என் மலர்
நீங்கள் தேடியது "statue"
- ரோந்து சென்ற போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலி சாமி சிலை மற்றும் மரகத கற்களை விற்க முயன்ற கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
தேனியை அடுத்த அரண்மனைபுதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த பொருட்களை சோதனை நடத்தினர். அப்போது ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சாமி சிலையும், பச்சை நிறத்தில் கற்களும் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் எழுமலை ஆத்தங்கரை பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த சுருளி மகன் தங்கமணி (வயது 41). எம்.கள்ளுப்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சம்பழகு (29). விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு கூமாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (35) என தெரிய வந்தது. இவர்கள் தங்களிடம் உள்ளதை ஐம்பொன் சிலை மற்றும் மரகத கற்கள் என கூறி தேனியில் உள்ள சிலரிடம் விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலை பழமையான தோற்றத்துடன் காணப்பட்டதால் இந்த சிலை அவர்களுக்கு எப்படி கிடைத்தது? என விசாரித்தனர். புத்தர் வடிவில் இருந்த இந்த சிலையை அவர்களாகவே தயாரித்து ஐம்பொன் சிலை என்றும், இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தேனி சுக்குவாடன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டவர் (வயது 47) என்பவர் கடவுள் பக்தி மிகுந்தவர் என்பதால் சுவாமி சிலைகளை வாங்க விரும்பியுள்ளார். அவரிடம் டிரைவராக வேலைபார்த்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மூலம் மேற்படி நபர்கள் சாமி சிலை மற்றும் போலி மரகத கற்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
இதற்காக குறிப்பிட்ட தொகையை வாங்கி விட்டு சாமி சிலை மற்றும் போலி மரகத கற்களை விற்க வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தங்கமணி, பாலமுருகன், சம்பழகு, டிரைவர் சிவா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரவிந்திரன் (50), திண்டுக்கல் சாணார்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் போலி சாமி சிலை மற்றும் மரகத கற்களை விற்க முயன்ற கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கும்பல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்னர்.
- திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி சிலையை மாணவன் உடைத்தான்
- சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து இரண்டு போலீசார் மஃப்டி உடையில் சென்றனர்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் 10 ஆம் வகுப்பு தேர்வில் ஃபெயில் ஆனதற்கு கடவுள் தான் காரணம் என்று மாணவன் சாமி சிலையை உடைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி கடவுள் சிலையை உடைத்தாக 17 வயது சிறுவன் மீது போலீசார் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் குறித்து பேசிய போலீஸ், 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பரீட்சையில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததால் அடைந்த சிறுவன் விரக்தியில் இருந்துள்ளான், தனது தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று கருதிய சிறுவன் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள புவனேஸ்வரி சிலையைக் கீழே தள்ளி உடைத்துள்ளான்.

சிலை உடைந்து கிடப்பதை கோவில் பூசாரி சில மணி நேரங்கள் கழித்து கவனித்துள்ளார். எனவே போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சிறுவன் ஒருவன் சிலையை உடைத்ததை கண்டறிந்தனர்.
சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து மஃப்டி உடையில் சென்ற இரண்டு போலீசார் சிறுவனை கஸ்டடியில் எடுத்து சிறார் நீதி மையத்தில் ஒப்படைத்தனர்.
- சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸ்கந்தர் உலோகச் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஏசியன் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன், சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இணையதளங்களில் ஆய்வு செய்து குறிப்பிட்ட சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இருப்பதை உறுதி செய்தனர். அந்த சிலையின் படமும் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அந்த சிலையில் தெலுங்கிலான எழுத்துகள் காணப்பட்டது. அந்த எழுத்துகளை படித்து பார்த்த போது அந்த சிலை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த சிலை கி.பி. 1500 முதல் 1600-க்குள் செய்யப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது. அந்த சிலையை தொண்டைமண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி என்பவர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு கொடுத்துள்ளார் என்பதும் சிலையில் காணப்பட்ட எழுத்துகள் மூலம் தெரிய வந்தது.
அந்த சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் யாரோ அந்த சிலையை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து திருடி அமெரிக்காவுக்கு கடத்தி சென்று கோடிக்கணக்கான விலைக்கு விற்றுள்ளனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்டு கொண்டு வருவதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலை விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
- நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.
கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.
இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.
- வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் அனுசரிப்பு
- சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மத்திய இணை மந்திரி முருகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார், செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், ரிச்சர்ட் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் புதிய நீதி கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.
- பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
- காங்கிரஸ் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாத துளசியய்யா வாண்டையார் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, மாவட்ட ஊடகப்பிரி வுத்தலைவர் பிரபு மண்கொண்டார், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், கலைஇலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்டி.யூ.சி. மணிவாசகம், 7-வது வார்டு செயலாளர் பாபுஜீ, வெங்கட், ராஜூ, வீணை கார்த்திக், சரவணன், மாரியம்மன் கோவில் ராமமூர்த்தி, பின்னையூர் ரவிச்சந்திரன், ரஞ்சித், ரவி, முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார்.
- தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை:
ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் 15.11.1869 அன்று பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கி உள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இந்தக் குடி நீர்ப்பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார்.
அவரை போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையினை நாளை காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
- பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் ஒன்று
- மிகவும் அழகுற, தத்ரூப மாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த சிலையை பக்தர்கள் வருகிற 5-ந் தேதி வரை பார்வையிடலாம்.
திருச்சி
பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில். சைவத் திருத்தலங்களில் மிக முக்கி யமான தலமாக விளங்கும் இக்கோவிலில் எப்போதும் பக்தர்கள் வருகை நிறைந்து இருக்கும். சிவனை வழிபடப் பூலோகம் வந்த அம்பிகை காவேரியில் நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார் என்றும், நீரால் ஆனதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றது என்கி றது புராணம்.
சக்திவாய்ந்த நீர் தலமாக விளங்கும் இங்கு ஜம்பு கேஸ்வரர், அகிலாண் டேஸ்வரி அம்மன் ஆகியோர் பிரதான தெய்வங்களாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற னர்.
இங்குள்ள அகிலர்டேஸ் வரி அம்மன் சந்நிதி வளாகத் தில் புதிதாக 7 அடி உயரத் தில் பைபரால் ஆன அகிலாண்டேஸ்வரி அம் மன் சிலை ஒன்று வைக்கப் பட்டுள்ளது. பந்தல் அமைத்து, வண்ண விளக்கு களால் அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. இதை பக்தர் கள் வியப்புடன் பார்வை யிட்டு வணங்கி செல்கின்ற னர்.
மிகவும் அழகுற, தத்ரூப மாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த சிலையை பக்தர்கள் வருகிற 5-ந் தேதி வரை பார்வையிடலாம். அதன் பின்னர் பாதுகாப்பு டன் எடுத்து வைக்கப்பட்டு ஆண்டுதோறும் ேகாவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சிப்படுத்தப் படுத்தப்பட உள்ளது.
சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அண்மையில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது அமைக்கப் பட்டிருந்த கொலுக் காட்சி யில், மாங்காடு காமாட்சி யம்மன், மதுரை மீனாட்சி யம்மன், பட்டீஸ்வரம் துர் கையம்மன், திருவானைக்கா வல் அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்ளிட்ட தமிழ கத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சக்தி தலங்களில் உள்ள 9 அம்மன் சிலை களின் மாதிரிகள் பைபரால் செய்யப்பட்டு, காட்சிப்படுத் தப்பட்டன.
நவராத்திரி திருவிழா நிறைவு பெற்ற பின்னர், அந்த சிலைகள் தொடர்பு டைய கோவில்களுக்கு அனுப்பப்பட்டன. அதன் படி எடுத்துவரப்பட்ட திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சிலையைதான் இந்த சிலை.
- மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
- சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுவாமிமலை:
சுவாமிமலையில் உள்ள உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி க்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துச்செல்வன் தலைமை தாங்கினார்.
இதில் தஞ்சை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரும், சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக செயல் ஆட்சியருமான விஜயகுமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறி யாளர் கார்த்திகேயன், சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்ர மணியம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. பேரூர் துணை செயலாளர் கோபால், சுவாமிமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவ. ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரை குணாளன், ஜெமினி, லட்சுமி பிரியா மற்றும் சம்பத் சுப்பிரமணியன், கோபால் மற்றும் சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
- விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மேல விசலூர் நாகரசம்பேட்டை வாய்க்கால் சீரமைக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக குழி தோண்டிய போது, மேலவிசலூர் தெற்கு தெருவை சேர்ந்த செல்வமணி என்பவர் வீட்டின் பின்புறம் 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து செல்வமணி விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பூமா ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.
பின்னர், பொதுமக்கள் முன்னி லையில் சிலை அவர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீனி கடை முக்கம், தென்னகர், சடையன் தெரு, பேருந்து நிலையம், நரங்கியப்பட்டு, உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதை தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்ப ட்டிருந்த விநாயகர் சிலை கள் தாரை தப்பட்டைகள் முழங்க கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றடைந்தன.
பின்னர் அங்கிருந்து சிலைகளின் ஒன்றுபட்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்துக்களின் ஒற்றுமை எழுச்சி ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை பாஜக மற்றும் இந்து முன்னணி மாநில மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்து பேசினார்கள்.
இந்த ஊர்வலம் சீனி கடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டார தெரு, கடைவீதி, பள்ளிவாசல் வீதி, பேருந்து நிலையம், கச்சேரி வீதி, புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று திருமணஞ்சேரி அக்கினி ஆற்றை அடைந்தது.
பின்னர் விழா குழுவினர்கள் பூஜைகள் செய்து ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தினால் கறம்பக்குடியில் நேற்று மாலை 3 மணி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.