என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bomb attack"
- செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீடு குறிவைக்கப்பட்டது.
- இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததார்.
பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சேதம் ஏதும் பதிவாகவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நேதன்யாகு வீட்டை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேதன்யாகு வீட்டின் தொட்டப் பகுதி திடீரென தீப்பிடித்து பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த சம்பவம் நடக்கும்போது, நேதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.
⚡︎ WATCH FIRE IGNITING IN NETANYAHU'S RESIDENCE Flame rage as flares are chucked by unknown people at Israeli PM home in Caesarea, landing right in his yard.Israeli intelligence investigating incident described as serious escalation, Justice Minister Levin claims linked to… pic.twitter.com/ym4XPrGe6o
— Infinitum (@InfinitumZ) November 17, 2024
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததுடன், பொதுவெளியில் வன்முறை அதிகரித்து இருப்பதற்கு எதிராக கடும் எச்சரிக்கையும் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதல் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.
- முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
- சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
சோழவரம்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் கோட்டைமேடு காலனி கென்னடி தெருவில் வசித்து வருபவர் ஜெகன் (வயது 38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அபிஷாபிரியாவர்ஷினி (33) சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
நேற்று மாலை முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த ஜெகன் வெளியே வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே தப்பி சென்ற அதே மர்ம கும்பல் சோழவரம் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்திற்கு சென்று அங்கு வேலை செய்து வரும் சோழவரம் கோட்டைமேடு காலனியை சேர்ந்த லாரி டிரைவர் சிவா (30) என்பவரிடம் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் கையில் வெட்டி விட்டு லாரி நிறுத்தும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.
தொடர்ந்து ஆங்காடு ஊராட்சியில் உள்ள சிறுணியம் காலனி கெங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வியாபாரி சரண்ராஜ் (38) என்பவர் கார் கண்ணாடிகளை உடைத்து கலாட்டா செய்தனர். சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் சோழவரம் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி அரசியல் பிரமுகர், வியாபாரிகளை அச்சுறுத்தி மாமூல் பெறும் நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சோழவரம், சிறுணியம் ஆகிய பகுதிகளில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்தி உள்ளது.
- காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.
- பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷம்.
- பிடிப்பட்ட வினோத் ஏற்கனவே பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியவர் என தகவல்.
சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது. பிடிப்பட்ட வினோத்திடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கடுக்காக வினோத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிடிப்பட்ட வினோத் கடந்த 2022ல் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டார்.
மேலும், கமலாலயம் மீது குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான் என வினோத் அப்போது வாக்குமூலம் அளித்திருந்தார்.
அண்ணாமலை, தனக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை போலீசாரிடம் வினோத் ஒப்படைத்திருந்தார்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன் கூடுதல் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலிய பாதுகாப்பு படை துல்லியமாக தாக்குதல்கள் நடத்தி வருகிறது
- 2002 முதல் மொஹம்மத் டெய்ஃப் ஹமாஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வருகிறார்
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி உடனடியாக இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது.
போர், ஐந்தாம் நாளான இன்றும் தீவிரமாக தொடர்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (Israeli Defence Force) தாக்குதல்கள் துல்லியமாக திட்டமிடப்பட்டு காசா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருந்த இடங்கள், அவர்களின் ஆயுத கிடங்குகள், பயங்கரவாதிகளின் செயலாக்கங்களுக்கு திட்டம் தீட்டப்படும் இடங்கள், பீரங்கி தாக்குதல் கட்டுப்பாட்டு தளங்கள் உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய மையமாக விளங்கும் அல் ஃபர்கான் (Al-Furqan) பகுதியில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் மொஹம்மத் டெய்ஃப் எனும் பயங்கரவாதியின் தந்தையின் இல்லமும் அடங்கும்.
இத்தாக்குதலில் அவரது சகோதரர், தந்தை, குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கிய குறைபாடு காரணமாக சக்கர நாற்காலியில் வலம் வரும் நபரான டெய்ஃப், 2002 முதல் ஹமாஸ் அமைப்பிற்கு பயங்கரவாத திட்டங்களை வகுத்து தருவதில் முன்னிலை தலைவராக உள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினரால் தேடப்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளில் முக்கிய நபரான டெய்ஃப் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.
- வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார்.
- எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணன்.
இவர் நேற்று மாலை கட்டம்தண்டா பஞ்சாயத்து குட்பட்ட கல்வி தண்டா பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து பொது கூட்டங்களில் பேசினார்.
பின்னர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார். டெட்டனெட்டர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காரின் மீது குண்டு வீசிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பதும் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் மற்றும் டெட்டனேட்டர் ஆபரேட்டராக செயல்பட்டது தெரியவந்தது.
கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை:
இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில ஆட்டங்கள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசாருக்கு இ-மெயிலில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையெனில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல தாதாவான லாரன்ஸ் பிஸ்னோய் தற்போது டெல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது ஆட்கள் இந்த மிரட்டலை இ-மெயிலில் அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
- முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப் பட்டது. கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுைவ மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு ெமயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளி ரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங் கர சத்தம் கேட்டது. முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சீலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தூக்கணாம் பாக்கம் ேபாலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகா னந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார். உங்கள் குடும்பத்தின ருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என் பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபு ணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக் காக எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகா னந்தம் வீட்டுக்கு வந்த வர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என் பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசா ரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து நாட்டு வெடி குண்டு வீசியது தெரிய வந்தது. போலீஸ் விசாரணை யில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. முருகா னந்தம் மகளை பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது முருகானந்தத்துக்கு தெரிய வந்ததும், அவர் அந்த வாலிபரை கண்டித்துள் ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தத்தை மிரட்டுவதற்காக அவரது வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.இந்த வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்திய போது யூடியூப்பை பார்த்து தாங்களே செய்ததாக தெரிவித்தனர். அவர்களி டம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள் ளது.
- பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.
- வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து தெரியவந்தும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.
இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஒடிசாவை சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
- பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் காரைக்குடி டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரிந்தார். அப்போது கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்த அர்ச்சுனன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்த அர்ச்சுனனின் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அர்ச்சுனன் படத்திற்கு மாலை மரியாதை செலுத்தினார். தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோ லையை அர்்ச்சுனன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
மேலும் முதலமைச்சர் அறிவிப்பின்படி அர்ச்சுனன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மிரட்டல் கடிதம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மும்பை:
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இ-மெயில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
இக்கடிதத்தை அனுப்பிய நபர், தான் தலிபான் என்றும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் மும்பையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
மிரட்டல் கடிதம் குறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் தீவிர சோதனையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
மும்பைக்கு தீவிரவாத மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் கேட்டு கொள்ளப்பட்டனர்.
இதையடுத்து முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் மும்பை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை நடந்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தான் மும்பைக்கு தலிபான்கள் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்