search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bell hall"

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைய வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்ட பம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், இமானுவேல் சேகரனாருக்கு அவரின் தியாக உணர்வை போற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன டிப்படையில் மணிமண்டபம் அமையவுள்ள இடம் பார்வையிடப் பட்டுள்ளது.

    நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்குரிய அனுமதியினை பெற்று விரைவில் பணிகள் நடை பெறும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

    பின்னர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபு ரம் தி.மு.க மாவட்ட செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், கூடுதல் இயக்குனர் தமிழ் செல்வ ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் கலெக்டர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர சபை தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அஜிதா பர்வீன்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜய குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், தி.மு.க. விவசாய அணி மாநில துணைச் செயலாளரும்,

    முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருக வேல் மற்றும் இமானுவேல் சேகரனாரின் மகள் சுந்தரி பிரபா ராணி,தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிலை

    மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.

    அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.

    கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.

    கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் காடுவெட்டி ரவிஷங்கர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்களை எழுத்தர் வெங்கடாசலம் வாசித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் குறித்து கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசினர்.

    கூட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும், ஆடி திருவாதிரை விழா நடத்த அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொடர்ந்து ஆடி திருவாதிரை திருவிழா நடத்த வேண்டும்,

    பெயர் மருவி ஜெயங்கொண்டம் என்று அழைக்கப்படுவதை மீண்டும் ஜெயங்கொண்ட சோழபுரம் என அனைத்து துறை அலுவலகம் பொதுமக்களிடத்தில் மீண்டும் அழைக்கப்பட வேண்டும் மற்றும் அலுவலக செலவினங்கள் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரித்திவிராஜன், நடராஜன், ராஜசேகர், சிவக்குமார், செந்தமிழ்ச்செல்வி, ராஜேஸ்வரி, சீதை உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் தாமோதரன், நடராஜன், குமார், சி பி ராஜா ஆகிய பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய மேலாளர் முருகானந்தம் நன்றி தெரிவித்தார்.

    ×