search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் - ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் - ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

    • ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் காடுவெட்டி ரவிஷங்கர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்களை எழுத்தர் வெங்கடாசலம் வாசித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் குறித்து கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசினர்.

    கூட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும், ஆடி திருவாதிரை விழா நடத்த அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொடர்ந்து ஆடி திருவாதிரை திருவிழா நடத்த வேண்டும்,

    பெயர் மருவி ஜெயங்கொண்டம் என்று அழைக்கப்படுவதை மீண்டும் ஜெயங்கொண்ட சோழபுரம் என அனைத்து துறை அலுவலகம் பொதுமக்களிடத்தில் மீண்டும் அழைக்கப்பட வேண்டும் மற்றும் அலுவலக செலவினங்கள் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரித்திவிராஜன், நடராஜன், ராஜசேகர், சிவக்குமார், செந்தமிழ்ச்செல்வி, ராஜேஸ்வரி, சீதை உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் தாமோதரன், நடராஜன், குமார், சி பி ராஜா ஆகிய பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய மேலாளர் முருகானந்தம் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×