இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்.. பற்றி எரிந்த தீ - பரபரப்பு வீடியோ

செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீடு குறிவைக்கப்பட்டது.இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்..   பற்றி எரிந்த தீ - பரபரப்பு வீடியோ
Published on

பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சேதம் ஏதும் பதிவாகவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நேதன்யாகு வீட்டை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேதன்யாகு வீட்டின் தொட்டப் பகுதி திடீரென தீப்பிடித்து பற்றி  எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த சம்பவம் நடக்கும்போது, நேதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததுடன், பொதுவெளியில் வன்முறை அதிகரித்து இருப்பதற்கு எதிராக கடும் எச்சரிக்கையும் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதல் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com