தது.

    அவ்வழியே சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது .

    உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாலை 4 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் நீர் திறந்து விடப்பட்டது.

    குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான நிலையில் உள்ள ராட்சத குழாய்களை மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருச்சி மலைக்கோட்டை அருகே மாநகராட்சியின் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டது
    • குடிநீர் தொட்டியை உடைத்ததாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

    திருச்சி,

    திருச்சி வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகர தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர். இவரது வீட்டு அருகே மாநகராட்சி குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சரவணனும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து உடைத்ததாக கூறப்படுகிறது . இது குறித்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் ரவி காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வரகனேரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன், மலைக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.திருச்சி மாநகராட்சி குடிநீர் தொட்டியை திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சமயபுரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது
    • உடைப்பின் காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகியது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி நெம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பிச்சாண்டார்கோயில், பளூர், பணமங்கலம், கூத்தூர், ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர் பகுதியில் கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இந்த குழாயில் இருந்து பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் சகிரா என்பவர் நேற்று மாலை, வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திரு ந்த ரூ.91 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் கடைக்கு வெளியேயும், உள்ளேயும் இருந்த சி.சி.டி.வி. காமிராக்க ளையும் கொள்ளையர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ள னர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.
    • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழி சாலையில் உள்ள மணலூரில் குழாய் விரிசல் காரணமாக தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    மணலூர் வைகை ஆற்றுப்படுகையில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் தினமும் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீரேற்று நிலையம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

    ஊழியர்கள் மரகுச்சிகளை வைத்து சரி செய்தனர். தற்போது குடி நீரேற்று நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மீண்டும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பனை மர உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. நான்கு வழிச்சாலையை ஒட்டி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறியதை பார்த்து பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன்பின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாகியதாக தெரிகிறது.

    கோடை உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது41). இவர் புது சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25 -ந் தேதி இரவு பாலகிருஷ்ணன் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அவர் கடையை திறக்க வில்லை. அன்று இரவு அவரது கடையின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த பேண்ட், சட்டை உள்ளிட்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி.
    • சாலை ஓரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி தொடக்கம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை என தெரிவித்தனர் வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இங்கு தற்போது ஜந்து ஆயிரம்மண் மூட்டையில் தயார் செய்யப்பட்டு சாலை ஓரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
    • அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்து இரவு கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி பாபு கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
    • நீரேற்று நிலையங்கள் தயார்படுத்தும் பணி ஆகியன பெருமளவு நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 4வது குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இதில் மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து குடிநீர் கொண்டு வந்து வினியோகிக்கும், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.பிரதான குழாய்கள் பதிப்பு பணி, சுத்திகரிப்பு மையம் மற்றும் நீரேற்று நிலையங்கள் தயார்படுத்தும் பணி ஆகியன பெருமளவு நிறைவடைந்துள்ளது.இப்பணிகள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். தற்போதுள்ள பணிகள் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும் 4வது குடிநீர் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைவுபடுத்தி வருகிற 15-ந் தேதி வெள்ளோட்டம் நடத்தும் வகையில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிப்பு பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இப்பணியின் போது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.தெரு விளக்குகள் புதிதாக பொருத்துதல், பழுதான விளக்குகள் உடனுக்குடன் மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

    ×