ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் வீட்டில் குண்டு வீச்சு: உறவினர்கள் பலி

இஸ்ரேலிய பாதுகாப்பு படை துல்லியமாக தாக்குதல்கள் நடத்தி வருகிறது2002 முதல் மொஹம்மத் டெய்ஃப் ஹமாஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வருகிறார்
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் வீட்டில் குண்டு வீச்சு: உறவினர்கள் பலி
Published on

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி உடனடியாக இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது.

போர், ஐந்தாம் நாளான இன்றும் தீவிரமாக தொடர்கிறது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (Israeli Defence Force) தாக்குதல்கள் துல்லியமாக திட்டமிடப்பட்டு காசா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருந்த இடங்கள், அவர்களின் ஆயுத கிடங்குகள், பயங்கரவாதிகளின் செயலாக்கங்களுக்கு திட்டம் தீட்டப்படும் இடங்கள், பீரங்கி தாக்குதல் கட்டுப்பாட்டு தளங்கள் உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய மையமாக விளங்கும் அல் ஃபர்கான் (Al-Furqan) பகுதியில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் மொஹம்மத் டெய்ஃப் எனும் பயங்கரவாதியின் தந்தையின் இல்லமும் அடங்கும்.

இத்தாக்குதலில் அவரது சகோதரர், தந்தை, குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரோக்கிய குறைபாடு காரணமாக சக்கர நாற்காலியில் வலம் வரும் நபரான டெய்ஃப், 2002 முதல் ஹமாஸ் அமைப்பிற்கு பயங்கரவாத திட்டங்களை வகுத்து தருவதில் முன்னிலை தலைவராக உள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினரால் தேடப்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளில் முக்கிய நபரான டெய்ஃப் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com