கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

சமயபுரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதுஉடைப்பின் காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகியது
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
Published on

மண்ணச்சநல்லூர்,

திருச்சி நெம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பிச்சாண்டார்கோயில், பளூர், பணமங்கலம், கூத்தூர், ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர் பகுதியில் கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இந்த குழாயில் இருந்து பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com