search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stadium"

    • பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ஆர்சிபி அணியின் தீவிர ரசிகை.
    • இவர் ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார்.

    பெங்களூரு:

    பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகை ஆவார்.

    கடந்த 2ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார். அலுவலகத்தில் இருந்த அவர் அவசர அவசரமாக பேமிலி எமர்ஜென்சி என மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு புறப்பட்டார். அவர் கேட்ட பர்மிஷனை உண்மை என நம்பிய மேனேஜர் அவரை வீட்டுக்கு அனுப்பினார்.

    சில மணி நேரத்தில் தற்செயலாக டிவியைப் பார்த்த மேனேஜர் அதிர்ச்சி அடைந்தார். நேஹா திவேதி ஐபிஎல் போட்டியைப் பார்க்க தான் இப்படி அவசரமாக சென்றார் என்பது தெரியவந்தது.

    டி.வி.யில் நேஹாவைக் கண்ட மேனேஜர், நேஹா நீங்கள் ஆர்சிபி விசிறியா என கேட்க, அவர் ஆமாம் என கூறியிருக்கிறார். அப்போது உங்களை டி.வி.யில் சோகமான முகத்துடன் பார்த்தேன் என்றதும்தான் நேஹாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

    இதுதொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ரீல்ஸ் பதிவு 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 4 ஆயிரம் பேர் இதை லைக் செய்திருக்கின்றனர்.

    தில்லுமுல்லு படத்தில் ரஜினிகாந்த் லீவு போட்டு மேட்ச் பார்க்கச் சென்ற சம்பவம் போல் இருப்பதாக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    • திருவரங்குளம் ஊராட்சியில் ரூ.3 கோடி செலவிலான புதிய மினி ஸ்டேடியம் சிறந்த பசுமை மைதானமாக அமைக்கப்படும்
    • சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சியில் புதிய மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய மினிஸ்டேடியம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

    200 மீட்டர் 400 மீட்டர் ஓட்டம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானம் 6 ஏக்கர் பரப்பளவில் இங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.3கோடி நிதி ஒதுக்கி உள்ளார். விரைவில் மினி ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    எதிர்பார்த்ததை விட சிறப்பாக பசுமை மைதானமாக இந்த மைதானம் அமைக்கப்படும். மிகப்பெரிய வெற்றிகளையும் பதக்கங்களையும் பெற்று இந்த மண்ணிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வீரர் வீராங்கனைகளை இந்த மைதானத்தில் இருந்து அனுப்புவோம்

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா, திருவரங்குளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அருண்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
    • விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

    கோவை,

    கோவை வ.உ.சி. மைதானம் அருகே நேரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

    இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் இருந்தது. கடந்த 2008-ல் அமைக்கப்பட்ட ஓடுதளம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஓடுதளத்தை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. மேலும் விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

    சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தடிக் ஓடுதளம் பாதையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், தடகள விளை யாட்டு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சிந்தடிக் ஓடுதளம் தங்களின் பயிற்சி மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நேரு விளையாட்டு அரங்கின் ஓடுதளம் மற்றும் மைதானம் ஆகியவற்றை சீரமைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர்கள் கூறினர்.  

    • இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மும்பை:

    இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில ஆட்டங்கள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசாருக்கு இ-மெயிலில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையெனில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரபல தாதாவான லாரன்ஸ் பிஸ்னோய் தற்போது டெல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது ஆட்கள் இந்த மிரட்டலை இ-மெயிலில் அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேசிய கைப்பந்து போட்டி நடந்தது.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    நாகப்பட்டினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வித்துறை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்து நடேஷ், நிதீஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வாகினர். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் கிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமையாசிரியர் கண்ணன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பொன்னியின் செல்வன், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • கண்காட்சி வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
    • கண்காட்சி நடைபெற உள்ள இடத்ைத அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

    கோவை

    கோவை வ.உ.சி மைதானத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைபடகண்காட்சி சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் நடைபெற உள்ளது.

    வ.உ.சி மைதானத்தில் வருகிற 7-ந் தேதி இந்த புபைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.

    கண்காட்சியானது வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. புகைப்பட காண்காட்சியை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் இன்னும் முடிவாகவில்லை.

    இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது. இதில் கோவைக்கு முதல்-அமைச்சர் கொடுத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரபடுவார்களா? என்ற கேள்விக்கு, யாரையும் கட்டாயபடுத்தி அழைத்து வருவதில்லை. விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள்.

    மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த ப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

    இதில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகு பந்து விளையாடுவதற்காக விளையாட்டு அரங்கப் பணிகளை நடபெறுகிறது.
    • பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகுபந்து விளையாடுவதற்காக நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்கப் பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது பணிகள் முடிவடைந்து விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம் என்று இருவரும் கூறினர். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


    • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
    • ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

    அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
    • வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் மாதிரிபுகைப்படத்தினை அரசுக்கு அளித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில், 2021- 2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்டும் வகையில் தஞ்சையிலிருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்நாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

    மேலும் மேற்படி அரங்கம் மற்றும் சிலை அமைத்திட ஏதுவாக, 2021-2022ம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை திருப்பூர் கலெக்டர் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மைதலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைத்திட நிர்வாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூ. 2கோடியே 60லட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கியுள்ள முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம், தளி-2 கிராமம், மஜரா திருமூர்த்தி நகர், பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.80.98 ஹெக். நிலத்தினை தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு அரங்கம் அமைத்திடவும்,உருவச்சிலையினை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் அமைத்திட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு முன்நுழைவு அனுமதி வழங்கியும் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிபுகைப்படத்தினை, இணைத்தனுப்பி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார்.மேலும் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2.53,26,974 க்கு நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    ×